ரஷ்யாவின் போர்க் கப்பலிலிருந்து உக்ரைன் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்திய காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவம் சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
அதேவேளை, உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, கடலில் இருந்து படி போர்க் கப்பலிருந்து உக்ரைன் நகரம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவத்தின் காணொளி வெளியாகியுள்ளது.
அக் காணொளியில் மாலை நேரத்தில் கடலில் நிலைநிறுத்தப்பட்ட ரஷ்யாவின் போர்க் கப்பலிருந்து உக்ரைனை நோக்கி Kalibar ஏவுகணைகள் சரமாரியாக ஏவப்படுகிறது.
குறித்த ஏவுகணைகள் உக்ரைனின் Zhytomyr நகரை குறிவைத்து ஏவப்பபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து 4 ஏவுகணைகள் போர்க் கப்பலிருந்து ஏவப்பட்டதை காணொளி காட்டுகிறது.
எவ்வாறாயினும் ஏவுகணைகள் எங்கே தாக்கியது, அதன் விளைவாக ஏதேனும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது போன்ற தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments