(லியோன்)
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் தேர்த்திருவிழா பொலிஸ், இராணுவத்தினர் பாதுகாப்புடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவத்தின் தேர்த்திருவிழா ஆலய நிர்வாக வண்ணக்கர் சபையின் கட்டுப்பாட்டுக்கு அமைவாக இன்று நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக சுகாதார சட்ட திட்டங்களுக்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஆலய நிர்வாக வண்ணக்கர் சபைக்கு அறிவிக்கப்பட்டதுக்கிணங்க மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவ தேர்த்திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்த அடியார்கள் அனுமதிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது.
ஆலய வளாகத்தினுள் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தே அனுமதிக்கப்பட்டதுடன் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி மஹோற்சவம் கடந்த ஐந்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயப்பிரதம குரு சிவசிறி ஆதி சௌந்தரராஜா குருக்கள் தலைமையில் தினமும் தம்ப பூஜை , வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா நடைபெற்று இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூசை மற்றும் அபிசேக பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று ஆலய மஹோற்சவம் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.
இலங்கையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்த சிறப்பு பெற்ற ஆலயமாக பிரசித்திபெற்றுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நாளை ஆடி அமாவாசை தினத்தன்று உறவுகளை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்துவதோடு, நாளை நண்பகல் தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்தில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

0 Comments