Home » » ஸ்ரீலங்காவிலும் பயிர்களை வேட்டையாடும் வெட்டுக்கிளிகள் - விவசாய பணிப்பாளர் நாயகம் தகவல்

ஸ்ரீலங்காவிலும் பயிர்களை வேட்டையாடும் வெட்டுக்கிளிகள் - விவசாய பணிப்பாளர் நாயகம் தகவல்

உலகளவில் தற்போது கொரோனாவைத் தாண்டி பேசுபொருளாக மாறிய விடயம் தான் இந்த “வெட்டுக்கிளிகள்” அச்சுறுத்தல்.
பயிர்களை வேட்டையாடும் இந்த வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் படங்களில் தான் பார்த்ததுண்டு.
எனினும் தற்போது நிஜ வாழ்க்கையிலும் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை வேட்டையாடுவது நடைபெறுகின்றது.
அண்மைக்காலங்களில் இந்தியாவில் சேதத்தை ஏற்படுத்திவந்தது. அந்த வகையில் தற்போது ஸ்ரீலங்காவிலும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஆரம்பித்துள்ளது.
குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதோடு பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கிருமிநாசினியைப் பயன்படுத்தி அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வெட்டுக்கிளியும் ஒவ்வொரு நாளும் அதன் எடையை ஒத்த உணவை உட்கொள்கிறது. பயிர்களை வெறித்தனமாக வெட்டுக்கிளிகள் உட்கொள்வதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக பண்டைப்புழுக்களைத் தொடர்ந்து தற்போது வெட்டுக்கிளிகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |