Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பேன் - கோட்டாபய உறுதி


அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதல்கட்டமாகப் பேசியுள்ளேன். இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. பேச்சுக்கள் தொடரும்,

தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நான் தீர்வுகளைக் காண்பேன். இது எனது கடமை. புலம்பெயர் தமிழர்களுடனும் நான் பேசத் தயாராகவுள்ளேன். நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments