தமிழ் இளைஞர் சேனை விடுக்கும் கண்டன அறிக்கை.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி விடயம் தொடர்பில் அகில இலங்கை தௌகீத் ஜமாத் எனும் அமைப்பினால் சம்மாந்துறையில் 'இன நல்லுறவினை சீர்குலைப்பதற்கு எதிராக' எனும் தொனியில் என கூறப்பட்டு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன தாய்மார்களும், பெண்களும், சகோதரிகளும் பாரம்பரியமாக அணித்து வரும் சேலையினை 'உலக மகா ஆபாச ஆடை சேலை' என சித்தரித்து பாதாதைகளை இட்டு எமது நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையினை கேவலமாக சித்தரித்தமைக்கு எதிராக தமிழ் இளைஞர் சேனை தமது வன்மையான கண்டணத்தினை தெரிவிக்கின்றது.
இலங்கையில் மூவினங்களும் தொன்று தொட்டு அணியும் பாரம்பரிய கலாசார ஆடையினை (சேலை) ஒரு இனத்தின் கலாசார குறியீடாக அடையாளப்படுத்தி அதனை கொச்சப்படுத்தும் அறிவீனத்தினை நினைத்து நாம் வருந்துகின்றோம்.
ஒரு இடத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு உரிமை மீறப்படின், உணர்வு புண்படுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பில் ஜனநாயக ரீதியில் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்ப்பவர்களல்ல, எனினும் ஒட்டுமொத்த பெண்களின் மானம் காக்கும் சேலையினை 'உலக மகா ஆபாச ஆடை சேலை' என சித்தரித்தமை எமது நாட்டின் ஒட்டு மொத்தப் பெண்களையும் பாரம்பரியத்தையும் கொச்சைப்படுத்திய செயலாகும், இந்த கீழ்த்தரமான செயல் மிகவும் கண்டனத்திற்குரியது என்பதனை சுட்டிக்காட்டுக்கின்றோம்.
எனவே உண்மையான நோக்கத்தினை சீர்குலைத்து பாதாதைகளை இட்டமையினை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலாவது குரோத மனப்பான்மையை களைந்து சிந்தித்து செயலாற்ற வேண்டுமென அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
தமிழ் இளைஞர் சேனை
கல்முனை பிராந்தியம்
0 Comments