Advertisement

Responsive Advertisement

செட்டிபாளையத்தில் கம்பரலிய திட்ட நிதி ஒதுக்கீட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு


(ரவிப்ரியா)
செட்டிபாளையத்தில் கம்பரலிய  திட்டத்தின் கீழ், பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும்,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு தலைவரும், தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தியின் 7.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அங்குரார்ப்பண நிகழ்வு கிராமத்தின் வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சி.கந்தசாமி தலைமையில் நடைபெற்றபோது அதிதிகள் வரவேற்கப்படுவதையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச உதவி செயலாளர் திருமதி த.சத்தியகௌரி மங்கல விளக்கேற்றி வைப்பதையும். பிரதம அதிதி சோ.கணேசமூர்த்தி அடிக்கல் நடுவதையும், படங்களில் காணலாம்.

இத் திட்டத்தின் கீழ், சேமக்காலை வீதி, மற்றும் சிவன் கோவில் எல்லை வீதி என்பன கொங்கிறீற் வீதியாக மாற்றுவதற்கு தலா இரண்டு மில்லியனும், மரமால் வீதி, மற்றும் புலவர் வீதி முதலாம் குறுக்கு என்பனவற்றிற்கு கொங்கிறீற் இடுவதற்கும், சிவன் ஆலய திருப்பணிக்கு தலா ஒரு மில்லியனும், வீடு திருத்தத்திற்கு 0.3மில்லியனும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.















Post a Comment

0 Comments