Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தாந்தாமலை ஶ்ரீ முருகன் ஆலய திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி

எஸ்.சதீஸ்)
கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற மட்டக்களப்பு ஶ்ரீ தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 14ம் திகதி செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தாந்தாமலை ஶ்ரீ முருகப்பெருமானின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் மாதம் 4ம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஆலயத்தில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் முகமாக திருவிழாக் காலங்களில் பக்தர்கள் கலந்துகொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான சனிக்கிழமை மாலை தாந்தாமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தின் நிர்வாக சபையினர் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமது கருத்துக்களை வௌியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆலயத்தில் இவ்வருடம் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இவ்வருடம் பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வராமல் வீட்டில் இருந்து முருகப் பெருமானை தரிசிக்குமாறும் கேட்டுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட அளவை மீறி பக்தர்கள் வரும் பட்சத்தில் தமது நிருவாகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பப்படுவர் என்பதையும் பக்தர்களுக்கு மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments