Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம் அதிகரிப்பு

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட 17 சுற்றிவளைப்புகளில் 21 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் அதிபர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்கள் நால்வர், கான்ஸ்டபிள் ஒருவர், பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் மற்றும் நேர கட்டுப்பாட்டாளர் ஒருவர் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதனைத் தவிர குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதிவாளர், மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர், பிரதேச செயலாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் கிராம சேவகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டில் கடந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 27 ஆம் திகதி வரை 24 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments