Advertisement

Responsive Advertisement

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மன்சூருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தொடர்ந்து சேவையில் நீடிப்பதற்கான தீர்ப்பு இன்று(1) திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனால் வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தொடர்பான வழக்கு இன்று இறுதியாக திருகோணமலை மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மாகாணக்கல்விப்பணிப்பாளராக எம்.ரி.எ.நிசாமை நியமித்தமையை ஆட்சேபித்து பணிப்பாளர் மன்சூர் வழக்குத் தொடுத்திருந்தார்.

பலமாதகாலமாக இடம்பெற்றுவந்த இவ்வழக்கின்தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்ற செய்திகள் முன்பே வெளியாகியிருந்ததனால் இன்று காலை முதல் பலரும் எதிர்பார்ப்பிலிருந்தனர்.

இந்நிலையில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்படி அதிரடித் தீர்ப்பினை வழங்கினார்.அதன்படி தற்போது கடமையிலுள்ள மன்சூர் தொடர்ந்து மாகாணகல்விப்பணிப்பாளராக பணியாற்றுவார்.

Post a Comment

0 Comments