Home » » மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலய வருடாந்த மஹோற்வத்தின் ரதோற்சவ நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலய வருடாந்த மஹோற்வத்தின் ரதோற்சவ நிகழ்வு

(வேணு)

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்வத்தின் சிறப்புத் திருவிழாவான ரதோற்சவ நிகழ்வு இன்று காலை கொடிஸ்தம்ப அபிஷேகம்  மூலவர் பூஜை வசந்த மண்டப பூஜையின் பின் அடியார்களின் அரோகரா கோசத்துடன் வடம் பிடித்தால் வாழ்வு சிறக்கும் எனும் முதுமொழிக்கமைவாக சிறப்பாக இடம்பெற்றது.

இவ்வாலய உற்சவத்தின் கொடியேற்ற   நிகழ்வு கடந்த 20ம் திகதி இடம்பெற்றது.தொடர்ந்து திருவிழாக்கள் இடம்பெற்று இன்று அலங்கரிக்கப்பட்ட தேரினில் விநாயகப் பெருமான் மேள வாத்தியம் முழங்க அடியார்களின் கற்பூரச் சட்டி நேர்த்திக்கடனுடன் உள்வீதி வலம் இடம்பெற்று அதன் பின் எம்பெருமான் 10 வருடங்களின் பின் ரதத்தில் ஏறி ஆலயத்தின் வெளி வீதி வலம் வந்தார்.

ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள் தலைமையில் இன்றைய தேர்த் திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் வடத்தினைப் பிடித்து இழுத்த தமதுநேர்த்திக் கடன்களை நிறைவு செய்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |