இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 154,500 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையினால் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ளமையினால் தங்க விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலமை தொடர்ந்தால் தமது வணிக நடவடிக்கையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகை கடை வியாபாரிகளிடம் ஐ.பி.சி. தமிழ் நடத்திய கள ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளனர்
0 comments: