Advertisement

Responsive Advertisement

ஆசிரியர்கள் 26 பேர் சுய தனிமைப்படுத்தலில் - இலங்கை ஆசிரியர்கள் சங்கம்


கடற்படை வீரர்கள் தங்கியிருந்த பிலியந்தல கொதலாவல வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் 26 பேர் தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலையில் தங்கியிருந்த கடற்படை வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் அப்பாடசாலையின் ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் சுமார் 200 பாடசாலைகளில் பாதுகாப்புத் துறையினர் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம், குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதே வேளையில் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கடந்த 21 ஆம் திகதி பாடசாலைகக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள படிவத்தில் ஒப்பம் பெறுவதற்காக ஆசிரியர் கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கும் கொரோன தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் உருவானதை அடுத்து அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments