கதிர்காமம் பாதயாத்திரை காட்டுப்பாதை யூண் 27,தொடக்கம் யூலை 9, ம் திகதி வரை திறந்திருக்கும்

Friday, May 31, 2019

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரகர்களுக்கான காட்டுப்பாதை இம்முறை எதிர்வரும் யூன் 27ஆம்திகதி திறக்கப்படும்மீண்டும் அது ஜூலை 9ஆம் திகதி மூடப்படும்.

இவ்வாறு  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையிலான முன்னோடி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி உகந்தை முருகனாய ஆடி வேல் விழா உற்சவ முன்னோடிக்கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுகாலை10மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல்2மணி வரை நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்சுதுநிலமே
ஆலயபிரதமகுருசிவஸ்ரீ.கு.சீதாராம்குருக்கள்பிரதேசசெயலாளர்களானசிவ.ஜெகராஜன்(திருக்கோவில்எஸ்.திரவியராஜா(பொத்துவில்ஆலயபரிபாலனசபைச் செயலாளர்கு.ஸ்ரீபஞ்சாட்சரம்பொருளாளர்வீ.பத்மநாதன்பொத்துவில்பிரதேசசபைத்தவிசாளர்எம்.வாஸித்இந்துசமயமாவட்டகலாசாரஉத்தியோகத்தர்களானகு.ஜெயராஜ்என்.பிரதாப்மற்றும்பொலிஸ்இராணுவஉயரதிகாரிகள்சுகாதாரம் போக்கு வரத்துமின்சாரம் பாதுகாப்பு உள்ளிட்டபலதிணைக்களத்தலைவர்கள் பலரும்கலந்துகொண்டனர்.
கதிர்காமம்மற்றும்உகந்தமலைமுருகனாலயங்களின்வருடாந்தஆடிவேல்   விழா
உற்சவம்யூலைமாதம்03ஆம்திகதிஆரம்பமாகி18ஆம்திகதி
தீர்த்தோற்சவத்துடன்நிறைவடையவிருப்பதுதெரிந்ததே.

கதிர்காமத்திற்குபாதயாத்திரையாகச்செல்வோர்உகந்தமலைமுருகனாலயத்தில்ஓரிருநாட்கள்தங்கயிருந்துதான்குமணயாலகாட்டிற்குள்பிரவேசித்துகதிர்காமத்தைச்சென்றடைவதுவழக்கம்.  அதனால்உற்சவம்மற்றும்பாதயாத்திரைதொடர்பாகபலவிடயங்கள்இங்கு கலந்துரையாடப்பட்டன.
அங்குஎடுக்கப்பட்டதீர்மானங்கள்வருமாறு
குறித்த12 நாட்களில் நாட்களில்காலை6மணிமுதல்பிற்பகல்3வரைமாத்திரமேகாட்டிற்குள் செல்லயாத்திரீகர்கள்உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தனித்தனியாகஅல்லது5பேர்சேர்ந்துகாட்டுக்குள் செல்லஅனுமதிக்கப்படமாட்டார்கள்குறைந்தது15 அல்லது20பேர்அல்லதுஅதற்கும்அதிகமானதொகையினர்சேரும்போதுதான்உள்ளேசெல்லஅனுமதிக்கப்படுவார்கள்அனைவரும்அடையாளஅட்டைகள்கொண்டுவருதல்அவசியம்.

.காட்டுப்பாதையூன்மாதம்27ஆம் திகதிமுதல்12 நாட்கள்திறந்திருக்கும்.
அக்காலப்பகுதியில்காட்டுப்பாதையால்பயணிப்போர்பொலித்தீன்பாவனையை
முற்றாகத்தடைசெய்யவேண்டும்அன்னதானம்வழங்குவோர்பார்சலில்
வழங்கமுடியாதுமாறாகஆலயஅனுமதியுடன்பீங்கானில்வழங்கவேண்டும்காட்டுப்பகுதிக்குள்எக்காரணம்கொண்டும்அன்னதானம்வழங்கஅனுமதிக்கப்படமாட்டார்கள்.ஆலயவளாகத்திலும்அன்னதானம்வழங்குவோர்அங்குள்ளபொதுச்சுகாதாரப்பரிசோதகரின்சோதனைகண்காணிப்பின்பின்னரேமேற்கொள்ளமுடியும்.ஆலயத்திற்குவரும்அடியார்கள்பாதயாத்திரீகர்கள்அனைவருக்குமாகதண்ணீர்த்தாங்கிகள்வைக்கப்படவேண்டும்.காட்டிற்குள்ளும்தண்ணீர்தாங்கிஅல்லதுவசுசர்வைப்பதுதொடர்பாககலந்துரையாடப்பட்டதுவழமைபோன்றுசிவதொண்டன்அமைப்பினர்தண்ணீர்வைக்கமுன்வந்தனர்.இராணுவம்விசேடஅதிரடிப்படைஇதற்கு
பொறுப்பாக்கப்பட்டுள்ளது.    திருக்கோவில்ஆலையடிவேம்புமற்றும்லாகுகல
பிரதேசசபைகள்தண்ணீர்பவுசர்களைவழங்கும்அம்பாறைக்கச்சேரியும்ஒரு
வவுசரைவழங்கும்.

திருக்கோவில்பிரதேசத்தில்நிலவும்வரட்சிகுழாய்நீர்விநியோகநிறுத்தம்காரணமாகநிலவும்குடிநீர்த்தட்டுப்பாடைநீக்குமுகமாகபிரதேசசபைக்கானவவுசர்கள்அப்பணியில்ஈடுபடுவதனால்சபையின்வவுசர்வழங்குவதுகடினம்என்றுசொல்லப்பட்டது.
விசேடஅதிரடிப்படைஇராணுவம்தண்ணீரைநிரப்பிவைக்கும்.
காட்டுப்பாதையால்செல்லும்யாத்திரீகர்களுக்கானபாதுகாப்பைபொலிஸ்வனஜீவராசிகள்திணைக்களம்இராணுவம்என்பனஇணைந்துவழங்கும்.
உகந்தயையடுத்துள்ளகுமணபறவைகள்சரணாலயமுன்றலில்யாத்திரீகர்கள்கணக்கெடுப்பொன்றுக்குஉள்ளாக்கப்படுவார்கள்அடியார்களின்பாதுகாப்புக்கருதிசோதனைசெய்யப்படவிருக்கின்றது.
கடந்தாண்டு25ஆயிரம்
பாதயாத்திரீகர்கள்பயணித்துள்ளனர்இவ்வாண்டும்அதேஅளவானதொகை
எதிர்பார்க்கப்படுகின்றது.
இராணுவமும்வனஜிவராசிகள்திணைக்களமும்இணைந்துஇக்கணக்கெடுப்பைஎவ்வித
கெடுபிடியுமின்றிநடாத்துவர்.
ஆலயவளாகத்தில்மின்சாரவசதிசுகாதாரவசதியாத்திரீகர்களுக்குநிறைவாக
ஏற்படுத்திக்கொடுக்கப்படும்மலசலகூடவசதியும்சுத்தமாக
வழங்கப்படும்.போக்குவரத்துவசதியும்செய்யப்பட்டுள்ளது.
உகந்தைமுருகனாலயசூழலைசுத்தப்படுத்தசிரமதானம்செய்யவிரும்புவோர்நேரகாலத்துடனகொடியேற்றத்திற்கு முன்பதாக தமதுபணிகளை
பூர்த்திசெய்து முடித்துவிடவேண்டும்
மேலும் பலகருத்துக்கள் பரிமாறப்பட்டன.
உகந்தை முருகன் ஆலயத்திலிருந்துகுமணபறவைகள்சரணாலயத்தினூடாகஅல்லதுநாட்கள்குமுக்கன்நாவலடிவியாழைகட்டகாமம்என84கிலோமீற்றர் அடர்ந்தயால காட்டுக்குள்ளால்பயணித்து கதிர்காமத்தைச் சென்றடைவதேஇப்பாத யாத்திரையின் நோக்கமாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் முடிவு!


மறைமுக வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்கி மக்கள் மீதான வரிச்சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நதுன் குருகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
வட்வரி மற்றும் மறைமுக வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலமாக பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதே முக்கிய குறிக்கோளாக அமைந்திருக்கிறது.
நேரடியான வரியில் கூடுதலான தொகையை வசூலிக்க முடியுமாயின் பொதுமக்கள் மீதான வரி சுமையை குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. வட்வரி சதவீதத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த வட்வரியை குறைப்பதாயின் அரசாங்கத்துக்கு நிதி அவசியம்.
அரசாங்கமும் திணைக்களமும் இதனை எதிர்பார்கின்றது. மறைமுக வரியை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணத்தை வழங்கி மக்கள் மீதான வரிச்சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

அக்கரைப்பற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சஹ்ரானுக்கு சொந்தமான மிக முக்கிய ஆவணம்!





இன்று பொலிஸரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மடிக்கணினியும், 35 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும், தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணினியே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்ட ஒருவரின் பணம் சந்தேகத்திற்கிடமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அம்பாறை மாவட்டம் பாலமுனை ஹுசைனியா நகரப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது அங்கிருந்து பெருந் தொகை பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சுமார் 35 இலட்சம் ரூபா பணமும் ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டதுடன், அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்பட்டிருந்த மடிக் கணிணியொன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அம்பாறை அரச புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் அம்பாறை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலைத் தொடர்ந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் என சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஒருவரது உறவினரின் வீட்டிலிருந்தே இப்பணத் தொகையும் அத்துடன் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சந்தேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்பு பட்டவர் எனக் கூறப்படும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பாலமுனை ஹுசைனியா நகரப் பிரதேசத்தில் வசித்து வரும் தமது உறவினரிடம் வைத்திருக்குமாறு குறித்த பணத்தினையும் நகைகளையும் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தமது உறவினரிடம் மடிக் கணிணியொன்றையும் வைத்திருக்குமாறு வழங்கியபோதிலும் அதனை ஏற்க அவரது உறவினர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அதனை அவர் எடுத்துச் சென்று அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரையினை அண்டிய பகுதியில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வீசப்பட்ட மடிக் கணினி நீரில் மூழ்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




READ MORE | comments

அரச உத்தியோகத்தர்களுக்கு ஓர் விசேட செய்தி! (ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம்)

அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின்படி,
அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சாரி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.
இதேவேளை, பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

வவுணதீவு பொலிஸார் கொலைத் திட்டம் முழு விபரம்: கட்டளையிட்டது யார்? கிடைத்த அதிர்ச்சித் தகவல்!



வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது.

இந்த கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் போராளிகளை இணைத்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், இருவர் கைதாகி தற்போது விடுதலையாகியுள்ளனர்.


இதனிடையே இந்த சம்பவத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் கட்டளையில் ஆயுதங்களை எடுப்பதற்காகவே சிரியாவில் பயிற்சி பெற்ற நில்கான் தலைமையிலான குழு வவுணதீவில் இரு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.


இந்த விடயம் சஹ்ரானின் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.இன் முதல் தாக்குதலான வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் சோதனைச் சாவடியில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி நள்ளிரவில் கடமையில் இருந்த பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கை துப்பாக்கியை எடுத்துச் சென்ற தாக்குதலாகும்.

இந்த தாக்குதல் சம்பவம் எவ்வாறு நடாத்தப்பட்டது என கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.ஜ.டி.யினர் கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் திகதி) கொழும்பில் இருந்து சம்பவம் இடம்பெற்ற வவுணதீவு சோதனைச் சாவடிக்கு அழைத்துச் சென்று ஒத்திகையும் பார்த்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி சஹ்ரானின் சாரதியான காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான 54 வயதுடைய முகமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர், 31 வயதான கம்சா முகைதீன் இம்ரான், 34 வயதுடைய முகமது ஆசிம் சியாம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களை சி.ஜ.டி.யினர் பொறுப்பேற்று விசாரணை நடத்தினர்.

பின்னணி இதுதான்,

திஹாரியில் இருந்து வேலை ஒன்று இருக்கின்றது. அதற்கு ரி-56 ரக துப்பாக்கிகள் தேவை. எனவே அதனை எடுக்குமாறு சஹ்ரான் கட்டளையிட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ தினத்திற்கு 3 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கபூரிடம் ரி-56 ரக துப்பாக்கியை கொடுத்து அக்கரைப்பற்று-கொழும்பு பேருந்து வண்டியில் கபூரை ஏற்றி அனுப்பியுள்ளார்.

காத்தான்குடிக்கு சென்று இறங்கியபோது அவரை ஏற்றிச் செல்வதற்கு அங்கு கார் ஒன்று ஆயத்தமாக இருந்துள்ளது இந்த காரில் கபூர் ஏறி அங்கிருந்து ஒல்லிக்குளம் பகுதியில் அந்த ஆயுதத்தை கொண்டு சென்று மறைத்து வைத்திருந்துள்ளனர் .

இதனிடையே உன்னிச்சை பகுதியில் கபூரின் நண்பனின் வாடி (கொட்டகை) இருக்கின்றது. அங்கு இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு 3 கிழமைக்கு முன்னர் அங்கு நில்கான் மற்றும் இம்ரான், சியாம் ஆகியோர் சென்றுள்ளனர். இதன்போது வவுணதீவு வலையிறவு பாலத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸ் இருப்பதை அவதானித்தனர்.

இதனையடுத்து இந்த சோதனைச் சாவடியை தெரிவு செய்தனர். இதனிடையே நவம்பர் 29ஆம் திகதியை தெரிவு செய்தோம். ஏன் என்றால் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம். அதன் பின்னர் பொலிஸாரை கொன்றால் அது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பாதுகாப்பு படையினருக்கு முழு சந்தேகம் ஏற்படும்.

தெரிவு செய்யப்பட்ட திகதியில் முகமது ஆப்தீன் நில்கான் தலைமையில் இந்த தாக்குதலுக்கு ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் இருந்து கபூரும், நில்கானும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்றினுள் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் மாடு அறுக்கும் கூரிய கத்திகளையும் வைத்து இரு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து நள்ளிரவு 1 மணிக்கு வெளியேறி காத்தான்குடி பகுதிக்கு வரும்போது இடையில் காத்திருந்த இம்ரானை ஏற்றிக் கொண்டு சென்றனர்.
பதுளை வீதி ஊடாக கரடியனாறு ஊடா ஆயித்திமலை சென்று அங்கிருந்து வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு முன்னாள் நடுவீதியில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில் வழமையாக மாடு ஏற்றும் தொழிலில் ஈடுபட்டுவந்த முகமது ஆசீம் சியாம் இன்றைய தினம் மாடு ஏற்றும் லொறி ஓன்றில் சென்று பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் லொறியில் சியாம் காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் இம்ரான் வேவு பார்ப்பதற்கு சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று திரும்பி வந்து காத்திருந்த நில்கான் கபூர் ஆகியோரிடம் இரு பொலிஸார் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

அப்போது லொறியில் காத்திருந்த சியாமை சோதனைச் சாவடிக்கு அருகில் செல்லுமாறு உத்தரவிட, சியாம் இறங்கியதும் லொறி சென்றுவிட்டது.

அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் நான்கு பேரும் சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று அங்கு மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு கபூரும், இம்ரானும் பொலிஸ் உத்தியோகத்தரான கணேஸ் டினேஸூக்கு அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். இதன்போது சோதனைச் சாவடியின் உள்பகுதில் பொலிஸ் சாஜனான நிரோசன் இந்திர பிரசன்னா நித்திரையில் இருந்துள்ளார்.

இந்தவேளை நள்ளிரவு 2.40 மணிக்கு டினேஸ் உடன் நன்றாக இம்ரான் கதைத்துக் கொண்டிருந்துள்ள போது அங்கிருந்து கபூர் மற்றும் பதுங்கிருந்த நில்கான் சோதனைச் சாவடி உள்பகுதில் படுத்திருந்த இந்திக பிரசன்னாவின் முகம் கழுத்து பகுதியை வலையால் மூடியபோது அவர் மீது கபூர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதன்போது வெளியில் இருந்த பொலிஸ் டினேஸ்க்கு சத்தம் கேட்ட போது அவர் மீது கத்தியால் குத்தவே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதன் பின்னர் நில்கான் கொண்டு சென்ற ரி-56 ரக துப்பாக்கியால் பொலிஸ் சாஜன் பிரசன்னாவை இரண்டு தடவை சுட்டுள்ளார். கபூர் அவர் மீது கத்தியால் 9 தரம் குதியுள்ளார்.

பின்னர் மயங்கிகிடந்த பொலிஸ் உத்தியோகத்தர் டினேஸையும் கத்தியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் உடனடியாக பொலிஸாரிடமிருந்து றிவோல்வர் ரக கை துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துக் ஒல்லிக் குளப்பகுதில் அமைத்திருந்த முகாமிற்கு சென்றனர்.

அங்கிருந்து பொலிசாரிடம் கைப்பற்றப்பட்ட றிவோல்வர் ஒன்றை நிந்தவூர் பகுதில் புதைத்து வைத்ததுடன் மற்ற றிவோல்லர் உட்பட 6 கை துப்பாக்கிகளை புத்தளம் பகுதில் கபூர் புதைத்து வைத்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய ரி 56 ரக துப்பாக்கியை சஹ்ரானின் தம்பியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் மோதலில் உயிரிழந்த ஒருவரின் கைகளில் இருந்து அந்த துப்பாக்கியை படையினர் மீட்டுள்ளனர் என சி.ஜ.டி. யினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்துக்கு தலைமை தாங்கிய நில்கான் சவூதி அரோபியாவுக்குச் செல்வதற்கு விசா மற்றும் விமான சீட்டு என்பவற்றை ஏற்கனவே ஒழுங்குபடுத்தியதுடன் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அவர் உடனடியாக சவூதிக்கு அரோபியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் நில்கானை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது, அவரை இலங்கைக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சியில் குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




READ MORE | comments

மட்டக்களப்பு பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்கள் நால்வர் கஞ்சாவுடன் கைது


-சரவணன் -

மட்டக்களப்பு பிரபல ஆண்கள் பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் கஞ்சாவுடன் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் மைதானத்தில் வைத்து நேற்று பின்னேரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று மாணவர்களின் பெற்றோர் அழைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன்,  கஞ்சா வைத்திருந்த மாணவரை   நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையாக பொலிசார் தெரிவித்தனர்


READ MORE | comments

செட்டிபாளையத்தில் கம்பரலிய திட்ட நிதி ஒதுக்கீட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு


(ரவிப்ரியா)
செட்டிபாளையத்தில் கம்பரலிய  திட்டத்தின் கீழ், பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவரும், தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தியின் 7.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அங்குரார்ப்பண நிகழ்வு கிராமத்தின் வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சி.கந்தசாமி தலைமையில் நடைபெற்றபோது அதிதிகள் வரவேற்கப்படுவதையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உதவி செயலாளர் திருமதி த.சத்தியகௌரி மங்கல விளக்கேற்றி வைப்பதையும். பிரதம அதிதி சோ.கணேசமூர்த்தி அடிக்கல் நடுவதையும், படங்களில் காணலாம்.

இத் திட்டத்தின் கீழ், சேமக்காலை வீதி, மற்றும் சிவன் கோவில் எல்லை வீதி என்பன கொங்கிறீற் வீதியாக மாற்றுவதற்கு தலா இரண்டு மில்லியனும், மரமால் வீதி, மற்றும் புலவர் வீதி முதலாம் குறுக்கு என்பனவற்றிற்கு கொங்கிறீற் இடுவதற்கும், சிவன் ஆலய திருப்பணிக்கு தலா ஒரு மில்லியனும், வீடு திருத்தத்திற்கு 0.3மில்லியனும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.















READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |