Advertisement

Responsive Advertisement

சீனாவில் கத்திக்குத்தில் ஒன்பது மாணவர்கள் கொலை


சீனாவின் வடபகுதியில் நபர் ஒருவர்; ஓன்பது மாணவர்களை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் தான் கல்விகற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு பழிவாங்குவதற்காக இந்த மாணவன் கத்திக்குத்தில் ஈடுபட்டதாகவும் இதன் போது ஒன்பது மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சான்ஜி பிராந்தியத்தில் உள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

28 வயது முன்னாள் மாணவனே இந்த கொலைகளை செய்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர் குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர் மாணவிகள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலமாணவர்கள் நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தாக்கப்பட்டவர்கள் அனைவரும் 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக சீனாவில் கத்திகுத்து சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Post a Comment

0 Comments