Home » » களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பணவில் ஊழல்!

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பணவில் ஊழல்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவில் ஊழல் இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுவாஞ்சிக்குடி வடக்கு 1, களுவாஞ்சிக்குடி தெற்கு கிரமசேவையாளர் பிரிவில் வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவில் சுமார் இரண்டு இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் மாங்காடு கிராமத்திலும் இவ்வாறு ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பொதுமக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தில் உள்ள இருவரின் பெயரில் பணம் எடுக்கப்பட்டு ஒருவருக்கு மாத்திரம் பணத்தை வழங்கிவிட்டு மற்றவரின் பணத்தை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இவ்வாறு சுமார் 210000 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்னும் இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட ஐயாயிரம் ரூபாய் கொடுப்பணவு இதுவரை வழங்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கவனம் செலுத்த வில்லை என பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அரசாங்க அதிபர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |