Advertisement

Responsive Advertisement

யாழ்ப்பாணத்தில் ஆறு பேர் விடுதலை: மட்டக்களப்பில் ஐவர் விடுதலை


வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலையில் இருந்து 6 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 432 சிறைக்கைதிகளுக்கு இன்று விடுதலை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ். சிறைச்சாலையில் சிறு தவறுகளுக்காகவும், தண்டப்பணம் செலுத்த முடியாமலும் இருந்த 6 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.




மேலும், ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள 432 கைதிகள் விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் 5 கைதிகள் விடுதலை
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பிணை பணத்தை செலுத்த முடியாமல் போனவர்கள் மற்றும் சிறிய குற்றங்களை செய்து சிறையில் இருந்தவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அக்பர், மதத்தலைவர்கள் மற்றும் கைதிகளின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு செய்திகள் - ஸ்டீபன்

Post a Comment

0 Comments