தேசிய கல்வியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பம் - கல்வி அமைச்சு

Friday, July 31, 2020


தேசிய கல்வியில் கல்லூரிகள் அனைத்தும் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

ஏற்கனவே கல்வி அமைச்சு ஆகஸ்ட் 17 ஆம் திகதியே கல்லூரிகள் ஆரம்பமாகும் என அறிவித்திருந்தது. 

இந்த அறிவித்தலை திருத்தி 17 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்லூரிகளை 2020.08.10 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலாம் வருட மாணவர்கள் மாத்திரமே கல்லூரிகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. READ MORE | comments

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வெளியான செய்தி

2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் முடிந்ததும் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நிராகரிப்பதாக கூறினார்.

மேலும் நாட்டில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளே இடம்பெரும் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை மற்ற நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வெளிநாடுகளுக்கு திருப்பி அனுப்புவதன் மூலம் இலங்கையர்களின் பாதுகாப்பையும் அதே வேளை அனைத்து மக்களின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

READ MORE | comments

பிள்ளையானுக்கு அமைச்சு பதவி – உறுதியளித்த மஹிந்த தரப்பு.

சிறையில் இருக்கும் பிள்ளையான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழ் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக கிழக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு அமைச்சு பதவியை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர் பிணை பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவர் அந்தப் பதவியைப் பெறுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பிள்ளையன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் பிள்ளயனை சிறையில் அடைத்து, அமைச்சுப் பதவியைப் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் சிலர் இருப்பதாக பிள்ளையானுக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டு, இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

போதைப்பொருள் விநியோகத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்ட அங்கொட லொக்காவின் கழுகு சிக்கியது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “அங்கொட லொக்கா” எனப்படும் பாதாளக்குழு உறுப்பினரால், போதைப்பொருள் விநியோகத்துக்காக பயிற்சியளிக்கப்பட்ட கழுகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீகொட- நாவலமுல்ல மயான வீதி பிரதேசத்திலுள்ள அங்கொட லொக்காவுடன் நெருங்கிய நண்பரின் விலங்கு பண்ணையிலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக, அத்துருகிரிய ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்த நடவடிக்கையின் போதே, இந்த கழுகு மற்றும் அங்கு பணியாற்றிய இரு பணியாளர்கள் இருவர் வாயு ரைபிளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவசாய பண்ணைக்கு உள்நுழைவது ​தடைசெய்யப்பட்டுள்ளதாக காட்சிப்படுத்தி, அதிகளவான நாய்களை குறித்த பண்ணையைச் சுற்றி பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இந்த கழுகு வெளிநாடொன்றிலிருந்து படகு மூலம் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கழுகு இலங்கைக்கு உரிய உயிரினம் அல்லவென்றும் இதனை கூட்டில் அடைத்து வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 கி​லோகிராம் நிறையுடைய இந்த கழுகு, எந்த இடத்துக்கும் செல்லும் வகையில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கழுகு தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்துக்கு வழங்கி, முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் பத்தரமுல்ல வனஜீவராசிகள் திடீர் சுற்றிவளைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

கருக்கலைப்பு நிலையத்தை நடத்திச் சென்ற போலி வைத்தியர் பிடிபட்டார்

நிட்டம்புவ பகுதியில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மமாலை 5 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து கருக்கலைப்பிற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் சிலவும் வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு உதவிய அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லாசஹ்ரான் ஹசீம் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர்களான அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் உதவி கிடைத்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி சாய்ந்தமருது அலியார் சந்தியில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கும் அல் ஜாமத் அமைப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவான சஹ்ரான் ஹாசீம் தலைமறைவாக இருந்தவாறு அமைப்புக்கு தலைமைத்துவத்தை வழங்கி வந்துள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சஹ்ரான் ஹாசீமின் ஆதரவாளராக இருந்து வந்துள்ள ஆமி மொய்தீன், சிப்லி பாருக் என்ற அரசியல்வாதியின் பாதுகாப்பாளராக கடமையாற்றினாரா என ஜனாதிபதி ஆணைக்குழு, நிலந்த ஜயவர்தனவிடம் வினவியுள்ளதுடன் அவர் ஆம் என பதிலளித்துள்ளார்.
READ MORE | comments

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!


இலங்கை முழுவதுமுள்ள அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நுகர்வுக்கு உட்படுத்திய மின்சார பாவனைக்கே இவ்வாறு சலுகை வழங்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 67 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா வைரஸ் பரம்பல் தீவிரம் அடைந்த நிலையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

சமூகத்தில் கொரோனா நோயாளிகளை சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலும், இவர்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சும் பிற துறைகளும் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நோயாளிகளின் பழகியவர்களை கண்டறியும் நடவடிக்கையில் சுகாதார சேவைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் உளவுத்துறை சேவைகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கோவிட் 19 வைரஸ் பரவுவது குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட லங்காபுரா பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நபர், கந்தக்காட்டில் அடையாளம் காணப்பட்ட நோயாளியின் உறவினராவார்.

இந்த சூழ்நிலை காரணமாக, பிரதேச செயலகம் மற்றும் அதை சார்ந்துள்ள மக்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டதுடன், 325 க்கும் மேற்பட்டவர்களுக்கு PCR பரிசோதனைகளுக்காக மாதிரிகள் பெறப்பட்டன என்றும் அவர் கூறினார்.
லங்காபுரா பகுதியில் போக்குவரத்து தடைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், இப்பகுதியில் வழக்கம் போல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் PCR பரிசோதனைகளின் முடிவுகளைப் பெற்ற பிறகு நிலைமையை மதிப்பிட முடியும் என்று அவர் கூறினார்.
READ MORE | comments

சற்றுமுன்னர் ஷானி அபேசேகர கைது

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சாட்சியங்களை
மறைத்த குற்றச்சாட்டு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டார்.
எனினும் ஷானி அபேசேகர தனது பணி நீக்கம் மற்றும் இடமாற்றத்துக்கு எதிராக அண்மையில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று..!

கொவிட்-19 தொற்று காரணமாக பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்று காரணமாக அந்த நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 13 ஆயிரத்து 789 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட்- 19 தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 171 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் கொவிட்-19 காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 29 ஆயிரத்து 44 ஆக உயர்வடைந்துள்ளது.

சர்வதேச ரீதியில், ஒரு கோடியே 74 லட்சத்து 46 ஆயிரத்து 301 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

6 இலட்சத்து 75 ஆயிரத்து 463 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு கோடியே 9 லட்சத்து 18 ஆயிரத்து 385 பேர் குணமடைந்துள்ளனர்.
READ MORE | comments

பொதுத் தேர்தலின் பின்னரான செல்நெறி தொடர்பில் எம்மிடம் பல வேலைத்திட்டங்கள் உள்ளன வாக்குகளுக்காக வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாமல்ல! தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்


பொதுத் தேர்தலின் பின்னரான செல்நெறி தொடர்பில் எம்மிடம் பல வேலைத்திட்டங்கள் உள்ளன வாக்குகளுக்காக வாக்குறுதிகளை வழங்குபவர்கள் நாமல்ல! தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கொள்கையில் பற்றுறுதியுடன் தளராது செயற்படுவோம்.  தேர்தலின் பின்னர் எவ்வாறு பயணிப்பது என்பது பற்றிய ஆரோக்கியமான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. தற்போதுள்ள கையறுநிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் கையாள்வது தொடர்பிலும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியிடத்தில் திட்டங்கள் உள்ளனவென்று அதன் பொதுச்செயலாளரும், வன்னிமாவட்ட தலைமை வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

கனகராஜன் குளத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் அலுலகத்தினை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய அரசியலும், தமிழர்களின் அபிலாஷைகளும் கையறுநிலையில் தான் தற்போதுள்ளது. அடுத்தகட்டமாக என்னசெய்வதென்ற வெறுமையான நிலைமையொன்றே காணப்படுகின்றது.

தமிழ்த் தரப்பில் காணப்பட்ட துருப்புச் சீட்டுக்கள் அனைத்தையும் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களில் சரணாகதி அரசியலுக்காக விட்டுக்கொடுத்துவிட்டது. தற்போது தமிழர் தரப்பின் பேரம்பேசல் என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறான நிலையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களும் மாறியிருக்கும் உலக அரசியல் ஒழுங்கை கவனத்தில் கொள்ளாது தமிழ் மக்கள் விடயத்தில் ஏதேச்சதிகாரமான கருத்துக்களையே தெரிவிக்கின்றார்கள். இனப்பிரச்சனை என்று ஒன்று இல்லையென்றே கூறுமளவிற்கு நிலைமைகள் மோசடைந்துள்ளன. பொறுப்புக்கூறலை செய்யமாட்டோமென்று சர்வதேசத்திற்கே சவால் விடுக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்த விடயங்களை தனியே ஒரு அரசியல் கட்டமைப்பாக நாம் கையாண்டு வென்றுவிடமுடியாது. ஆகவே தான் நாம் அடுத்தகட்ட செல்நெறி தொடர்பில் திட்டங்களைக் கொண்டிருக்கின்றோம்.

முதலாவதாக, தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து சர்வமததலைவர்களையும் ஓரணியில் திரட்டுவதோடு துறைசார் புத்திஜீவிகளையும் ஒருங்கிணைத்து ஒரு நிபுணத்துவம் நிறைந்த சிவில் அமைப்பொன்றை தோற்றுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

இந்த சிவில் அமைப்பானது முழுமையான ஜனநாயகப் போக்கினைக் கொண்டிருப்பதோடு, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குரலெழுப்பவல்ல சக்தியைக் கொண்டதாக அமையவுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சிதறிக்கிடக்கும் கொள்கைரீதியாக உடன்படவல்ல அமைப்புக்களை ஓரணியில் திரட்டி தமிழர் நிலத்திற்கும் புலத்திற்குமான உறவுகளை வலுவடையச் செய்யும் வகையிலான சிந்தனைக்குழாமொன்றை உருவாக்குதலையும் இலக்காக கொண்டிருக்கின்றோம்.

அதுமட்டுமன்றி அகத்திலும் புலத்தில் ஒருங்கிணைக்கப்படும் தரப்புக்களை மையப்படுத்தி தமிழர் தாயகத்தின் வாழ்வாதார, நிலையான அபிவிருத்திக்கான நிதிக்கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கும் முயற்சிகளை எடுக்கவுள்ளோம்.

அதேபோன்று இனப்பிரச்சினை தீர்வு, பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அரசியல் கட்சியின் நியாயமான நிலைப்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள்,சர்வமத தலைவர்களை ஒருங்கிணைத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

மேலும், இவை அனைத்தும் தேர்தல்காலத்தில் உங்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த மேடையில் மட்டும் வழங்கப்படும் வாக்குறுதிகளாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. எம்மைப் பொறுத்தவரையில் விடுதலையை எதிர்பார்த்திருக்கும் இனமொன்று தமது சமூகத்தின் அனைத்து தரப்புக்களையும் தன்னுள் ஈர்த்து கட்டமைப்பு மிக்கதாக நிறுவன மயப்படுத்தப்பட  வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும் துரிதகதியில் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் தகவல்கள் சேகரிப்பு

Thursday, July 30, 2020
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களுக்கான எதிர்கால பாடநெறிகளை தயார்படுத்துவதற்கான முதற்கட்ட செயற்பாடாக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக கடமையாற்றுபவர்களின் விபரங்கள் Niss இனால் திரட்டப்படுகிறது.

கீழுள்ள லிங்கிற்கு சென்று விண்ணப்ப படிவங்களை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை Niss ற்கு அனுப்பி வையுங்கள்.Niss இன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

READ MORE | comments

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் 2ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு

பொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலுக்கான 12,985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடு முழுவதும் 71 வாக்கெண்ணும் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலுக்காக மூன்றரை இலட்சம் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
READ MORE | comments

தேசிய பாடசாலைகளை அதிகரிக்க பரிந்துரை

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது.

தற்போது நாட்டில் 345 தேசிய பாடசாலைகள் உள்ளதாக செயலணியின் உறுப்பினரான கலாநிதி சுனில் ஜயரத்ன நவரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒரு தேசிய பாடசாலையேனும் இல்லாதுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
READ MORE | comments

10 வீத விபத்துக்களுக்கு பஸ்களுக்கிடையிலான போட்டித்தன்மையே காரணம்; விபத்து உயிரிழப்பு

பயணிகள் பஸ்களுக்கிடையிலான காணப்படும் போட்டித்தன்மையே வருடம் தோரும் ஏற்பட கூடிய விபத்துக்களில் 10 வீதத்திற்கு காரணமாகியள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, இந்த விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

அதற்கமைய விபத்துகளை ஏற்படுத்தும் பஸ்சாரதிகள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் , பஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ள போக்குவரத்து அனுமதிப்பத்திரமும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நுகேகொட பகுதியில் பஸ் ஒன்று இராணுவ கெப் வாகனத்துடன் மோதுண்டு இடம் பெற்ற விபத்தில் இராணுவத்தினர் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன் , இருவர் காயமடைந்திருந்தனர். இன்னுமொரு பஸ்ஸூடன் போட்டிக்கு பயணித்த பஸ் ஒன்றின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக கொலை குற்றம், கடுமையான காயம் , காயத்தை ஏற்படுத்தியமை , அவதானம் இன்றி வாகனம் செலுத்தியமை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை, வீதி சட்டவிதிகளை மீறியமை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து தொடர்பான விபரங்களை சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் , சட்டதரணியுமான ருவன் குணசேகர நீதி மன்றத்திற்கு அறிவித்ததுடன் , அதி சட்டதரணி ஜனக்க பண்டார இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதற்கமைய வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை கடந்த வருடம் மாத்திரம் 2688 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் , அவற்றில் சிக்குண்டு 2851 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் போது 34 விபத்துகள் அரச பேருந்துகளினாலும், 184 விபத்துகள் தனியார் பஸ்களினாலும் இடம் பெற்றுள்ளன. இவ்வருடத்தில் கடந்த மாதம் இறுதிவரையில் மாத்திரம் 994 வாகன விபத்துகள் இடம் பெற்றுள்ளதுடன் , இவற்றில் சிக்குண்டு 1044 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது அரச பேருந்துகளின் மூலம் 11 விபத்துகளும் , தனியார் பேருந்துகளின் ஊடாக 50 விபத்துகளும் இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும் போது வாகனவிபத்துகளில் 10 சதவீதமான விபத்துகள் பஸ்களின் ஊடாகவே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பேருந்துகள் போட்டிக்கு பயணிக்கும் போது அதிகளவான விபத்துகள் ஏற்படுவதுடன் , இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகவே காணப்படுகின்றது.அதனால் பதில் பொலிஸ்மா அதிபர் இந்த பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்காக இவ்வாறான பஸ்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய இதுபோன்ற விபத்துகளை செய்துள்ளதாக அடையாளக் காணப்படும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் , விபத்துகளுடன் தொடர்புடைய பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.
READ MORE | comments

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகளை வரவேற்கும் நிகழ்வு

Wednesday, July 29, 2020

மட்டக்களப்பு-தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(29) இடம்பெற்றது.

விரிவுரையாளர் ரி.முருகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புதிய பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், உப பீடாதிபதி( நிதியும் நிருவாகமும்) எஸ்.என்.எ.அரூஸ், உப பீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்) ரி.கணேசரெத்தினம், ஆகியோர் மாணவர்கள், கல்லூரி நிருவாகத்தினரால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

வரவேற்பு உரையினை முன்னாள் உப பீடாதிபதி திருமதி வா.குகதாசன் அவர்கள் வழங்கியதுடன், அறிமுக உரையினை தொடருறு கல்வி உப பீடாதிபதி திருமதி விக்கி மணிவண்ணன் அவர்கள் வழங்கி இருந்தார்.

மட்டக்களப்பு தாழங்குடா தேசியக் கல்விக் கல்லூரியில் புதிதாக நியமனம் பெற்றுள்ள பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகள் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் பதவி உயர்வுடன் இங்கு இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

10 ம் திகதியின் பின்னர் பாடசாலைகள் 200 மாணவர்களுக்கு குறைந்த, 200 மாணவர்களுக்கு கூடிய வகையில் ஆண்டு அடிப்படையில்

10 ம் திகதியின் பின்னர் பாடசாலைகள்
 200 மாணவர்களுக்கு குறைந்த,
200 மாணவர்களுக்கு கூடிய வகையில் ஆண்டு அடிப்படையில் மாணவர் வரவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

விபரங்கள் கீழே......
READ MORE | comments

மட்டக்களப்பில் சம்பந்தன் கலந்துகொண்ட கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்

இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது பிரச்சாரக் கூட்டம் இன்று (29) மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கடசியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா, ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமத்திரன்,  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டவேட்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழரசுக் கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், மா.உதயகுமார், மு.ஞானப்பிரகாசம், இரா.சாணக்கியன், ந.கமலதாசன், 

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா, வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன், மாநகர சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலய வனவாச நிகழ்வு -2020


திருப்பழுகாமம் ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலய

வனவாச நிகழ்வு -2020READ MORE | comments

மட்டக்களப்பு கரடியனாறு ஆற்றில் மணல் அள்ளச் சென்றவர் மாயம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
‪ஆற்று மணல் அள்ளச் சென்றவர் முதலை கௌவியதில் மாயமாகியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 29.07.2020 மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கறுத்தப்பாலம் முந்தானை ஆற்றில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி மயில்வாகனம் (வயது 48) என்பவரே காணாமல் போயுள்ளார். தேடுதல் தொடர்ந்து இடம்பெறுகிறது.

சம்பவதினம் காலை இவர் வழமைபோன்று கறுப்புப் பாலம் முந்தானை ஆற்றில் ஆற்று மணல் ஏற்றுவதற்காக மாட்டு வண்டிலில் சென்று ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருக்கும்போது முதலை கௌவியுள்ளது.

அவர் அபயக் குரல் எழுப்பியபோதிலும் அக்கம்பக்கத்தில் எவருமிருக்கவில்லை என்றும் தூரத்தே இருந்து உதவிக்கு ஆட்கள் விரைந்து வருவதற்கிடையில் முதலை இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் மணல் ஏற்றுவதற்காக கொண்டு சென்ற எருதுகளும் வண்டிலும் ஆற்று மருங்கில் கிடந்த நிலையில் உறவினர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம்பற்றிய விசாரணைகளில் கரடியனாறு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

வழமையாக இந்த கறுப்புப் பாலம் ஆற்றில் முதலைகள் நடமாடுகின்ற போதிலும் அங்கு ஆற்றுமணல் அள்ளும் மாட்டு வண்டில்காரர்களை முதலைகள் தாக்குவதில்லை என்று மாட்டு வண்டில் மணல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விதம் மணல் அள்ளும் மாட்டு வண்டில் காரர் ஒருவரை முதலை கௌவிச் சென்றது இதுவே முதற் தடவை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்
READ MORE | comments

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம் அதிகரிப்பு

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட 17 சுற்றிவளைப்புகளில் 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் அதிபர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்கள் நால்வர், கான்ஸ்டபிள் ஒருவர், பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் மற்றும் நேர கட்டுப்பாட்டாளர் ஒருவர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதனைத் தவிர குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதிவாளர், மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர், பிரதேச செயலாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் கிராம சேவகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டில் கடந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 27 ஆம் திகதி வரை 24 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய சுட்டிக்காட்டினார்.
READ MORE | comments

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் சற்று முன்னர் வெளியாகிய அதிரடித் தீர்மானம்!!

2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களுக்கான நேரத்திலும் வினா கட்டமைப்பிலும்  மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கும் , அத்தோடு இரண்டாம் பகுதியில் உள்ள 3 வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதினால் போதுமானது எனவும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

பொதுத் தேர்தல் வாரத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை !

இம்முறை பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார். அதன்படி, ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 11, 12, 13 ஆம் தர மாணவர்களுக்காக கடந்த 27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவர்களுக்கு மாத்திரம் இந்த விடுமுறைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஏனைய தர மாணவர்களுக்காக பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

ஸ்ரீலங்காவை அதிர வைத்த குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரிகள் தொடர்பில் வெளியான தகவல்

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது முக்கிய சூத்திரதாரியாக நவ்பர் மௌலவி என்பவரே செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,
READ MORE | comments

ஸ்ரீலங்கா ராஜபக்சாக்களின் பரம்பரை சொத்தல்ல! இதற்கு ஒருபோதும் அனுமதியோம் - ஞானசாரர் காட்டம்

இந்த நாடு மஹிந்த ராஜபக்சக்களின் பரம்பரை சொத்தல்ல. பரம்பரை அரசியல் என்பதை ஒருபோதும் அனுமதியோம் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மாத்தளை நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
பரம்பரை அரசியல் என்பதை ஒருபோதும் அனுமதியோம். இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைமைத்துவம் தேவைப்பட்டது.
அதுவும் பௌத்த நாடான இந்த நாட்டையும், பௌத்தர்களையும் பாதுகாக்கும் சுத்தமான ஒரு பௌத்தனின் தேவை எமக்குத் தேவைப்பட்டது.
எதற்கும் அசைந்து கொடுக்காது எந்த அடிப்படைவாதத்திற்கும் அடிபணியாத நல்ல பௌத்த தலைவன் தேவைப்பட்டதால் கடந்த பொதுத் தேர்தலில் 69 இலட்சம் தனி பௌத்த மக்களின் வாக்குகளோடு நாம் கோட்டாபய ராஜபக்சவைத் தெரிவு செய்தோம்.
இந்த 69 இலட்சம் வாக்குகளுக்கும் மூலகர்த்தாக்கள் நாம் தான் என்பதை மிகவும் ஆணித்தரமாக கூறிக் கொள்கிறேன் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் இல்லாமல் எவரும் வெற்றியடைய முடியாது என்ற அடிப்படை வாதிகளின் போலிவாதங்களை நாம் ஜனாதிபதித் தேர்தலில் உடைத்தெறிந்துவிட்டோம்.
நடக்க போகும் ஆகஸ்ட் மாதத் தேர்தலின் போது இந்த நாட்டு பௌத்தர்கள் ஓரணியாக திரண்டு கலப்படம் இல்லாத ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.
READ MORE | comments

நாட்டை கட்டியெழுப்பும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் 100,000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான ஆரம்பக் கூட்டம்.

 

நூருல் ஹுதா உமர்

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் 100,000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான பிரதேச மட்ட ஆரம்பக் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு எஸ் பார்த்திபன் அவர்களும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு தி.மோகனகுமார் அவர்களும், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு த.சிவநேசன் அவர்களும் மற்றும் காரைதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட திணைக்களத்தின் தலைவர்களும் பங்குபற்றினார்கள்.

இதன் போது பயிற்சி வழங்குவதற்கான இடங்கள், பயிற்சி வழங்குவதற்கான வளவாளர்கள், தொழிலின் போது பயிற்சி போன்ற விடயங்கள் பிரதேச செயலாளரினால் கலந்துரையாடப்பட்டது
READ MORE | comments

புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

Tuesday, July 28, 2020

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றிணைந்த பொது பிரச்சாரக் கூட்டம் திங்கட்கிழமை(27) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.

தமிழரசுக் கட்சி வேட்பாளர் மா.உதயகுமார் தலைமையில் இக் கூட்டம் இடம்பெற்றது.

இப் பிரச்சார நிகழ்வில் கூட்டமைப்பின் வேட்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், தமிழரசுக் கட்சி செயலாளர் கி.துரைராஜசிங்கம்,  கோ.கருணாகரம், மா.உதயகுமார், மு.ஞானப்பிரகாசம்,  இரா.சாணக்கியன், ந.கமலதாசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா,

வடகிழக்கு வாலிபர் முன்னணி தலைவர் சேயோன், மாநகர சபை உறுப்பினர்கள், மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
READ MORE | comments

ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் போடப்படவுள்ள பலத்த இராணுவப் பாதுகாப்பு!

ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் முழுமையான இராணுவப் பாதுகாப்புக்குள் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும் அதே நாள் இரவிலேயே வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிப்பது வழமை. ஆனால், இம் முறை ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலையே வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம்- கனடா புதிய ஜனநாயக கட்சி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மிகவும் அவசியமென கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்  வலியுறுத்தியுள்ளார்
கறுப்பு ஜூலை தினத்தை  முன்னிட்டு  புதிய ஜனநாய கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 1983 ஜூலை 23 ஆம் திகதிக்கும்  29ஆம் திகதிக்கும்  இடைப்பட்ட காலப்பகுதியில்  இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றன.
அதாவது குறித்த காலப்பகுதியில் பெரும்பாலான  காடையர் கும்பல்கள் இலங்கையின் பல  பாகங்களிலும் இனக்கலவரத்தில் ஈடுபட்டன.
குறித்த கலவரத்தில்   3000 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 1,50,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.
இத்தகைய நிகழ்வுகளினால் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் வாழவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
இனப்படுகொலை மற்றும் உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட துயரங்களை இன்னமும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்களின் நிலைமைகளை நாங்கள்  உணர்கின்றோம். அதேநேரம் எங்களை பிளவுபடுத்தக்கூடிய வெறுப்பின் வலிமை குறித்து நாங்கள் அலட்சியமாக இருக்க கூடாது.
இலங்கையின் உள்நாட்டுப்போரின் இருண்ட நாட்கள் நல்லிணக்கம், நீதி மற்றும் உண்மை ஆகியவற்வை ஏற்படுத்துவதிலும் இன்னமும் துயரத்தை அனுபவிப்பவர்களினது காயங்களை ஆற்றுவதிலும், நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் எங்களுக்கு கூட்டு பொறுப்புள்ளதை நினைவுபடுத்தி நிற்கின்றன.
எனவே இலங்கையில் இடம்பெற்ற  இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியமென நாமும் வலியுறுத்துகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கருணாவால் மட்டுமே அதனை நிறைவேற்ற முடியும்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சாத்தியமாக வேண்டுமாக இருந்தால் அதற்கு கருணா பாராளுமன்றம் செல்ல வேண்டும். அவர் மூலமாக மாத்திரம் தான் அதனை நிறைவேற்ற முடியும் என முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் தெரிவித்தார்.
காரைதீவில் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகாசபை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,
சுதந்திரத்திற்குப் பின் அம்பாறை மாவட்ட தமிழர்களில் எம்.பியாக முதலில் வந்தவர்கள் ஏதோ சிலவற்றைச் செய்தார்கள்.
ஆனால் இறுதியாக வந்த பியசேன மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் தங்களை வளர்த்தார்களே தவிர மக்களுக்கு ஏதும் செய்யவில்லை.
இவர்கள் கடந்த நாலரை வருடங்கள் வீணாக காலத்தைக் கழித்துவிட்டு வாக்களித்த மக்களையும் ஏமாற்றிவிட்டு இன்று மீண்டும் வருகிறார்.
என்னமுகத்தோடு அவர் வாக்குக்கேட்டு வருகிறார். என்ன தகுதி, உரிமை இருக்கிறது. பெயருக்கு ஒரு விஞ்ஞாபனம். அதில் ஒன்றையாவது நிறைவேற்ற முடிந்ததா? வெளிநாட்டுப் பயணம். நிதிச்சேகரிப்பு அவ்வளவே முடிந்தது என்றார்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |