கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இடம்பெறும் இளையோருக்கான தேசியமட்ட கோலூன்றிப் பாய்தலில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே. டக்சிதா 3.02 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து புதிய சாதனையைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித் துவம் செய்த ஹெரீனா 2.90 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
கடந்த வருடம் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்து வம் செய்த ஹெரீனா 3.01 மீற்றர் பாய்ந்து படைத்திருந்த சாதனையையே இவர் முறியடித்தார்.(15)
0 Comments