மட்டக்களப்பு - ஆரையம்பதியைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகரின் மகள் டெங்கினால் மரணம்!

Monday, April 30, 2018

மட்டக்களப்பு- ஆரையம்பதியைச் சேர்ந்த, வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலை மாணவி சபாநாதன் ஜதுர்ஸ்ரிக்கா, டெங்குத் தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த மாணவி, பொதுச் சுகாதார பரிசோதகர் சபாநாதனின் மகள் ஆவார். கடந்த 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி 1இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜதுர்ஸ்ரிக்கா (வயது 17), சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
READ MORE | comments

அபாயா சர்ச்சை குறித்து சம்பந்தனின் அதிரடி கருத்து

Sunday, April 29, 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சு நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைமார் 'அபாயா' அணிவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் பாடசாலை சுமார் 150 வருட பாரம்பரிய வரலாறைக் கொண்டது.
அந்த நாட்களில் திருகோணமலையில் உள்ள இந்து மகளிருக்கு ஒரு பாடசாலை தேவையென சைவ இந்துப் பெரியார்களும் நலன்விரும்பிகளும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட தனியார் பாடசாலை இது.
எனவே, அதற்கென உள்ள சம்பிரதாயங்கள் மதிக்கப்படவேண்டும் எனப் பெற்றோரும் பாடசாலை சமூகமும் விரும்புகின்றது. அந்தப் பாடசாலைக்கென உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரியம் மரபுகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். இந்த விடயங்கள் பேசப்பட்டு நிதானமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
எத்தனையோ சகாப்தங்களாக இருக்கும் நடைமுறையை திடீரென மாற்றிவிட முடியாது. எனவே, பேசி சில விடயங்களுக்குத் தீர்வை நாம் காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

சித்தாண்டியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு


ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி உதயன்மூலையில் உள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உதயன்மூலைக் கிராமத்தில் வசிக்கும் கே. கலைச்செல்வி (வயது 23) என்பவரின் சடலமே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலம் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு.!

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka
READ MORE | comments

யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் விடுதலை: மட்டக்களப்பில் ஐவர் விடுதலை


வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்து 6 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 432 சிறைக்கைதிகளுக்கு இன்று விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ். சிறைச்சாலையில் சிறு தவறுகளுக்காகவும், தண்டப்பணம் செலுத்த முடியாமலும் இருந்த 6 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.




மேலும், ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 432 கைதிகள் விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் 5 கைதிகள் விடுதலை
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிணை பணத்தை செலுத்த முடியாமல் போனவர்கள் மற்றும் சிறிய குற்றங்களை செய்து சிறையில் இருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அக்பர், மதத்தலைவர்கள் மற்றும் கைதிகளின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு செய்திகள் - ஸ்டீபன்
READ MORE | comments

மட்டக்களப்பு எருவில் கிராமத்தின் பழம்பெரும் இடமான கொம்பு சந்தியில் சிரமதானப்பணி

எருவில் கிராமத்தில் உள்ள பழம்பெரும் இடமான கொம்பு சந்தியில் உள்ள தர்மக்கிணற்றடி பிரதேசத்தில் சமூர்த்தி உத்தியோகத்தரின் தலைமையில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக நேற்று இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அண்மையில் எருவில் கிராமத்திற்கு வருகை தந்திருந்தபோது எருவில் கிராமத்தில் இதுவரை காலமாக அபிவிருத்தி காணாமல் உள்ள பல வீதிகள், மைதானம், வாசிகசாலை போன்ற பல விடயங்களை பார்வையிட்டார்.
அதன்போது எருவில் கிராமத்தின் பாரம்பரியத்தினை எடுத்துக்காட்டும் இடங்கள் பற்றி கூறியபோது அதனை மீள் புனரமைப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு அமைவாக கொம்பு முறி சந்தி (கொம்புச்சந்தி) அதன் அருகில் உள்ள தர்மக்கிணற்றடி இடம் போன்றவற்றின் வரலாறுகளைப்பற்றி எடுத்துக்கூறியபோது இந்த இடங்களை சிரமதானம் செய்து பாரம்பரியங்களை கட்டிக்காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைவாக நேற்று சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.




READ MORE | comments

யானையுடன் லொறி மோதி விபத்து


மஹியங்கனை – கிராதுருகோட்டை பிரதான வீதி ஹத்தன்னாவ பிரதேசத்தில் 27.04.2018 அன்று இரவு சிறிய ரக லொறி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மெதிரிகிரிய – திவுலன்கடவல பிரதேசத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி சாரதி எதிரே வந்த யானையை கண்டவுடன் லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த பொழுது இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில் லொறியில் 13 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் காட்டு யானையின் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்பட்ட போதிலும் இதனால் பல விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலய வருடாந்த மஹோற்வத்தின் ரதோற்சவ நிகழ்வு

(வேணு)

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்வத்தின் சிறப்புத் திருவிழாவான ரதோற்சவ நிகழ்வு இன்று காலை கொடிஸ்தம்ப அபிஷேகம்  மூலவர் பூஜை வசந்த மண்டப பூஜையின் பின் அடியார்களின் அரோகரா கோசத்துடன் வடம் பிடித்தால் வாழ்வு சிறக்கும் எனும் முதுமொழிக்கமைவாக சிறப்பாக இடம்பெற்றது.

இவ்வாலய உற்சவத்தின் கொடியேற்ற   நிகழ்வு கடந்த 20ம் திகதி இடம்பெற்றது.தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று இன்று அலங்கரிக்கப்பட்ட தேரினில் விநாயகப் பெருமான் மேள வாத்தியம் முழங்க அடியார்களின் கற்பூரச் சட்டி நேர்த்திக்கடனுடன் உள்வீதி வலம் இடம்பெற்று அதன் பின் எம்பெருமான் 10 வருடங்களின் பின் ரதத்தில் ஏறி ஆலயத்தின் வெளி வீதி வலம் வந்தார்.

ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள் தலைமையில் இன்றைய தேர்த் திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் வடத்தினைப் பிடித்து இழுத்த தமதுநேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.

READ MORE | comments

சீனாவில் கத்திக்குத்தில் ஒன்பது மாணவர்கள் கொலை


சீனாவின் வடபகுதியில் நபர் ஒருவர்; ஓன்பது மாணவர்களை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் தான் கல்விகற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு பழிவாங்குவதற்காக இந்த மாணவன் கத்திக்குத்தில் ஈடுபட்டதாகவும் இதன் போது ஒன்பது மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சான்ஜி பிராந்தியத்தில் உள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

28 வயது முன்னாள் மாணவனே இந்த கொலைகளை செய்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர் குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் மாணவிகள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலமாணவர்கள் நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தாக்கப்பட்டவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக சீனாவில் கத்திகுத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
READ MORE | comments

இலங்கை அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா


உண்மை மற்­றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்­தின் தலை­ வ­ரும் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் முன்­னாள் நிபு­ண­ரு­மான யஸ்­மின் சூகா விடம், இலங்­கைக்­குப் பய­ணம் செய்­யு­மாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிரா­க­ரித் துள்­ளார் என்று சிங்­கள ஊட­கம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை சர்ப்பிக்க முன்னாள் ஐ. நா செயலாளர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழுவின் முக்கிய உறுப்பினராக சூகா இடம்பெற்றிருந்தார். இந்த அறிக்கையில் இலங்கை அரச படை­யி­னர் 40 ஆயி­ரம் அப்­பா­வித் தமிழ் மக்­க­ளைக் கொன்று குவித்­த­னர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் தொடர்ந்தும் அவர் இலங்கை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தகவல் வெளியிட்டுவருகிறார்.
அடுத்­த­மா­தம் அவர் பய­ணம் செய்­வார் என்­றும் கூறப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தான் இலங்­கைக்­குப் பய­ணம் செய்­தால் எதிர்ப்­புக் கிளம்­பும் என்­ப­தால் அவர் பய­ணத்தை ஒத்­தி­வைத்­தார் என்று அந்த ஊட­கம் குறிப்­பிட்­டுள்­ளது.
READ MORE | comments

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுபவர் இவர்தானாம்


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என கட்சியின் புதிய செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியில் நடக்க வேண்டிய மறுசீரமைப்புகள் முறையாக நடக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி களமிறக்கப்படுவார் என சுதந்திரக் கட்சியினர் இதற்கு முன்னர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)
READ MORE | comments

கல்முனை தமிழ் இளைஞர் சேனை விடுக்கும் கண்டன அறிக்கை




தமிழ் இளைஞர் சேனை விடுக்கும் கண்டன அறிக்கை.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி விடயம் தொடர்பில் அகில இலங்கை தௌகீத் ஜமாத் எனும் அமைப்பினால் சம்மாந்துறையில் 'இன நல்லுறவினை சீர்குலைப்பதற்கு எதிராக' எனும் தொனியில் என கூறப்பட்டு நடைபெற்ற   ஆர்பாட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன தாய்மார்களும், பெண்களும், சகோதரிகளும் பாரம்பரியமாக அணித்து வரும் சேலையினை 'உலக மகா ஆபாச ஆடை சேலை' என சித்தரித்து பாதாதைகளை இட்டு எமது நாட்டுப் பெண்கள் அணியும்  ஆடையினை கேவலமாக சித்தரித்தமைக்கு எதிராக தமிழ் இளைஞர் சேனை தமது வன்மையான கண்டணத்தினை தெரிவிக்கின்றது.



 இலங்கையில் மூவினங்களும் தொன்று தொட்டு அணியும் பாரம்பரிய கலாசார  ஆடையினை (சேலை) ஒரு இனத்தின் கலாசார குறியீடாக அடையாளப்படுத்தி அதனை கொச்சப்படுத்தும் அறிவீனத்தினை நினைத்து நாம் வருந்துகின்றோம்.



ஒரு இடத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு உரிமை மீறப்படின், உணர்வு புண்படுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பில் ஜனநாயக ரீதியில் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்ப்பவர்களல்ல, எனினும் ஒட்டுமொத்த பெண்களின் மானம் காக்கும் சேலையினை 'உலக மகா ஆபாச ஆடை சேலை' என சித்தரித்தமை எமது  நாட்டின் ஒட்டு மொத்தப் பெண்களையும் பாரம்பரியத்தையும்  கொச்சைப்படுத்திய செயலாகும், இந்த கீழ்த்தரமான செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என்பதனை சுட்டிக்காட்டுக்கின்றோம்.



எனவே உண்மையான நோக்கத்தினை சீர்குலைத்து பாதாதைகளை இட்டமையினை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலாவது குரோத மனப்பான்மையை களைந்து  சிந்தித்து செயலாற்ற வேண்டுமென அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.





தமிழ் இளைஞர் சேனை

கல்முனை பிராந்தியம்
READ MORE | comments

சிங்களவர்களுக்கு வாழ்த்துக் கூறாத கனேடியப் பிரதமர்! - பாதுகாப்பு ஆலோசகர் குற்றச்சாட்டு

Friday, April 27, 2018


கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே, இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டேனியல் ஜேன் குற்றம்சாட்டியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடேவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளில் தமிழ் மக்களுக்கு மாத்திரமே வாழ்த்து கூறப்பட்டிருப்பதாகவும், பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை அவர் புறக்கணித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதன் ஊடாக கனடாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த நிலையில், எதிர்வரும் விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு, சிங்கள பௌத்த மக்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் அனுப்ப வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பதில் வழங்கியுள்ள கனடாவின் பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடைபிடித்த நடைமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்:

தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக நடைபெற உதவும். பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது, கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
நீரில் ஊற வைத்து பாதாமை சாப்பிடும் போது, இரத்தத்தில் உள்ள ஆல்பா டோகோபெரோல் என்னும் பொருள் அதிகரித்து, இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படும். பாதாமில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
நீரில் ஊற வைத்த பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கும். இது ப்ரீராடிக்கல்களை எதிர்த்து, முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போடும்.
பல ஆய்வுகளில் ஊற வைத்து சாப்பிடும் பாதாம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. ஊற வைத்த பாதாமில் வைட்டமின் பி17 என்னும் புற்றுநோயை எதிர்க்கும் முக்கிய சத்து உள்ளது. எனவே தினமும் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு வர புற்றுநோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
கர்ப்பிணி பெண்கள் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் போலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். போலிக் அமிலம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. இச்சத்து குறைவாக இருந்தால் தான் பிறப்பு குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும்.
READ MORE | comments

பாம்பு கடித்தால் மரணம் நிச்சயமில்லை.! தப்பிக்க வழி மட்டும் நிச்சயம்.

விஷப்பாம்புகளின் கடி அனைத்துமே உயிர் இழக்க செய்வதில்லை. விஷ பாம்பு கடியின் பாதிப்பு அது உடலில் செலுத்தும் விஷத்தை பொறுத்தே அமைகின்றது.
விஷப்பாம்புகளின் கடி அனைத்துமே உயிர் இழக்க செய்வதில்லை. விஷ பாம்பு கடியின் பாதிப்பு அது உடலில் செலுத்தும் விஷத்தை பொறுத்தே அமைகின்றது. பாம்பு கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தின் தாக்கத்தை காட்டிலும் பெரும்பாலும் அதிர்ச்சியினால் தான். பாம்பு கடியை பொருள்படுத்தாமல் விட்டுவிடுவதும் உயிருக்கு ஆபத்தானதாகும். பாம்பு கடியை பற்றியும் அதன் விஷத்தின் தன்மை பற்றியும் யாருக்கும் தெரியாத 5 உண்மைகளை பாப்ர்போம். நமது தமிழ் சினிமாக்களில் இப்படியான ஒரு காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதாவது யாராவது ஒரு நபரை பாம்பு கடித்துவிட அவர் உடனே மயங்கி விழுந்துவிடுவார். சிறிது நேரத்தில் பொங்கல் பானை பொங்குவது போல் அவரது வாயிலிருந்து வெள்ளையாக நிறைய நுரை பொங்கி வலியும். உண்மையில் பாம்பு கடித்ததும் இவ்வாறு வாயிலிருந்து நுரை வெளியேறுமா என்றால் நாம் சினிமாவில் பார்த்தது போல் வருவதில்லை. ஒருவரை பாம்பு கடித்ததும் உடலுக்குள் செல்லும் விஷத்தின் தாக்கம் அதிகமாகும்போது பாதிக்கப்பட்டவரின் வாயிலிருந்து வரும் வெள்ளை நிற திரவம் அவரது உமிழ் நீரே ஆகும். விஷப்பாம்பு வகைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷ தன்மையை கொண்டிருக்கின்றன.
அதில் ஒன்று தான் neurotoxic எனப்படும் இந்த விஷமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீர்குலைத்து உடலை மரத்து போக செய்ய ஆரம்பிக்கும். இதன் விளைவாக நாக்கும் உணர்வின்மையை அடைந்து வாய்க்குள் இருந்து உமிழ் நீர் வெளிவருவதை கட்டுப்படுத்தும் திறனை இழக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் வாய்க்கும் தேங்கி இருக்கும் உமிழ் நீரானது கட்டுப்பாடின்றி சிறு குமிழ்களோடு வெளியேறுகிறது. அதாவது சிறு குழந்தைகள் வாயிலிருந்து வரும் உமிழ்நீர் நுரையை போல. சினிமாவில் காட்டுவது போல் அடர்த்தியான நுரை எல்லாம் வெளியாகாது. பாம்பு விஷத்தில் 4 வகைகள் உள்ளன, அவை hemotoxic, myotoxic, cytotoxic மற்றும் neurotoxic ஆகியவையாகும்.
இதில் hemotoxic விஷமானது ரத்தத்தை உறையவைக்கும் தன்மையுடையதாகும். இந்த விஷத்தை கொண்ட பாம்பு மனிதரை கடித்தால், மனிதருக்கு கடும் ரத்த கசிவும், இதயம் செயலிழந்துவிடும், அதனால் மரணம் ஏற்பட்டுவிடும். இந்த வகையான விஷத்தை ஏராளமான பாம்பு வகைகள் கொடுள்ளதாம். myotoxic விஷமானது தசை திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி சிறுநீரகம் மற்றும் இதயத்தை செயலிழக்க செய்துவிடும். இந்த விஷத்தை rattle snake என்ற பாம்பும் சில வகை கடல் பாம்புகள் கொண்டுள்ளதாம்.
cytotoxic விஷமானது செல்களை அளிக்கக்கூடியது. மேலும், ரத்த நாளங்களையும் திசுக்களையும் பாதிப்படையச் செய்யும். இந்த வகையான பாம்பு கடித்தால் மனிதருக்கு ரத்த கசிவும், வலியுடன் கூடிய வீக்கமும் இருக்கும். பின்னர் கடித்த இடத்தில் சிவப்பு கொப்பளங்கள் உருவாகி, அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை குறைத்து அவ்விடத்தை கறுப்பாகும். சிலமணி நேரங்களுக்குள் சிகிச்சை அளிக்க தவறினால் பாம்பு கடித்த கையோ காலோ துண்டிக்கவேண்டியதாகிவிடும்.
cytotoxic என்னும் விஷத்தை puff adder என்னும் பாம்பு இனம் கொண்டுள்ளது. மற்றொரு கொடிய பாம்பு விஷம் neurotoxic விஷமாகும். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதன் காரணமாக மூளையிலிருந்து தசைகளுக்கு அனுப்பப்படும் நரம்பு தூண்டுதல்கள் தடுக்கப்படுகின்றது. சிகிச்சை அளிக்க தவறினால் உடல் இயக்கத்தை முடம்மாக்கி இறுதியில், சுவாசம் மற்றும் இதயம் செயலிழப்பை ஏற்படுத்தி, மரணத்தை கொடுக்கும். ராஜா நாகம் போன்ற பாம்பு இனம் இந்த மாதிரியான விஷங்களை கொண்டிருக்கிறது.
சில நேரங்களில் விஷ பம்புகள் கடித்தாலும், விஷத்தை உட்செலுத்துவதில்லை. இதனை dry bite(விஷமில்லாத விஷ பாம்பு கடி) என்று கூறுவார்கள். தங்களது விலைமதிப்பில்லாத விஷத்தை தேவையில்லாமல் வீணாக்க விரும்பாத பாம்புகள் சிலவற்றை கடிக்கும்போது விஷத்தை பயன்படுத்தாமல் கடித்து மட்டும் வைக்கின்றன. பாம்பு கடித்த பற்களின் தடம் இருந்தாலும் விஷத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் பாம்பு கடித்தவுடன் மருத்துவரிடம் செல்வது நல்லது.
READ MORE | comments

வவுனியாவில் ஆசிரியை தாக்கி மாணவன் காயம்!

Thursday, April 26, 2018

வவுனியாவில் வீட்டில் தனிப்பட்ட வகுப்புக்களை நடத்தும் ஆசிரியை ஒருவர் 9 வயதுச் சிறுவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட சிறுவன் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் வகுப்புக்கு வராத காரணத்தால் சிறுவனை ஆசிரியை தாக்கினார் என்று கூறப்படுகிறது. சிறுவனின் மூக்கிலும், காதிலும் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறுவனின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
READ MORE | comments

2 மணிக்கு பின்னர் மழை : இடி மின்னல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்


நாட்டில் பிற்பகல் வேளையில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில பிரதேசங்களில் குறிப்பாக மேற்கு , சப்ரகமுவ, மத்திய , தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சுமர் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென்கிழக்கு மாகாணங்களின் கடற்கரையோரப்பகுதிகளில் காலை வேளைகளிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக அப் பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. -(3)
READ MORE | comments

தனியார் துறை ஊழியர்களுக்கு 7ஆம் திகதியே விடுமுறை


மே முதலாம் திகதிக்குறிய மேதின விடுமுறை மே 7ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளமையினால் தனியார் துறை ஊழியர்களுக்கும் மே 7ஆம் திகதியே விடுமுறை வழங்கப்படுமென தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

29 , 30ஆம் திகதிகளில் வெசாக் தின நிகழ்வுகள் நடைபெறுகின்மையினால் முதலாம் திகதிக்குறிய அரச விடுமுறை தினம் 7ஆம் திகதிக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -(3)
READ MORE | comments

நகைகளை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்கவும்


நகைகளை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு தேநிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது தங்கத்திற்கான இறக்குமதி தீர்வை அறவிடப்படுவதால் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் தரமற்ற தங்கத்தை பயன்படுத்தி நகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படலாம். இது குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டுமென்பதுடன் தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் தர முத்திரை இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அந்த சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான 15 வீத வரியை அறவிட அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது. இதனால் ஒரு பவுன் நிறையுடைய 22கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் தற்போது சந்தையில் 58,000 ரூபா வரை தங்கத்தின் விலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.-(3)
READ MORE | comments

மதுபான நிலையங்களுக்கு பூட்டு : இறைச்சி கடைகளுக்கும் பூட்டு!


வெசாக் போயாவை முன்னிட்டு எதிர்வரும் 29 , 30ஆம் திகதிகளில் நாடு பூராகவும் சகல மதுபான சாலைகளும் மற்றும் மீன் , இறைச்சி கடைகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பல்பொருள் அங்காடிகளில் மது விற்பனைகள் மற்றும் இறைச்சி , மீன் விற்பனைகள் ஆகியன இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.-(3)
READ MORE | comments

மாகாணசபைத் தேர்தலை நடத்த 4 மாற்றுவழிகள்!

Wednesday, April 25, 2018

மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது மக்கள் பிரதிநிதிகளினது பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடக செய்திகள் பற்றிய உறுதிப்படுத்தல் அறிக்கையை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நான்கு மாற்றுவழிகள் உள்ளன. இந்த நான்கு வழிகளில் ஒன்றை தெரிவு செய்து பாராளுமன்றம் அங்கீகரிக்குமாயின் ஏற்கனவே கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகள் மற்றும் எதிர்வரும் செப்டெம்பரில் முடியவுள்ள மூன்று மாகாண சபைகள் உள்ளடங்கலாக ஆறு மாகாண சபைகளின் தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்த முடியும்.
மாகாணசபைத் தேர்தல்களை தேர்தல்கள் ஆணைக்குழு இழுத்தடிக்கவில்லை. தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு மக்களின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு உள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் பாராளுமன்றத்தில் காணப்படும் சட்டசிக்கல்களை நீக்குவதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத கட்சிகள் என சகல கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பட்டுள்ளன.
கடந்த வருடம் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணசபைகளின் ஆயுட்காலங்கள் முடிவடைந்தன. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவற்றுக்கான வேட்புமனுக்களைக் கோர தயாரான நிலையிலேயே பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த திருத்தமும் உள்ளடக்கப்பட்டது. சட்டத்திருத்தத்துக்கு அமைய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை பெப்ரவரி மாதம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுக்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகளுக்கே உள்ளது. தேர்தல் முறையை மாற்றும் அதிகாரம் எதுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. பாராளுமன்றமே தேர்தல் முறை பற்றிய தீர்மானங்களை எடுக்கிறது. அங்கு முடிவொன்றை எடுத்து இந்தத் தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் யாழ் வீரர்கள் ஆதிக்கம், சாதனை படைத்தார் புவிதரன்"


கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வட மாகாண வீரர்கள் சாதனைகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆ. புவிதரன், 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய சாதனை நிகழ்த்தினார்.
கடும் வெயிலுக்கு மத்தியில் தனது தன்னம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி முன்னோக்கிச் சென்ற புவிதரன், அடுத்த இலக்காக 4.70 உயரத்தை தெரிவு செய்தார். எனினும், இந்த சுற்றின் முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய புவிதரன், 3ஆவது முயற்சியை வெற்றிகரமாகக் கடந்து தனது சொந்த சாதனையை மறுபடியும் புதுப்பித்தார்.தொடர்ந்து இதே வெற்றிக் களிப்புடன் அடுத்த இலக்காக 4.75 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த போதிலும் அவரால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனது.
போட்டியின் ஆரம்பத்தில் 4.10, 4.20 மற்றும் 4.30 மீற்றர் உயரங்களை படிப்படியாகத் தாவிய புவிதரன், 4.40 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு மேற்கொண்ட கடைசி முயற்சியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து 4.50 மீற்றர் உயரத்தை 2ஆவது முயற்சியிலேயே வெற்றிகரமாக தாவிய அவர், 4.62 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியில் வெற்றிகொண்டு 2017இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு விழாவில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனால் (3.61 மீற்றர்) நிலைநாட்டிய போட்டி சாதனையை முறியடித்தார்.
இறுதியில் முதல் தடவையாக 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்குபற்றி 4.70 மீற்றர் உயரத்தைத் தாவிய புவிதரன், போட்டி சாதனையுடன் முதலிடத்தைப் பெற்று அசத்தினார். முன்னதாக கடந்த இரு வருடங்களாக அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாக்களில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றியிருந்த புவிதரன் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். கபில்ஷன் (4.20 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஜதூஷன் (4.10 மீற்றர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.(15puvithran-polevolt-250418-seithy (2)
READ MORE | comments

நீர்­வே­லி­யில் 15 வயது மாணவன் தூக்கில் தொங்கி மரணம்


தவ­றான முடி­வெ­டுத்து தூக்­கில் தொங்­கிய 15 வயது மாண­வன் மீட்­கப்­பட்டு கோப்­பாய் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­போ­தும் மாண­வன் உயி­ரி­ழந்து விட்­டார் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணம் நீர்­வே­லி­யில் நடந்­துள்­ளது. நீர்­வேலி தெற்கு நீர்­வே­லி­யைச் சேர்ந்த பிரா­பா­ர­க­ரன் துபா­ர­க­ரன் (வயது-15) என்ற மாண­வனே உயி­ரி­ழந்­துள்­ளார்.
READ MORE | comments

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5432 பேர் இணைப்பு


அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் புதிதாக 5432 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரச முகாமைத்துவ நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் திருமதி கே.பி.எம். கமகே தெரிவித்தார்.

இதற்கமைவாக வரையறுக்கப்பட்ட பிரிவில் இந்த சேவைக்காக 1377 பேரும் பகிரங்க போட்டிப் பரீட்சையின் மூலம் 4550 பேரும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கடந்த வருடத்தில் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் அரச முகாமைத்துவ சேவையில் 6139 வெற்றிடங்கள் காணப்பட்டன. -(3)
READ MORE | comments

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்


கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

பாடசாலையை விட்டு விலகி உள்ளவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ண்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவராக இருந்துகொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்ட விரோத செயலாகும். இந்த விடயம் தெரியவந்தால், அவர்கள் பரீட்சை தடைக்கு உள்ளாக நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)
READ MORE | comments

சாவகச்சேரி இந்துக் கல்லூரி வீராங்கனை டக்சிதா புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்

Tuesday, April 24, 2018


கொழும்பு சுக­ததாஸ மைதா­னத்­தில் இடம்பெறும் இளை­யோ­ருக்­கான தேசி­ய­மட்ட கோலூன்­றிப் பாய்­த­லில் 18 வய­துப் பெண்­கள் பிரி­வில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த நே. டக்­சிதா 3.02 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து புதிய சாத­னை­யைப் பதிவு செய்து தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த ஹெரீனா 2.90 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.
கடந்த வரு­டம் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த ஹெரீனா 3.01 மீற்­றர் பாய்ந்து படைத்­தி­ருந்த சாத­னை­யையே இவர் முறி­ய­டித்­தார்.(15)
READ MORE | comments

அரச நிர்வாக முடக்கப் போராட்டம்

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளைக் காத்திரமாக முன் னெடுப்பதற்கு நல்லாட்சி அரசு தவறும் பட்சத்தில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்குப் பிரதேசம் எங்கும் அரச நிர்வா கத்தை முடக்கிப் போராட்டம் நடத்துவோம் என்று நல்லாட்சி அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் கூட்ட மைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.
மக்கள் பங்களிப்புடன் அறவழிப்பட்ட  ஆயுதம் தூக்காத   ஒரு போராட்டத்துக்குத் தயார் எனக் கோடி காட்டுகிறார் அவர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் சுமார் இரண்டு லட்சத் துக்கும் மேற்பட்ட தனது ஆதரவு வாக்குகளை உள்ளூராட்சித் தேர்தலில் இழந்து, அரசியல் வறுமையை  வெறுமையை  சூனியத்தை  நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் கூட்ட மைப்பை அடுத்து அது எதிர்கொள்ள வேண்டிய மாகாண
சபைத் தேர்தலுக்கு முன்னர் தூக்கி நிறுத்துவதற்கு அதன் தலைவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்று அங்க லாய்துக் கொண்டிருந்தோம்.
ஆனால்,சுமந்திரன் அதற்கான மார்க்கத்துக்கு வழி வகுத்து விட்டார், காய் நகர்த்தல்களை ஆரம்பித்து விட்டார் என்றே தோன்றுகின்றது.
அவரது கருத்துப்படி  பார்த்தால் ‘அரச நிர்வாக முடக்கம்’ என்ற போராட்ட முஸ்தீபு ஆரவாரத்தை இந்த ஆண்டு இறுதி வரை பிரச்சினையின்றிக் கொண்டிழுக்க முடியும். ஆனால், உண்மையில் இப்படி அறவழிப் போராட்டத்தில்  சட்டமறுப்பு இயக் கத்தில்  ஈடுபட தமிழரசு அல்லது கூட்டமைப்புத் தலைவர்கள் தயாரா என்பதுதான்  கேள்வி.
ஜனநாயக வாக்களிப்பின் பரிசாகவும், வெகுமதியாகவும் கிட்டிய பதவிகள், பவிசுகள், வசதிகள், ஆரவார எடுப்புக்கள், கூடவே எடுபிடிகள் என்பவை எல்லாவற்றையும் அனுபவித்த நமது அரசியல் தலைவர்கள் அவற்றை விட்டிறங்கி வந்து இப்படி அறவழிப் போராட்டம் நடத்தவும், சிறைகளை நிறைக் கவும், அதனால் தங்களது பதவி, பவிசுகளை பறிகொடுக் கவும், சில சமயம் உடல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்ள வும் தயாரா என்பதும் நியாயமான சந்தேகமே.
பதவிகளைப் பெறப் போட்டிபோட்டு, அவற்றைப் பெற்றதும் அவற்றின் மூலம் அரசியல் வியாபாரம் நடத்தும் தலைவர்கள் தமது மக்களுக்காக நியாயமான போராட்டங்களில் துணிச் சலுடன் இறங்குவார்களா என்பதும் ஐயமே.
சுமந்திரன் இப்போது அறிவித்திருப்பது வெறும் ஒரு நாளைக்கு கண் துடைப்பாக நடத்தும் அடையாள உண்ணா விரதப் போராட்டம் அல்ல. அல்லது இப்போது நில மீட்புக்காக வும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிக் கண்டறியவும் நடத்தப்படும் போராட்டங்கள் போல நீண்ட காலத் துக்கு ஒரு கொட்டகைகளில் அமர்ந்திருக்கும் நடவடிக்கை யும் அல்ல.
இது  வித்தியாசமானது. வியத்தகு வகையில் முன் னெடுக் கப்பட வேண்டியது. அரச நிர்வாக முடக்கம் என்பது  தமிழர் களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்றைய தலை முறைக்கு புதிதானதாகவும் புதிரானதாகவும் இருக்கலாம்.  ஆனால் இதே  தமிழரசின் முன்னைய தலைவர்கள் பெரும் சாதனையாகச் சாதித்துக் காட்டிய உயரிய மார்க்கம் அது.
1956 ஜூன் 5 ஆம் திகதி காலையில் கொழும்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வரப் பட்ட போது அப்போதைய தமிழரசுக் கட்சித் தலைவர்களால் நாடாளுமன்றத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஒத்தது அது. வன்செயலற்ற, அமைதியான, அறவயப்பட்ட, காந்தீய மார்க்கத்தில் நெறிக் கப்பட்ட, அகிம்சை வழிப்பட்ட ‘குந்துமறியல்’ போராட்டமாக அது முகிழ்ந்தது. அதன் விளைவாக சிங்களக் காடையர்களின் கண்மூடித்தனமான கொடூரத் தாக்குதல்களை அந்தத் தமிழ ரசுக் கட்சித் தலைவர்கள் எதிர்கொண்டனர். கட்டுப்போட்ட காயங்களோடு, இரத்தம் சொட்டச்சொட்ட, ‘யுத்தத்தில் காய மடைந்த வீரர்களாக’  அதன் பின்னரும் அவர்கள் நாடாளுமன்றுக்குள்   புகுந்து, சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக ‘தமிழ்ப் புலிகளாக’ உறுமினார்கள். அது வரலாறு.
தமிழர் தாயக மண்ணில் சிங்கள் அரசின் நிர்வாகத்தை அறவயப்பட்ட போராட்ட வழிமுறைகள் மூலம் நிலைகுலையச் செய்து, ஆட்சியைச் சீர்குலைத்து, தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை  வேணவாவை  முழு இலங்கைத் தீவுக்கும் சர்வதேசத்துக்கும் செவிமடுக்கவைத்த மகத்தான பணி இனிமேல்தான் செய்யப்படப் போவதல்ல. தந்தை செல் வாவின் வழி காட்டலில் 1961 முற்பகுதியில் தமிழரசுக் கட்சித் தலைவர்களே அதனைச் செய்து காட்டியுமுள்ளனர்.
தமிழ் மக்களின் மாபெரும் வெகுசனப் பொங்குணர்வாக வும், அரச பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அறவழிப்பட்ட தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாகவும் அது அப்போது கட்டவிழ்ந்தது.
1961 பெப்ரவரி 20இல் ஆரம்பமான அந்த ஒத்துழையாமை இயக்கம் சுமார் 3 மாத காலம் நீடித்தது. பல்லாயிரம் தமிழர் கள் வீதிக்கு இறங்கித் தமது கொதிப்புணர்வை ஒன்று சேர்த்து வெளிப்படுத்தினர். வடக்கு, கிழக்கில் அரச இயந் திரம் முற்றாகச் செயலிழந்து, ஸ்தம்பித்து, முடங்கியது. தமிழர் தாயகத்தின் சகல பகுதிகளிலும் அரசின் ஆணை ஆற்றலிழந்தது.  வரலாறு காணாத அந்த மாபெரும் அற வழிப்போராட்டம்  ஆயுத வழி  அடக்குமுறை மூலம் முறியடிக்கப்பட்டது.
அதன் விளைவாகத்தான் தமிழர் தாயகத்தில் ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்து முழு இலங்கைத் தீவுமே இரத்தத் தில் தோயும் அவலம் நேர்ந்தது.
தந்தை செல்வா தலைமையில் அந்த தமிழரசுத் தலை வர்கள் முன்னெடுத்த அந்த காந்தீய மார்க்க உணர் வெழுச் சியை இந்தத் தமிழரசுத் தலைவர்களால் அதே உயர்வில் வழிப்படுத்தி, நெறிப்படுத்த முடியுமா ? சந்தேகம்தான்.
ஆசிரியர் தலையங்கம்
‘காலைக்கதிர்’
READ MORE | comments

வித்தியாவின் சகோதரிக்கு தொழில்வாய்ப்பு


படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் ஜனாதிபதி அவர்கள் வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பிரபல திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். -(3)
READ MORE | comments

டொலரின் பெறுமதி 158 ரூபாவை தாண்டியது


இலங்கையில் டொலரின் பெறுமதி வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்று 158.69 ரூபாவாக காணப்படுகின்றது.
READ MORE | comments

நோர்வூட் பகுதியில் பஸ் விபத்து : பலர் காயம்

Monday, April 23, 2018


ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெலிகம பகுதியில் இ.போ.ச பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி தடம் புரண்டதால் 29 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இன்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாமிமலை நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக வேகத்துடன் பயணித்த நிலையிலேயே பஸ் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)ACCIDENT (1) ACCIDENT (6) ACCIDENT DSC01876 DSC01879
READ MORE | comments

பிரிட்டனின் அரச குடும்பத்திற்கு இன்று மற்றுமொரு ஆண் வாரிசு கிடைத்துள்ளது


இளவரசர் வில்லியம் கேட் மிடெல்டன் தம்பதிபதிகளிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் வில்லியமின் மனைவி கேட்மிடில்டன் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்று காலை அவர் காரில் லண்டனின் படிங்டனில் உள்ள சென்மேரிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையிலேயே ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அரண்மனை அறிவித்துள்ளது.

தாய் சேய் நலமாகயிருப்பதாகவும் அரண்மணை அறிவித்துள்ளது.

இன்று சென்ஜோர்ஜ் தினம் என்பதும் சேக்ஸ்பியரின் பிறந்த தினம் என்பது அரண்மனை வட்டாரங்களை மேலும் குதூகலப்படுத்தியுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

சென்ஜோர்ஜ் தினத்தில் அரண்மனைக்கு மற்றுமொரு வாரிசு கிடைத்துள்ளது என்பது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மட்டக்களப்பு செங்கலடியில் 18 வயது இளைஞனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டது



மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில், 18 வயது இளைஞனிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் 800 மாத்திரைகள் மற்றும் 5 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்கப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செங்கலடிச் சந்தியில் வைத்து வழி மறித்து திடீர் சோதனைக்குட்படுத்திய போதே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் வாழைச்சேனை அஸ்ஹர் பாடசாலை வீதியை அண்டி வாழ்பவர் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்த மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

குறித்த இளைஞனிடம் தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார், குறித்த போதைப் பொருள் கொள்வனவு, விற்பனை மற்றும் நுகர்வு வலைப்பின்னலைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.



செங்கலடியில் 18 வயது இளைஞனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கைப்பற்றப்பட்டது

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka
READ MORE | comments

நிலங்களை விடுவிக்குமாறு இரணைதீவுக்கு மக்கள் படகுகளில் படையெடுப்பு!

தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவு மக்கள் பல படகுகளில் இன்று காலை வெள்ளைக்கொடிகள் சகிதம் இரணைதீவுக்குச் சென்று போராட்டம் நடத்தினர். கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இரணைதீவு நிலத்தை விடுவிப்பதற்கான போராட்டம் ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
தங்களுடைய காணிகளைப் பார்ப்பதற்காகவும் அவற்றை விடுவிப்பது தொடர்பாக கடற்படையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காகவும் அருட்தந்தை, சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்பினர், ஊடகவியலாளர்கள் சகிதம் வௌ்ளைக் கொடியுடன் மக்கள் படகுகளில் இரணைமடுவை நோக்கி சென்றனர். “வாழ்வாதாரத்துக்காக முழுமையாக கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பில் தங்கியிருக்கும் இரணைதீவு மக்களுக்கு அவர்களது சொந்த காணிகளை இலங்கை கடற்படை கையளிக்க வேண்டும்” என்று இந்தக் குழுவினருடன் சென்றுள்ள பங்குத்தந்தை அருள்செல்வன் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |