எரிபொருள் தட்டுப்பாடு இலங்கையில் பொதுப் பேருந்து சேவைகள் கடுமையாக பாதித்துள்ளது.
இதேவேளை, நீண்ட தூர பேருந்து சேவைகள் இன்று முதல் முற்றாக தடைப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் நாளை முதல் சேவைகளை வழங்குவதைத் தவிர்ப்பதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.
எந்தவொரு ஆதரவும் கிடைக்காத போதிலும் மாணவர்களின் பரீட்சை மற்றும் கல்வி போன்றவற்றை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் என்.எம்.கே ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.
இதன்படி, இன்று எரிபொருள் தொடர்பான தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் எச்சரித்தார்.
எவ்வாறாயினும், வழமையான கால அட்டவணையின்படி பேருந்து சேவை இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்
0 Comments