Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாழடைந்த கிணற்றில் யானைக்குட்டி! வவுனியாவில் சம்பவம்!!

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் யானைக்குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது.
கனகராஜன்குளத்திலுள்ள பெரியகுளம் பகுதியில் நேற்றிரவு நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னர் உயிருக்குப் போராடும் குறித்த யானைக்குட்டியை மீட்கும் பணிகள் தற்பொழுது
இடம்பெற்றுவருகின்றன.
குறித்த பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றிலேயே இந்த யானை குட்டி தவறி வீழ்ந்துள்ளது.
இதையடுத்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி பாரம்தூக்கியின் உதவியுடன் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கனகராஜன்குளம் பொலிசார், வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments