களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பணவில் ஊழல்!

Sunday, May 31, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவில் ஊழல் இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுவாஞ்சிக்குடி வடக்கு 1, களுவாஞ்சிக்குடி தெற்கு கிரமசேவையாளர் பிரிவில் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவில் சுமார் இரண்டு இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் மாங்காடு கிராமத்திலும் இவ்வாறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பொதுமக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தில் உள்ள இருவரின் பெயரில் பணம் எடுக்கப்பட்டு ஒருவருக்கு மாத்திரம் பணத்தை வழங்கிவிட்டு மற்றவரின் பணத்தை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இவ்வாறு சுமார் 210000 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்னும் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கவனம் செலுத்த வில்லை என பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அரசாங்க அதிபர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE | comments

ஆசிரியர்கள் 26 பேர் சுய தனிமைப்படுத்தலில் - இலங்கை ஆசிரியர்கள் சங்கம்


கடற்படை வீரர்கள் தங்கியிருந்த பிலியந்தல கொதலாவல வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் 26 பேர் தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலையில் தங்கியிருந்த கடற்படை வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் அப்பாடசாலையின் ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகளில் பாதுகாப்புத் துறையினர் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம், குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதே வேளையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கடந்த 21 ஆம் திகதி பாடசாலைகக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள படிவத்தில் ஒப்பம் பெறுவதற்காக ஆசிரியர் கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கும் கொரோன தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் உருவானதை அடுத்து அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

பாரம்பரிய யாழ்.கதிர்காம பாதயாத்திரை 24மணிநேரத்துள் கைவிடப்பட்டுள்ளது

(காரைதீவு  நிருபர் சகா)
வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை மறுநாள் வெள்ளிக்கிழமை மதியம் கைதடி சிவன் ஆலயத்தைச் சென்றடைந்ததும் கைவிட நேரிட்டது.


அது தொடர்பாக தலைவர் வேல்சாமி தெரிவிக்கையில்:

சமகால கொரோனா சூழ்நிலையைக்கருத்திற்கொண்டு பாதயாத்திரைக்கு இடமளிக்கமுடியாது என அங்குவந்த பொலிசார் கூறினர்.

இதுவும் முருகப்பெருமானின் செயல்தான் என நினைந்து சட்டத்திற்கு மதிப்பளித்து பாதயாத்திரையை கைவிட்டோம்.

சிலவேளை ஒரு மாதத்துள் சூழ்நிலை சரிவருமானால் உகந்தமலை முருகனாலயத்திலிருந்து பாதயாத்திரையை மேற்கொள்ளலாமென எண்ணுகிறோம். அதற்கும் முருகன்தான் அருள்புரியவேண்டும். என்றார்.
READ MORE | comments

ஸ்ரீலங்காவிலும் பயிர்களை வேட்டையாடும் வெட்டுக்கிளிகள் - விவசாய பணிப்பாளர் நாயகம் தகவல்

உலகளவில் தற்போது கொரோனாவைத் தாண்டி பேசுபொருளாக மாறிய விடயம் தான் இந்த “வெட்டுக்கிளிகள்” அச்சுறுத்தல்.
பயிர்களை வேட்டையாடும் இந்த வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் படங்களில் தான் பார்த்ததுண்டு.
எனினும் தற்போது நிஜ வாழ்க்கையிலும் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை வேட்டையாடுவது நடைபெறுகின்றது.
அண்மைக்காலங்களில் இந்தியாவில் சேதத்தை ஏற்படுத்திவந்தது. அந்த வகையில் தற்போது ஸ்ரீலங்காவிலும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஆரம்பித்துள்ளது.
குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வெட்டுக்கிளியும் ஒவ்வொரு நாளும் அதன் எடையை ஒத்த உணவை உட்கொள்கிறது. பயிர்களை வெறித்தனமாக வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக பண்டைப்புழுக்களைத் தொடர்ந்து தற்போது வெட்டுக்கிளிகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்தல் தொடர்பில் வெளியான செய்தி!!

2021ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வாக்காளர் பதிவு தகவல்களைப் பெற மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தேர்தல் செயலகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

“கல்வி அமைச்சு கடந்த வாரம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, முதலாம் தரத்தில் மாணவர்கள் சேருவதற்கு தேர்தல் பதிவேட்டில் ஐந்தாண்டு பதிவு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கோவிட் -19 தொற்று நோய் காரணமாக, மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் தேர்தல் பதிவேடுகள் குறித்த தகவல்களை வெளியிடாது.

அதன்படி, தேர்தல் பதிவேடுகள் குறித்த தகவல்களை அப்பகுதியின் கிராம அலுவலகர் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்

https://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx என்ற முகவரியில் உள்நுழைந்து தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாக்காளர் பதிவு தகவல்களைப் பெற முடியும்” என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

பலத்த பாதுகாப்புடன் இறுதிக் கிரியைகளுக்கு தயாராகும் தருணம்.. 500 பேருக்கு மட்டுமே அனுமதி

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளுக்காக நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் பலத்த சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சமூக இடைவெளியை பேணும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் எவரும் மைதானத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.
சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மதகுருமார்கள் ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரத்திலுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் , மாவட்ட தலைவர்கள் ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மைதானத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பிரத்தியேக அனுமதி அட்டை விநியோகிக்கப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இதன்படி மைதானத்துக்குள் சுமார் 500 பேர்வரை மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சுகாதார பிரிவினரால் அனைவரும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டதுடன் கிருமி தொற்று நீக்கியால் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டே உட்செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நோரர்வூட் மைதானத்தில் இறுதிகிரியைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு தரப்பினருக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் நோர்வூட் பிரதேசசபை தலைவர் குழந்தைவேல் ரவி பொறுப்புகளை ஏற்றிருந்தார் .
READ MORE | comments

சிறிதரனுக்கு பதில் வழங்கிய சிவசக்தி ஆனந்தன்



 புதிய ஆட்சியாளர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி
குண்டுகளே என   தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும்
முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன்
தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றின் கேள்வி பதிலுக்கு பதிலளிக்கையிலே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கேள்வி:- புதிய ஆட்சியாளர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யும்
நிலைமையொன்று ஏற்படலாமென சிறிதரன் கூறியுள்ள நிலையில் உங்களது அரசியல்
செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நெருக்கடிகள் இல்லையா?

பதில்:- இரண்டு விடயங்களை கேட்டிருக்கின்றீர்கள். முதலில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பை தடை செய்யும் விடயத்திற்கு பதிலளிக்கின்றேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியோ
அமைப்போ இல்லை. இதற்கென சின்னமும் இல்லை. அவ்வாறான நிலையில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினை எவ்வாறு தடை செய்யமுடியும். நகைச்சுவை நடிகர்
வடிவேல் நகைச்சுவைக்காக கிணற்றைக் காணவில்லை என்று வழக்குப்பதிவு
செய்யுமாறு கூறுவார். பதிவுகளே இல்லாத கட்டமைப்பொன்றினை தடைசெய்வதாக
கூறுவது அதுபோன்று தான் உள்ளது.

அடுத்ததாக, அவர் தமிழரசுக்கட்சிக்கு பதிலாக, கூட்டமைப்பென கூறிவிட்டார்
என்று வைத்துக்கொள்வோம். தமிழரசுக்கட்சியைக் கூட எந்தவொரு அடிப்படையிலும்
அரசாங்கம் தடைசெய்யாது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சமஷ்டிக்
கட்சியாக தமிழரசுக்கட்சி இருந்தாலும், தாம் பிரிவினையைக் கோரமாட்டோம்.
சமஷ்டி பிரிவினை இல்லையென்று சத்தியக்கடதாசி உயர்நீதிமன்றத்திற்கு
வழங்கப்பட்டாகிவிட்டது.

மேலும் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு கடந்த ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்ததைப் போன்று
இம்முறையும் முண்டு கொடுப்பதற்கு தயாராகி விட்டது. ஆகவே தமக்கு ஆதரவாக,
ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக உள்ள அரசியல் தரப்பினை ஆட்சியாளர்கள்
தடைசெய்வார்களா?  ஆகவே இத்தகைய கருத்துக்கள் அனைத்துமே தேர்தல்
வெடிகுண்டுகளே.

அவருடைய கட்சியின் பேச்சாளர் விடுதலைப்போராட்டத்தினை விமர்சித்து
கருத்துக்களை வெளியிட்டபோது அமைதிகாத்தமையால் அவர்மீது கடுமையான
விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ச்சியாக
பேசிவந்ததோடு, புலிகளின் தளபதிகளில் ஒருவரின் மைத்துணராக இருக்கும்
ஒருவரே மௌனமாக இருந்துவிட்டாரே என்ற அதிருப்திகளும் மக்கள் மத்தியில்
உண்டு. ஆகவே அவையனைத்தையும் திசை திருப்பவே திடீரென ராஜபக்ஷவினர் மீது
சீறியிருக்கின்றனர்.

எனது கடந்தகால அவதானிப்புக்களின் அனுபவத்திலிருந்து, தேர்தல் நெருங்கும்
தறுவாயில், விசாரணைக்கும் அவர் அழைக்பப்பட்டாலும் அதில்
ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த காலத்தில் அவ்வாறான நிகழ்வும்
இடம்பெற்றிருக்கின்றன. ஆகவே சற்று ஆழமான கரிசணை செலுத்தினீர்கள் என்றால்
அதன் பின்னணி உங்களுக்கும் புரியும்.

இரண்டாவதாக, எமது அரசியல் செயற்பாடுகள் நேரடியாக தடுக்கப்படாது
விட்டாலும், இடையூறுகள் தாராளமாக ஏற்படுத்தப்படுகின்றன.
புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களுக்குள் தான் எமது அனைத்து
நிகழ்வுகளும், செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார்
READ MORE | comments

ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலில் இருக்கும்.
அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருக்கிறது.

நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது.
வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைப்படுத்த அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின்னர் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
READ MORE | comments

தொழிற்பயிற்சி நிலையத்தில் பூதவுடல்; கொட்டகலை நகரமெங்கும் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!

Saturday, May 30, 2020

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்துவரப்பட்ட பூதலுடல் அஞ்சலிக்காக நேற்று வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் வேவண்டன் இல்லத்தில் வைத்து இன்று காலை ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன.
அதன்பின்னர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப் வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதன் போது நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும் வீதிகளில் இரு பக்கங்களிலும் காத்திருந்து மலர்தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை, கொட்டகலை நகரமெங்கும் இராணுவமும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அஞ்சலிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏனையோர் திருப்பியனுப்படுகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள நகரங்களில் எல்லாம் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தோட்டப்பகுதிகளில் மக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
READ MORE | comments

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான்)
கொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான சுகாதார முன்னேற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சனிக்கிழமை(30) முற்பகல் ஆரம்பமானது.


குறித்த கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை வலய கோட்டக்கல்வி அதிகாரி பி.எம் பதுறுதீன் உள்ளிட்ட கல்முனைக் கோட்ட முஸ்லீம் பிரிவு அதிபர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களும் பங்குபற்றினர்.

இதன் போது இக்கலந்துரையாடலில் தாய் சேய் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம். பஸில் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.




















READ MORE | comments

உணவகம் மீதான துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!!

மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விடுத்திக்கு முன்னால் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த மூன்று காவல்துறை அதிகாரிகளும் இந்த சம்பவத்தை தடுப்பதற்காக எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாதது சீ.சீ.டி.வி காணொளியில் உறுதியானதைத் தொடர்ந்தே இவ்வாறு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

நிந்தவூரில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது.



நூருள் ஹுதா உமர் 

நிந்தவூர் கடற்கறை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலை பெண் ஒருவரின் இறந்த உடல் கரை ஒதுங்கியது.

 அவ்வுடலை இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை. இதனால் பொதுமக்களின் உதவியை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர். அதன் பின்னர் அதிகளவான மக்கள் பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மருமகன் இரவு  அடையாளம் காட்டியிருந்தார். 

இதனை தொடர்ந்து சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த  சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வியும் பார்வையிட்டார். 

இதனடிப்படையில் நிந்தவூர், இமாம் ரூமி வீதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தாயான  57 வயது மதிக்கத்தக்க ஆதம்லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரும், சம்மாந்துறை பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் சம்மாந்துறை வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
READ MORE | comments

காரைதீவில் தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு !!



நூருள் ஹுதா உமர். 

இலங்கை அரசின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கலைஞர்களுக்கான நலனோம்பு வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கலைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (29) காலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் வசிக்கும் தமிழ், முஸ்லிம் கலைஞர்களுக்கான உதவித்தொகையை உதவி பிரதேச செயலாளர் திரு எஸ். பார்த்திபன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்  ரி.எம்.றிம்சான் மற்றும் காரைதீவு பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
READ MORE | comments

பிரதேச செயலகத்தில் மரக்கறி தோட்டங்கள் அமைக்கும் நிகழ்வு காரைதீவில் !

நூருள் ஹுதா உமர். 

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக துரிதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தில் மரக்கறி தோட்டங்கள் அமைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் பிரதம முகாமைத்துவ உதவியாளர் கலந்துகொண்டு மரங்களை நட்டு ஆரம்பித்து வைத்தார்கள்.


READ MORE | comments

நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம்

Friday, May 29, 2020


அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது .
குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் சம்மாந்துறை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

நுவரெலியா மாவட்டம் முழுதும் ஊரடங்கு வெளியான அறிவித்தல்

நுவரெலியா மாவட்டத்திற்கு 24 மணிநேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை சற்றுமுன் விடுத்துள்ளது.
உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
READ MORE | comments

வடக்கு,கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணி சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு.



வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணி என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றின் கேள்வி பதிலுக்கு பதிலளிக்கையிலே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கேள்வி:- கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி அமைத்துள்ளமையையும், அதற்கு பாதுகாப்பு செயலாளர் ஒய்வு பெற்ற கமால் குணரட்ன நியமிக்கப்பட்டுள்ளமையையும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- உண்மையிலேயே இதுவொரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு திட்டத்தின் நீட்சியே. தமிழர் தாயகத்தில் பௌத்தத்தின் பெயரால், தேசிய பாதுகாப்பின் பெயரால், வன, நிலங்கள், தொல்பொருள் பகுதிகள் என்றெல்லாம் சிங்கள பேரினவாதிகள் அகலக்கால் பதித்து வருகின்றார்கள். தமிழர்களின் பூர்விக நிலத்தினை முழுமையாக பறித்து சிங்கள தேசமாக மாற்றியமைப்பதற்கு பல்வேறு முனைப்புக்களைச் செய்துவருகின்றார்கள்.

அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் புனித பூமி என்ற ரீதியில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காக பௌத்த மத சின்னங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அம்பாறையில் 247 இடங்களும், திருகோணமலையில் 74 இடங்களும், மட்டக்களப்பில் 28 விகாரைகள் உட்பட 55 இடங்கள் பௌத்த மதத்துடன் தொடர்புடைய தொல்லியல் இடங்களாக அடையாளப் படுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தினை தனியே கிழக்கு மாகாணத்தினை மட்டும் மையப்படுத்தி பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதும் வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்பது தமிழர்களின் நீண்டகால கோரிக்கை. ஆனால் சிங்கள பேரினவாதிகளை பொறுத்தவரையில் கொக்கிளாயில் சுமார் 60 சதுர கிலோ மீற்றர்களுக்குள் 5 கடற்படை முகாம்கள், 8 பௌத்த விகாரைகள், 10 இராணுவ முகாம்கள், 4 இராணுவ வியாபார நிலையங்கள் இவற்றுடன் சிங்களக் குடியேற்றங்களும்  ஏற்படுத்தப்பட்டு வடக்கையும் கிழக்கினையும் நிரந்தரமாக பிரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

இவ்வாறிருக்க, 1932ஆம் ஆண்டிலிருந்து சிங்களவர்கள் கிழக்கு நோக்கிய நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவாபி திட்டம், துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்று அபிவிருத்திட்டங்களின் போர்வையில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினர்.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை அதிகரிப்பதை ஒரேநோக்காக வைத்து 24குடியேற்றத் திட்டங்கள் மாறிமாறிவந்த சிறிலங்கா ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 240 தமிழ்க் கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக கிழக்கில் போர் நிறைவுக்கு வந்திருந்த சூழலில் கிழக்கு மாகாணத்தில் மேலும் ஒரு இலட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கும், அங்கு சிங்களவர்களின் சனத்தொகையை 55சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் அப்போதைய மஹிந்த அரசு திட்டமிட்டிருந்ததுஅதற்காக, திருகோணமலையில் கந்தளாய், அல்லை, மொரவேவ, முதலிக்குளம், பதவியா திட்டங்களின் கீழும் அம்பாறையில் கல்லோயா, பனல் ஓயா, அம்பலன் ஓயா திட்டங்களின் கீழும் நூறுவீதம் சிங்களவர்களே குடிமயர்த்தப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தற்போது,  மகாவலி அபிவிருத்திக் திட்டம், கெடா ஓயா திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் கீழும் குடியேற்றங்களுக்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய பின்னணிகளை வைத்துப் பார்க்கின்றபோது, மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்து இலக்கை அடைவதற்கு விழைகின்றமை வெளிப்படுகின்றது. அதாவது கிழக்கில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகை மாற்றியமைப்பதற்கு திட்டமிடுகின்றமை புலனாகின்றது. அதன்மூலம் தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது.

இந்த முயற்சிகளுக்கு தொல்பொருளின் பெயரால் காய் நகர்த்தப்படுகின்றது. அதனை கச்சிதமாக செய்து முடிப்பதற்கும், அதுதொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினர் கேள்வி கேட்காது அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காக படைத்தரப்பு அப்பணியில் களமிறக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்



பாறுக் ஷிஹான்

 3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில்  பகுதியை  சேர்ந்த பெண்மணி  ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(28)  அம்பாறை மாவட்டம் கல்முனை  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.

18.5.2020 அன்று குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  35 வயதுடைய பொத்துவில் நகரப்  பகுதியை சேர்ந்த  பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை(28)  காலை    மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 3 குழந்தைகள் பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு சிகிச்சைக்காக  கல்முனை  அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு  அங்கு   சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 குழந்தைகளும் பெறப்பட்டுள்ளதுடன்   2 ஆண் குழந்தைகளும் 1 பெண் குழந்தையும் உள்ளடங்குவதுடன்  தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.மயக்க மருத்துவ நிபுணர் சுதேஸ்வரியின் கண்காணிப்பில்  குறித்த சத்திர சிகிச்சையினை அறுவை சத்திர சிகிச்சை நிபுணர் கிரந்த பிரசாத் உள்ளிடங்கலாக   மகப்பேற்று வைத்திய  நிபுணர்  ராஜிவ்  விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.

இதில் இரு   ஆண் குழந்தைகளும்  தலா1910கிராம்    1960கிராம்  மற்றும் பெண் குழந்தை  1480 கிராம்  நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதே போன்று கடந்த மாதமும் இதே மாதமும் நிந்தவூர் மற்றும் கோமாரி பகுதியை சேர்ந்த இரு  பெண்களுக்கு தலா    ஒரே சூலில் 3 குழந்தைகள் பிறந்தமை  குறிப்பிடத்தக்கது.




கடந்த சில தினங்களாக ஹொரொனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள் வரவு குறைவடைந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
READ MORE | comments

மீண்டும் ஸ்ரீலங்கா முழுவதும் அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்! வெளியிடப்பட்டுள்ள தகவல் காரணம்! !!

எதிர்வரும் 31ம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமானது திங்கட்கிழமை காலை 4 மணிக்கு மீண்டும் தளர்த்தப்படுகிறது.
இந்நிலையில், ஜுன் 1ம் திகதி திங்கட் கிழமை முதல் வழமை போன்று ஜுன் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும்.
பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

அதாவது 3ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுலுக்குவரும் ஊரடங்குச் சட்டமானது 4ஆம், 5ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படுகிறது.
இந்தநிலையில், ஜுன் 6ம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரை ஆரம்பம் ..

Thursday, May 28, 2020



செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஆலய கப்புறாளையால் யாத்திரைக்கு தலைமை தாங்கி செல்லும் அடியவரின் கையில் முருக பெருமானின் வேல் கையளிக்கப்பட்டது.வேலினை பெற்றுக்கொண்ட அடியவர்கள் கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையை ஆரம்பித்தனர். இந்த யாத்திரை குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி விசாகம் அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கதிர்காமம் நோக்கி பாத யாத்திரையாக சுமார் 46 நாட்கள் சென்று கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.

இம்முறை கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக யாத்திரை தடைபடும் என எதிர்ப்பார்த்தபோதிலும் முருக பெருமானின் அருளால் இம்முறை யாத்திரை தடங்கல் இன்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அருலாசியுடன் கதிர்காம கந்தனை சென்றடைவோம் என யாத்திரையில் பங்கேற்ற அடியவர் ஒருவர் தெரிவித்தார்.


READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |