விஷப்பாம்புகளின் கடி அனைத்துமே உயிர் இழக்க செய்வதில்லை. விஷ பாம்பு கடியின் பாதிப்பு அது உடலில் செலுத்தும் விஷத்தை பொறுத்தே அமைகின்றது.
|
விஷப்பாம்புகளின் கடி அனைத்துமே உயிர் இழக்க செய்வதில்லை. விஷ பாம்பு கடியின் பாதிப்பு அது உடலில் செலுத்தும் விஷத்தை பொறுத்தே அமைகின்றது. பாம்பு கடியால் ஏற்படும் பல மரணங்கள் விஷத்தின் தாக்கத்தை காட்டிலும் பெரும்பாலும் அதிர்ச்சியினால் தான். பாம்பு கடியை பொருள்படுத்தாமல் விட்டுவிடுவதும் உயிருக்கு ஆபத்தானதாகும். பாம்பு கடியை பற்றியும் அதன் விஷத்தின் தன்மை பற்றியும் யாருக்கும் தெரியாத 5 உண்மைகளை பாப்ர்போம். நமது தமிழ் சினிமாக்களில் இப்படியான ஒரு காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அதாவது யாராவது ஒரு நபரை பாம்பு கடித்துவிட அவர் உடனே மயங்கி விழுந்துவிடுவார். சிறிது நேரத்தில் பொங்கல் பானை பொங்குவது போல் அவரது வாயிலிருந்து வெள்ளையாக நிறைய நுரை பொங்கி வலியும். உண்மையில் பாம்பு கடித்ததும் இவ்வாறு வாயிலிருந்து நுரை வெளியேறுமா என்றால் நாம் சினிமாவில் பார்த்தது போல் வருவதில்லை. ஒருவரை பாம்பு கடித்ததும் உடலுக்குள் செல்லும் விஷத்தின் தாக்கம் அதிகமாகும்போது பாதிக்கப்பட்டவரின் வாயிலிருந்து வரும் வெள்ளை நிற திரவம் அவரது உமிழ் நீரே ஆகும். விஷப்பாம்பு வகைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விஷ தன்மையை கொண்டிருக்கின்றன.
அதில் ஒன்று தான் neurotoxic எனப்படும் இந்த விஷமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீர்குலைத்து உடலை மரத்து போக செய்ய ஆரம்பிக்கும். இதன் விளைவாக நாக்கும் உணர்வின்மையை அடைந்து வாய்க்குள் இருந்து உமிழ் நீர் வெளிவருவதை கட்டுப்படுத்தும் திறனை இழக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவரின் வாய்க்கும் தேங்கி இருக்கும் உமிழ் நீரானது கட்டுப்பாடின்றி சிறு குமிழ்களோடு வெளியேறுகிறது. அதாவது சிறு குழந்தைகள் வாயிலிருந்து வரும் உமிழ்நீர் நுரையை போல. சினிமாவில் காட்டுவது போல் அடர்த்தியான நுரை எல்லாம் வெளியாகாது. பாம்பு விஷத்தில் 4 வகைகள் உள்ளன, அவை hemotoxic, myotoxic, cytotoxic மற்றும் neurotoxic ஆகியவையாகும்.
இதில் hemotoxic விஷமானது ரத்தத்தை உறையவைக்கும் தன்மையுடையதாகும். இந்த விஷத்தை கொண்ட பாம்பு மனிதரை கடித்தால், மனிதருக்கு கடும் ரத்த கசிவும், இதயம் செயலிழந்துவிடும், அதனால் மரணம் ஏற்பட்டுவிடும். இந்த வகையான விஷத்தை ஏராளமான பாம்பு வகைகள் கொடுள்ளதாம். myotoxic விஷமானது தசை திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி சிறுநீரகம் மற்றும் இதயத்தை செயலிழக்க செய்துவிடும். இந்த விஷத்தை rattle snake என்ற பாம்பும் சில வகை கடல் பாம்புகள் கொண்டுள்ளதாம்.
cytotoxic விஷமானது செல்களை அளிக்கக்கூடியது. மேலும், ரத்த நாளங்களையும் திசுக்களையும் பாதிப்படையச் செய்யும். இந்த வகையான பாம்பு கடித்தால் மனிதருக்கு ரத்த கசிவும், வலியுடன் கூடிய வீக்கமும் இருக்கும். பின்னர் கடித்த இடத்தில் சிவப்பு கொப்பளங்கள் உருவாகி, அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை குறைத்து அவ்விடத்தை கறுப்பாகும். சிலமணி நேரங்களுக்குள் சிகிச்சை அளிக்க தவறினால் பாம்பு கடித்த கையோ காலோ துண்டிக்கவேண்டியதாகிவிடும்.
cytotoxic என்னும் விஷத்தை puff adder என்னும் பாம்பு இனம் கொண்டுள்ளது. மற்றொரு கொடிய பாம்பு விஷம் neurotoxic விஷமாகும். இது நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதன் காரணமாக மூளையிலிருந்து தசைகளுக்கு அனுப்பப்படும் நரம்பு தூண்டுதல்கள் தடுக்கப்படுகின்றது. சிகிச்சை அளிக்க தவறினால் உடல் இயக்கத்தை முடம்மாக்கி இறுதியில், சுவாசம் மற்றும் இதயம் செயலிழப்பை ஏற்படுத்தி, மரணத்தை கொடுக்கும். ராஜா நாகம் போன்ற பாம்பு இனம் இந்த மாதிரியான விஷங்களை கொண்டிருக்கிறது.
சில நேரங்களில் விஷ பம்புகள் கடித்தாலும், விஷத்தை உட்செலுத்துவதில்லை. இதனை dry bite(விஷமில்லாத விஷ பாம்பு கடி) என்று கூறுவார்கள். தங்களது விலைமதிப்பில்லாத விஷத்தை தேவையில்லாமல் வீணாக்க விரும்பாத பாம்புகள் சிலவற்றை கடிக்கும்போது விஷத்தை பயன்படுத்தாமல் கடித்து மட்டும் வைக்கின்றன. பாம்பு கடித்த பற்களின் தடம் இருந்தாலும் விஷத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும். இருந்தாலும் பாம்பு கடித்தவுடன் மருத்துவரிடம் செல்வது நல்லது.
|
0 Comments