Advertisement

Responsive Advertisement

56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் யாழ் வீரர்கள் ஆதிக்கம், சாதனை படைத்தார் புவிதரன்"


கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 2ஆவது நாளான நேற்று நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் வட மாகாண வீரர்கள் சாதனைகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆ. புவிதரன், 4.70 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய சாதனை நிகழ்த்தினார்.
கடும் வெயிலுக்கு மத்தியில் தனது தன்னம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி முன்னோக்கிச் சென்ற புவிதரன், அடுத்த இலக்காக 4.70 உயரத்தை தெரிவு செய்தார். எனினும், இந்த சுற்றின் முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய புவிதரன், 3ஆவது முயற்சியை வெற்றிகரமாகக் கடந்து தனது சொந்த சாதனையை மறுபடியும் புதுப்பித்தார்.தொடர்ந்து இதே வெற்றிக் களிப்புடன் அடுத்த இலக்காக 4.75 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த போதிலும் அவரால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனது.
போட்டியின் ஆரம்பத்தில் 4.10, 4.20 மற்றும் 4.30 மீற்றர் உயரங்களை படிப்படியாகத் தாவிய புவிதரன், 4.40 மீற்றர் உயரத்தை தாவுவதற்கு மேற்கொண்ட கடைசி முயற்சியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து 4.50 மீற்றர் உயரத்தை 2ஆவது முயற்சியிலேயே வெற்றிகரமாக தாவிய அவர், 4.62 மீற்றர் உயரத்தை முதல் முயற்சியில் வெற்றிகொண்டு 2017இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு விழாவில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த கே. நெப்தலி ஜொய்சனால் (3.61 மீற்றர்) நிலைநாட்டிய போட்டி சாதனையை முறியடித்தார்.
இறுதியில் முதல் தடவையாக 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்குபற்றி 4.70 மீற்றர் உயரத்தைத் தாவிய புவிதரன், போட்டி சாதனையுடன் முதலிடத்தைப் பெற்று அசத்தினார். முன்னதாக கடந்த இரு வருடங்களாக அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாக்களில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றியிருந்த புவிதரன் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் எஸ். கபில்ஷன் (4.20 மீற்றர்) இரண்டாவது இடத்தையும், யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஜதூஷன் (4.10 மீற்றர்) மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.(15puvithran-polevolt-250418-seithy (2)

Post a Comment

0 Comments