Advertisement

Responsive Advertisement

2 மணிக்கு பின்னர் மழை : இடி மின்னல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்


நாட்டில் பிற்பகல் வேளையில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில பிரதேசங்களில் குறிப்பாக மேற்கு , சப்ரகமுவ, மத்திய , தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சுமர் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென்கிழக்கு மாகாணங்களின் கடற்கரையோரப்பகுதிகளில் காலை வேளைகளிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டம் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக அப் பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments