Advertisement

Responsive Advertisement

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 52 ஆயிரம் பேர் கைது!!


இலங்கையில் கடந்த 6 மாத காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக 52 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.


கைதானவர்களில் 30 வயதிற்கு குறைவான இளைஞர்களே அதிகளவில் உள்ளதாக அந்த சபையின் தலைவர் விசேட வைத்தியர் லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார்.

அத்துடன் 20 முதல் 25 வீதமானவர்கள் பாடசாலை செல்பவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட 52 ஆயிரம் பேரில் 24 ஆயிரம் பேர் ஹேரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலும், மேலும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 26 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகளவானோர் பாடசாலை செல்பவர்கள் என்பதால் அவர்களை விளக்கமறியலில் வைப்பதன் ஊடாக அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

இதனால் நாட்டின் எதிர்காலமும் பாதிப்படையும்.

ஆகவே இது தொடர்பில் கல்வித்திட்டத்தின் ஊடான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் விசேட வைத்தியர் லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments