Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வருகிறது இயற்கை தரவுகளுடனான தேசிய அடையாள அட்டை!

நாட்டு மக்கள் அனைவரினதும் தேசிய அடையாள அட்டையில் அவரவர் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் நோக்கில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக ஆட்பதிவு திணைக்களம் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார். பழைய தேசிய அடையாள அட்டையில் நிலவிய பல குறைப்பாடுகள் புதிய தேசிய அடையாள அட்டையின் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பழைய அடையாள அட்டை போன்று புகைப்படத்தை மாற்றுதல் அல்லது முத்திரையை நீக்கி தகவல்களை மாற்றுதல் போன்ற செயற்பாடுகளை புதிய அடையாள அட்டையில் செய்ய முடியாது என்றும் ஆணையாளர் நாயகம் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் குறிப்பிட்ட நபர்களின் தகவல்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே எதிர்காலத்தில் டீ.என்.ஏ தரவு அல்லது கைவிரல் அடையாளம் போன்ற இயற்கை தரவுகள் பயன்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் கை விரல் அடையாளம் மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சட்ட ரீதியில் அனுமதி கிடைத்திருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments