வாழைச்சேனையில் 1,538 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது!

Monday, August 31, 2020

 


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் இன்று(31) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர தெரிவித்துள்ளார்.


வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம். துசிதகுமார தலைமையில் பொலிஸ் பரிசோதகர்களான ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல, எம்.பி.எம். தாஹா ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது பாலைநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த இளைஞனிடம் இருந்து 1,538 போதை மாத்திரைகள், 2000 மில்லி கிராம் கேளரா கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போதைப் பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுளவின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

போலீசாரின் அதிரடி!- போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!


 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் தங்கல்லை காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 200 உடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 27 மற்றும் 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை தங்கல்லை காவற்துறை குற்றத் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.
READ MORE | comments

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில்!

 


உத்தேசிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ஆராய நீதி அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக அமைச்சர்கள் சிலர் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
READ MORE | comments

இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிப்பு!!

 


இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.


சந்தையில் வாகனத்திற்கான கேள்வி அதிகரிப்பே விலையேற்றத்திற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்ஜிகே தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதியளவு வாகனங்களின் இறக்குமதியை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்கள் வாகனங்களைக் கொள்வனவு செய்யும் போது அதிகளவு பணத்தை செலவிடுவது அநாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் போதியளவு வாகனங்களின் இறக்குமதி இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
READ MORE | comments

எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகளுக்காக எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்வரும் - இரா.சாணக்கியன்

Sunday, August 30, 2020


 எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையொட்டி வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்த மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம். எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை எவ்வளவு பிரயத்தனத்திற்கு மத்தியில் அவர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்கள். பொலிஸாரின் தடைகள் பலவற்றைத் தாண்டி இன்று இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது. இன்று இந்த மக்களின் போராட்டத்திற்காகக் குரல்கொடுக்க வந்தவர்கள் யார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் இன்று இந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றார்கள்.

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகள் மிகவும் அமைதி முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமானது பொலிசாரினால் ஏற்படுத்தப்பட்ட தடையின் காரணமாக மிகவும் பாரியளவிலான ஆர்ப்பாட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக வந்த நேரம் அவருக்கான வரவேற்பு செய்வதற்கு ஆயிரக்கணக்கான மக்களை அவரே ஏற்றிச் சென்று வெடி கொழுத்தி அவரைக் கௌரவிக்கச் செய்தார். ஆனால் இன்று இந்த மக்களின் உணர்வு பூர்வமான போராட்டத்திற்கு அவர் வரவில்லை. இன்று இந்த மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து இந்த மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நீங்கள் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இந்த மக்களுக்காக இங்கு வந்து குரல் கொடுக்க முடியாதா?

மக்கள் உங்களைத் தெரிவு செய்தது நீங்கள் வீதிகளில் ஊர்வலம் போவதற்கோ வெடிக் கொழுத்துவதற்கோ, உங்களுக்குப் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவிப்பதற்கோ அல்ல. மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பதற்கே உங்களை மக்கள் தெரிவு செய்தார்கள் ஆனால் நீங்கள் அவர்களின் பிரச்சினையின் போது வருவதில்லை.

எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும்.

இன்னுமொரு பாராளுனமன்ற உறுப்பினர் அவர் அவரது கன்னி உரையில் மக்களின் பிரச்சினைகள் பற்றி எதுவுமே வாய் திறவாது தன்னை விடுதலை செய்யும் படியே தெரிவித்திருந்தார். அவரை விடுதலை செய்வதற்காகவா பாராளுமன்றத்திற்கு மக்கள் அவரைத் தெரிவு செய்தார்கள்.

அவர் வரமுடியாது விட்டாலும் அந்தக் கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளர்கள் வந்திருக்கலாம் தானே. அதில் மனித உரிமைச் சட்டத்தரணியொருவரும் இருக்கின்றார். அவராவது இங்கு வந்திருக்கலாம். சட்ட ஆலோசனைகள் வழங்குபவர்கள் ஏன் இந்த இடத்திற்கு வந்து எமது மக்களின் பிரச்சினக்கு உங்களால் சட்ட ஆலோசனை வழங்க முடியாது. அக்கட்சியில் போட்டியிட்ட வர்த்தகரொருவரின் சந்தியில் தான் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆனால் அவரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

நாங்கள் களத்தில் நிற்கின்றோம் தேர்தல் காலத்தில் மக்கள் மக்கள் என்று கதைத்தீர்களே நீங்கள் எல்லாம் எங்கே. இதோ நாங்கள் இப்போதும் எமது மக்களுக்காகக் களத்தில் நிற்கின்றோம். எமது தமிழரசுக் கட்சி, தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, வாலிபர் முன்னணி என அனைவரும் நிற்கின்றோம்.

இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் என்னையும் கைது செய்வதாகக் கூறியிருந்தார்கள். என்னையும் கைது செய்யுங்கள். அது மட்டும் தான் எனக்கு இன்னும் நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெற்றால் அடுத்த தேர்லில் நானும் விலங்குடன் ஒரு போஸ்டர் அடிக்கலாம்.

இது மக்களின் போராட்டம். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். மக்களுக்கான இந்தப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? கடத்தியவர்கள் இந்த மாவட்டத்திலும் உள்ளார்கள். கடத்தியவர்கள், காசுக்காகக் கடத்தினீர்களா, பதிவிக்காகக் கடத்தினீர்களா இல்லை இராணுவம் சொல்லிக் கடத்தினீர்களா என்று எங்களுக்குத் தெரியாது. இன்று கடத்திய நீங்கள் பெரும் பதவிகளில் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தேவை பதில் எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? உயிருடன் இருந்தால் எங்கே? உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது?

இந்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எத்தனையோ இடங்களில் கையொப்பமிட்டுள்ளது. சுமார் எட்டுக்கு மேற்பட்ட விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த காணாமல் போதல் தொடர்பான விடயங்கள் அரசியல் அடக்கு முறையாகக் கூட பயன்படுத்தப்பட்ட விடயம் என்றும், தொடர்ச்சியாக இந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றார்கள் என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையே குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தினை தடுப்பதற்கு கொரோணாவைப் பயன்படுத்தினர், எமது உறவுகளைத் தேடும் போராட்டத்தை விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சி என்றும் தீவிரவாதத்தைத் துண்டும் செயற்பாடு என்றும் சொல்லித் தடுக்கப்பார்த்தார்கள். இவ்வாறு நிறைய பிரச்சனைகள் உள்ளன. எது எவ்வாறு இருப்பினும் மக்களுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

நான் ஒரு இனவாதியுமல்ல எனது கட்சி ஒரு இனவாதக் கட்சியுமல்ல, இனவாதத்தைத் தூண்டும் கட்சியுமல்ல. நியாயம் கேட்கும் கட்சி, நியாயத்தைக் கோரி மக்கள் எந்த இடத்தில் அழைத்தாலும் எமது கட்சி சார்பில் நான் அந்த இடத்தில் நிற்பேன் என்று தெரிவித்தார்.
READ MORE | comments

தலைவர்கள் விட்ட தவறே இன்று தமிழ்,முஸ்லிம் மக்கள் இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்ள காரணம்.

 நூருல் ஹுதா உமர்.

13 வது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நீக்கப் போகிறோம் என்று கூறும் அரசாங்கத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன ? மாகாண சபை அதிகாரத்தை தக்க வைப்பதில் சிறுபான்மைக் கட்சிகள் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா ? 13 ஆவது சட்டம் நீக்கப்படுமானால் அதற்குரிய பரிகாரம் என்ன ?

இனப்பிரச்சினை தொடர்பில் அடுத்தகட்ட தீர்வுத் திட்டத்தை நோக்கி அரசாங்கம் நகருமா ? இனவாதத்தை அடிப்படையாக வைத்து வங்குறோத்து அரசியல் செய்பவர்கள் அதைக் கைவிட்டு மக்களுக்குத் தேவையான காத்திரமான அரசியலை செய்ய முன்வருவார்களா ? நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை திருத்தச்சட்டத்தில் இனப்பிரச்சினை தொடர்பில் ஏதேனும் தீர்வுகள் உள்ளடக்கப்பட்டிருந்ததா ?

முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த காலத்தில் 13+ என கூறி மக்களை ஒருபுறம் திசை திருப்பினாரா ? மாகாண சபை அதிகாரம் எந்த பலனையும் கொடுக்காது என்று மஹா நாயக்கர்கள் தெரிவித்து வருவது ஏன்?

மாகாண சபை அதிகாரம் தேவையற்றது என்றும் அதனை மகா நாயக்கர்கள் நீக்க கோருவதும் ஏன் ? என்ற கேள்விகளுக்கு நாங்கள் விடைதேட வேண்டும் என மாற்றத்திற்கான முன்னணி செயற்பாட்டாளர் சட்டத்தரணி
 ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துரைத்த அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளை இல்லாமலாக்குவதற்காக ஒட்டுமொத்த ஒன்பது மாகாண சபைகளினதும் நிர்வாகங்கள் சீர்குலைக்கப்பட வேண்டுமென்பதற்காக முன்னாள் நல்லாட்சியின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சகல கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.

நல்லாட்சி என்றும் ஜனநாயக ஆட்சி என்றும் அதனை காப்பாற்ற வேண்டுமென படாதபாடுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் நல்லாட்சி அரசாங்கத்தோடு சேர்ந்தியங்கிவிட்டு, சமூகத்துக்கு எதனைப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற சிந்தனைகளுக்கு அப்பால் வெறுமனே நல்லாட்சியை காப்பாற்றி மாகாண சபை திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்துவிட்டு தடுமாறும் சிறுபான்மைக் கட்சிகள் வாக்களித்த மக்களுக்கு என்ன பதிலை கூற விருக்கின்றது. சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களின் அற்ப ஆசைகளினால் அல்லது தங்களுக்கு கிடைத்த சுகபோகங்களை அனுபவிக்கும் வகையிலேயே மாகாண சபை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தார்கள்.

இது மக்களுக்குச் செய்த துரோகமாகவே கொள்ளப்படவேண்டும். காலத்திற்கு காலம் புதிய பசப்பு வார்த்தைகளை பரப்புரை செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றி தங்களை ஸ்திரப்படுத்தி பாராளுமன்றத்திலே சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்படாமல் இருப்பதை கண்டித்து ஒரு அறிக்கை கூடவெளியிடாமலும் காலம் கடத்தியது வாக்களித்த மக்களுக்கு செய்த பெரும் துரோகவே கொள்ளப்பட வேண்டும். அன்று அவ்வாறு செயற்பட்டதனாலேயே இன்று 13 ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்கள் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எப்படியான குணநலன்களைக் கொண்டவர் என்பதை அறியாது அவருடைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்று தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்களுக்காக ஆதரவளித்ததன் காரணமாகவே இன்று தமிழ் முஸ்லிம் கட்சிகள் சீர்குலைக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் தேர்தலில் வெற்றி பெற்ற மறுதினமே மக்களிடம் இருந்து வெருண்டோடும் இவர்கள் ஐந்து வருடங்களுக்கு பின் மனச்சாட்சியற்று அந்த மக்களிடமே மீண்டும் இனவாத விசத்துடன் வந்து வாக்குகளை கொள்ளையடித்து திரும்பவும் தமது உல்லாச வாழ்வுக்கு மீண்டுவிடுகின்ற அவலநிலையை நாங்கள் காண்கிறோம்.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்கு வாக்களித்த மக்களின் பிரச்சினைகளுக்குரிய வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க தவறிவிட்டு நல்லாட்சியை காப்பாற்ற முக்கியத்துவம் வழங்கியதனாலேயே இன்று இருக்கின்ற அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு வித்திட்டது.

13 ஆவது திருத்தச் சட்டம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்டது. இது ஒரு சர்வதேச ஒப்பந்தமாக கொள்ளப்படுவதால் இலங்கை அரசு வெறுமனே அதனை இல்லாது ஒழித்து விட எடுக்கப்படும் முயற்சிகள் எந்த அளவுக்கு சாதகமானதாக அமையும் என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுகின்ற வேளையில் இந்திய அரசாங்கம் என்ன நடை முறைகளை கையாளும் என்ற கேள்வியும் எழுகின்றது.

மாகாண சபை திருத்தச் சட்டத்தின் மூலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்படுவதனால் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைவடையும் என்பதையும் தெரிந்து கொண்டும் அத்திருத்தத்திற்கு ஏன் வாக்களித்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்தச் செயற்பாடு தங்களுக்கு வாக்களித்த மக்களை பெரும்பான்மை சமூகத்துக்கு காட்டிக் கொடுத்துள்ளதுடன் வரலாற்றில் செய்த பெரும் துரோகமுமாக கணிக்க வேண்டியுள்ளது.

பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வடக்கு-கிழக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கொண்டுவரப்பட்டது என்றால் ஏன் மாகாணசபைத் திருத்தச் சட்டத்தினை திருத்துவதற்கு தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணங்கி சென்றது என்ற பலமான கேள்வியும் எழுகின்றது.

தமிழ் முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தங்களது இனத்திற்கான எந்த உரிமையையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.இந் நாட்டின் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் அறிவுபூர்வமான அரசியல் சித்தாந்தத்திற்குள் உள்வாங்கப்பட்டு செயற்படுவதன் மூலமாக சிறந்ததோர் எதிர்காலம் உதயமாகும்.

சமூகத்தைக் காட்டிக் கொடுக்காது சரியான வழியில் நடத்தவே விட்டுக்கொடுப்பு களுடன் இனவாதம் பேசாமல் முன்னின்று உழைக்க வேண்டும். உலக வரலாறுகளை எடுத்து நோக்கினால் அந்த நாடுகளில் பெரும்பான்மை மக்களோடு சிறுபான்மை இனங்கள் எதிர்த்து நின்று முட்டி மோதிக்கொண்டு வெற்றி பெற்ற வரலாறு கிடையாது என்றார். 
READ MORE | comments

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

Saturday, August 29, 2020


 ஒரே நாடு ஒரே சட்டம்’ என்றால் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “நான் நாடாளுமன்றத்தில் சிங்களத்தில் உரையாற்றுகின்றேன் என்பதற்காக என்னை விமர்சிக்கலாம். ஆனால் விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். விமர்சனங்களாலேயே நான் வளர்ச்சியடைகின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, இந்த இடத்தில் ஒரு விடயத்தினைக் குறிப்பிட விரும்புகின்றேன். யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று றோயல் பார்க் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக் குற்றவாளியும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அப்படியாயின், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையின்கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். சிலர் எவ்வித குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணைகளோ இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இப்படியெல்லாம், தமிழ் மக்களுக்காக நான் பேசுகின்றேன் என்பதற்காக என்னை இனவாதி என எண்ணிவிட வேண்டாம். நான் ஒன்றும் இனவாதியில்லை. நான் கண்டியிலேயே கல்வி கற்றேன். எனக்கும் அதிகளவான சிங்கள நண்பர்கள் இருக்கின்றார்கள்.

இதேவேளை, இந்த நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு வீழ்ச்சி என்று சொல்லப்படுகின்றது. ஆனால், எங்களுக்கு 10 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன.

உண்மையில் இந்த நாடாளுமன்றத்துக்கு நாம் வருவதற்கான நோக்கமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பதற்காகவே. எனவே, 10 உறுப்பினர்களாகவோ ஐந்து உறுப்பினர்களாகவோ இருந்தாலும் சரி எமக்கு அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவேண்டும்.

அந்தவகையில், சிலநேரம் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியமே இருக்காது. மாகாண சபையின் ஊடாக எங்களது வேலைத் திட்டங்களை செய்யக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் அரசாங்கத்துக்கு ஆணித்தரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

READ MORE | comments

மட்டக்களப்பு வீடொன்றில் தீ விபத்து


 மட்டக்களப்பு பொலிஸ் விடுதிக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வீடொன்று முற்றாக எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.


நேற்று (28) இரவு திடீரென ஏற்ப்பட தீ விபத்தினால் குறித்த வீட்டில் உள்ள இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை குறித்த இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் விரைந்து செயற்பட்டதன் காரணத்தால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்துள்ளனர்.

மின் ஒழுக்கின் மூலமாக இத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

யாசகம் பெறும் இரு பெண்களுக்களுக்கிடையில் மோதல்- ஒருவர் அடித்து கொலை!!

 
அநுராதபுரத்தில் யாசகம் பெரும் இரு பெண்களுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 61 வயதுடைய பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். 


அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரியாலயமொன்றுக்கருகில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் யாசகம் பெறும் 20 வயதுடைய யுவதிக்கும் உயிரிழந்த பெண்னுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன் போது யுவதியால் கடுமையாக தாக்குதலுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தகவல் கிடைக்கப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை முன்னெடுத்தன் பின்னர் , பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கொலை தொடர்பில் 20 வயது யுவதியை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அநுராதபுரம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
READ MORE | comments

இந்தியாவில் நேற்று மாத்திரம் 76,472 பேருக்கு கொரோனா!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,021 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதனால், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 62,550 -ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றில் இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க முன்னிலையில் காணப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 77,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,021 உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 62,550 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்து தற்போது நாடு முழுவதும் 7,52,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 26,48,999 ஆகவும் உள்ளது.

அமெரிக்காவில் ஜூலை மத்தியில் உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 77,255 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதே இதுவரை அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 52 ஆயிரம் பேர் கைது!!

Friday, August 28, 2020


இலங்கையில் கடந்த 6 மாத காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக 52 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.


கைதானவர்களில் 30 வயதிற்கு குறைவான இளைஞர்களே அதிகளவில் உள்ளதாக அந்த சபையின் தலைவர் விசேட வைத்தியர் லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20 முதல் 25 வீதமானவர்கள் பாடசாலை செல்பவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட 52 ஆயிரம் பேரில் 24 ஆயிரம் பேர் ஹேரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலும், மேலும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 26 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகளவானோர் பாடசாலை செல்பவர்கள் என்பதால் அவர்களை விளக்கமறியலில் வைப்பதன் ஊடாக அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

இதனால் நாட்டின் எதிர்காலமும் பாதிப்படையும்.

ஆகவே இது தொடர்பில் கல்வித்திட்டத்தின் ஊடான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் விசேட வைத்தியர் லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு!!


 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி அறிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடாத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இந்த தீர்மானத்தினை அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

மரத்தில் இருந்த சிறுத்தை பாய்ந்ததால் இரு பெண்கள் வைத்தியசாலையில்

Thursday, August 27, 2020

 


நேற்று முன்தினம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவ் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் மீது மரத்தின் மேல் இருந்த சிறுத்தை பாய்ந்ததால் அங்கு தொழில் புரிந்த பெண் தொழிலாளர்கள் 2 பேர் காயமுற்ற நிலையில் பொகவந்தலாவ கிராமிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சிறுத்தையைக் கண்டு பயந்த அவர்கள் தப்பித்துக்கொள்ள முயற்சித்த வேளையில் இவர்கள் காயமடைந்ததாக கூறியதுடன், வனப்பகுதியில் உள்ள சிறுத்தைகள் ஏனைய வன விலங்குகளை வேட்டையாடுவதினாலும், பெருந்தோட்டப் பகுதியில் அதிகளவு தேயிலை தோட்டங்கள் காடாகி வருவதாலும் இவ்வாறான சிறுத்தைகள், புலி ஏனைய வனவிலங்குகளினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படுவதாக குறித்த பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர். பல தோட்டங்களிலும் இவ்வாறான சிறுத்தைகள் உள்ளதை அங்கிருந்து வனப்பகுதிக்கு விரட்டும் வேளையில் நல்லதண்ணி வனபாதுகாப்பு அதிகாரி மேற்கொண்டுள்ளதாக வனபாதுகாப்பு அதிகாரி பிரகாஸ் கருணாதிலக்க தெரிவித்தார்.
READ MORE | comments

ஒரே நாடு ஒரே சட்டம்'’ என்ற கொள்கையின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்- சாணக்கியன்!

 


அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைதப் பெற்றுத்தர தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.


இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தின்போது இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உண்மையில் இந்த நாடாளுமன்றத்துக்கு நாம் வருவதற்கான நோக்கமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அடையவேண்டும் என்பதற்காகவே.

எனவே, 10 உறுப்பினர்களாகவோ ஐந்து உறுப்பினர்களாகவோ இருந்தாலும் சரி எமக்கு அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க வேண்டும்.

அந்தவகையில், சிலநேரம் இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியமே இருக்காது. மாகாண சபையின் ஊடாக எங்களது வேலைத் திட்டங்களை செய்யக்கூடியதாக இருக்கும்.

அந்தவகையில் அரசாங்கத்துக்கு ஆணித்தரமாக ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தரவேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.

அப்படியாயின், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்பு

Wednesday, August 26, 2020

 


கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த பதவியேற்றுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (புதன்கிழமை) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த 12 ஆம் திகதி புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரும் மட்டுமே கண்டியில் பதவியேற்றிருந்தனர்.

இந்நிலையில் தற்போது சுசில் பிரேமஜயந்தவுடன் சேர்த்து 40 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

பாடசாலைகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்த அறிவிப்பு!

 


கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தடைப்பட்டிருந்த பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சுக்கள் அனுமதி வழங்கியுள்ளன.


சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

சுகாதார தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிக்க இரண்டு அமைச்சுக்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த காலகட்டத்தில் முன்னெடுக்க கூடிய விளையாட்டு போட்டிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விளையாட்டு போட்டிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

மட்/குருக்கள்மடம் விபத்தில் சிக்கிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - மண்டூரில் சோகச் சம்பவம்

 


ஷமி மண்டூர்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மட பிரதான வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கிய மண்டூரைச் சேர்ந்த இளைஞன் ஏகாம்பரம் சசிக்குமார் (25) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று 26 உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மண்டூரில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் களுவாஞ்சிகுடி பிரதான வீதி ஊடாக சென்று கொண்டிருக்கும் போது குருக்கள்மடம் பிரதான வீதியில் கட்டுபாட்டை இழந்து நேருக்கு நேர் பயணித்த காருடன் மோதியதில் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


விபத்தினை ஏற்படுத்திய சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

கல்முனை நகரின் வடக்கு பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்.


 கல்முனை நகரின் வடக்கு பிரதேச செயலகத்தின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்.

READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு

Tuesday, August 25, 2020

 

மட்டக்களப்பு மாவட்டத்தின்  14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றும்  பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (25) மண்முனை தென்எருவில் பற்று – களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


அரசாங்கத்தின் சேவைகளை மக்கள் காலடிக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் பிரதேச செயலகங்கள் செயற்பட்டு வருகின்றன. இதனூடாக பொதுமக்களுக்கான சேவையினை வழங்குவதில் பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், பிரதேச செயலகங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப்பணிகள், சமுர்த்தி கொடுப்பனவுகள், ஏனைய கொடுப்பனவுகள், காணி தொடர்பான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன.

மேலும் அவற்றை அமுல்;படுத்திவதில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள், ஆளனிப்பறாக்குறை, இடமாற்றம் தொர்பான பலதரப்பட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும், ஆலோசனைகளும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால்  சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும், திணைக்களத் தலைவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன. 


மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்ட இம்மாநாடு மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிரதம கண்காளர் கே. ஜெகதீஸ்வரன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மோகன், மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா மற்றும் அனைத்து பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக தினைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

READ MORE | comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள விசேட கோரிக்கை!

 

நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் சேவையை பிரதானமாகக் கொள்ள வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பல வருடங்களுக்கு பின்னர், இன்று இலங்கையில் முழுமையானதொரு நாடாளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தோம். இவை அனைத்தும் எமக்கான ஒரு பாடமாகத்தான் கருதுகிறோம்.

இலங்கையில் தற்போது காணப்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்த நாடாளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக புதிய அரசியலமைப்பொன்று இன்று நாட்டுக்கு தேவைப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றும் வகையில் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

ஒரு நாட்டில் இதயமாகக் கருதப்படும் நாடாளுமன்றில், எதிர்காலத்தில் எந்தவொரு தவறும் இருந்துவிடக்கூடாது என்றுதான் நாம் இந்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளோம். மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மக்கள் பிரதிநிதியாக அனைவரும் திகழ வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ள விக்னேஸ்வரனின் உரை!

 ஸ்ரீலங்காவின்புதிய நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய பிரமாணம் மேற்கொண்டு சபாநாயகர் தெரிவு இடம்பெற்ற பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்து, சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது என தமிழ்த் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பண்டாரவன்னியனின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது அதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள் நீங்கள் உங்களுடைய வழியில் செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 6 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தான் சிங்கள மொழி உருவாகியது அத்தோடு அவர்களுடைய சிங்கள வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் கூட பாலி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது. தமிழருக்கான வரலாறு தமிழ் மொழியில் எழுதப்பட்டும் அது பின்னர் வேறு மொழிகளில் மாற்றி அமைக்கலாம்.

தமிழ் மொழி தொன்மையான மொழி லட்சக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது. செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உலகத்திலே பல நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அது மூத்த குடிமக்களினுடைய மொழி என உரையாற்றியதும் கூக்குரலிடுவதும் நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும் கீழ்த்தரமான ஜனநாயக முறைக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்.

நீங்கள் நீக்குவதோ வைத்திருப்பதோ எதுவாக இருந்தாலும் எமது மூத்த மொழி மூத்த மொழியாகவே தான் இருக்கும் அவ்வாறு இதை நீக்கினால் நாங்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் அதேபோன்று கொமென் வெல்த் நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று ஆரம்பம் 9 ஆவது பராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற செயலமர்வு விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.


பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை வரையில் நடைபெறவுள்ளது.  இந்த 2 நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் இன்று காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
READ MORE | comments

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டது!!

 

இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுச் சென்ற தொடருந்து ஒன்று கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

READ MORE | comments

வடக்கில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

 

 யாழில் 450 பட்டதாரிகளுக்கு நியமனம்

நிராகரிப்பு; நிவர்த்தி செய்து தர கோரிக்கை

அரசாங்கத்தினால் 50ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான அரச நியமன கடிதங்கள் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்து 450க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பட்டதாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இந்த விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடியதோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

குறித்த மகஜரில் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ள EPF, ETF பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கான பிரச்சினை மற்றும் 45வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை போன்ற மூன்று விடயங்களை உள்ளடக்கி வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.  குறித்த விடயங்கள் தொடர்பாக உரிய தரப்பினருக்கு அதனை தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவண செய்யுமாறு கோரி மகஜர் கையளித்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே அரசாங்கத்தினால் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி தமது கடமைகளை ஆரம்பிக்கின்ற நிலையில், நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் எதிர்வரும் 2ஆம் திகதிக்குள் உரிய தீர்வு பெற்றுத்தர வேண்டும் என பட்டதாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

READ MORE | comments

பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்- வங்கி கணக்கில் பல மில்லியன் ரூபா பணம்!!

 

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கொழும்பு பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணிடம் இருந்து 5 வங்கி கணக்குகள் இனங்காணப்பட்டுள்ளதுடன்,  குறித்த வங்கி கணக்குகளின் ஊடாக 140 மில்லியன் ரூபா பணப்பறிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

மட்டக்களப்பில் தொடரும் இளம் யுவதிகளின் தற்கொலை: வவுணதீவில் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Monday, August 24, 2020

 

ஷமி மண்டூர்)

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுணதீவு மாரியம்மன் கோயில் வீதி விளாவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த பேரின்பம்-கிஜானி (16) வயதுடைய இளம் யுவதி தனக்குத்தானே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் குறித்த யுவதி கா.பொ.த சாதாரணதரம் கற்று வருவதாகவும் அவர் ஒரு இளைஞனை நீண்ட காலங்களாக காதலித்து வந்ததாகவும் அவரின் தாயார் குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் சம்ப தினமான நேற்று அவரின் தற்தையார் உறவினர் வீட்டுக்கு சென்றுவந்து பார்த்த வேளையில் வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கூரையின் ஊடாக உட்சென்று பார்த்தவேளையில் குறித்த யுவதி தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் அறியமுடிந்துள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி (வடக்கு) பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் பற்றிய விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

யுவதி கொலை; கைதான பெண்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

 மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


மன்னார் உப்பளம் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மதியம் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த யுவதியுடன் மன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி உட்பட இரண்டு பெண்கள் அடையாளம் காணப்பட்டு குறித்த சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸாரின் விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களும் விசாரணைகளின் பின்னர் நேற்று(23) மாலை 7 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட இரு பெண்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த கொலைக்கும், குறித்த இரு பெண்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், வெளி நாட்டுக்கு அனுப்புவதற்காக குறித்த பெண்ணின் தாய் மாமனிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு குறித்த இரு பெண்களும் சென்றதாகவும் குறித்த கொலைக்கும் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார் .

எனினும் பாதிக்கப்பட்ட யுவதி சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சர்மிலன் டயஸ், குறித்த கொலை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை சம்பவம் எனவும், இறந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் மத்தியில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே இக் கொலை இடம் பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், அவ் இரு பெண்களிடமும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது தாங்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், எனவே இக் கொலையின் பிரதான சந்தேக நபரான அவ் பெண்ணின் தாய் மாமனை கைது செய்வதற்கான அறிவுறுத்தலை பொலிஸாருக்கு வழங்குவதுடன் குறித்த இரு பெண்களையும் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் மன்றில் தெரிவித்தார்.

இரு தரப்பு வாத பிரதிவாதங்களின் பின்னர் பிரதான சந்தேக நபரான செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் தாய் மாமனை கைது செய்து மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துமாறும், குறித்த இரு பெண்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் மன்னார் நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டார்.
READ MORE | comments

மட்டக்களப்பு செங்கலடிப் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்; சிறுவன் உயிரிழப்பு!

Sunday, August 23, 2020

 

எம்.ஜி.ஏ. நாஸர்)

மட்டக்களப்பு- செங்கலடி பகுதியில் இடம்பெற்ற குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டுச் சம்பவத்தில் 15வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) என்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சிறுவனின் சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் குழு மோதலாக மாறி பின்னர் பழிதீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றுபவர் என்றும் சிறந்த பணிவான குணாம்சங்கள் கொண்டவர் என்றும் விளையாட்டுப் பயிற்சி உத்தியோகத்தர் லோகிதராசா ஜயஜனனி தெரிவித்தார். மேலும் செங்கடி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து இந்த மாணவன் பங்குபற்றிய கூடைப்பந்தாட்ட அணி, முதற் தடவையாக கல்குடா வலய மட்ட அரை இறுதிப்போட்டி வரை சென்றது எனவும் ஜயஜனனி தெரிவித்தார்.

இதேவேளை சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
READ MORE | comments

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவிகளில் மாற்றம்?

 

தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதம அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனையும் ஊடகப் பேச்சாளராக செல்வம் அடைக்கலநாதனையும் நியமிக்க மேற்கொண்ட முன்மொழிவிற்கான ஒப்புதலை நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வினோகராதலிங்கம் தெரிவித்தார்.
READ MORE | comments

அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக மதிக்கப்படும்- பிரதமர்!

 

அனைத்து இனங்கள் மற்றும் மதங்கள் சமமாக கருதப்படும

மஹாசங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22) தெரிவித்தார்.

வடமேல் மாகாண மஹாசங்க கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குருநாகல் மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய தனக்கு கடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலுமுள்ள மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் செய்த அர்ப்பணிப்பிற்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டின் எதிர்கால திட்டங்களை மஹாசங்கத்தின் ஆலோசனை மற்றும் அறிவுரையின் பேரில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாகக் கூறியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக நடத்துவதிலும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை பாதுகாப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

வடமேல் மாகாணத்தில் காணப்படும் நீர் பிரச்சினை, காட்டு யானைகளின் பிரச்சினை மற்றும் பிற அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து ஆராந்து, மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் வடமேல் மாகாணத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, உள்ளூர் அரசாங்க பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |