பொலிசாரின் எச்சரிக்கைக்கு ஆளானார் டோனி
சாலை விதிமுறைகளை மீறி தவறான பாதையில் சென்று கொண்டிருந்த டோனியை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் அரையிறுதியில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.
அப்போது பைக் பிரியரான டோனி மட்டும் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு, தனது தனது ஐரோப்பிய தயாரிப்பான எக்ஸ் 132 ஹெலிகேட் பைக்கில் சென்றுள்ளார். இதன் பதிவு எண் 7781(டோனியின் பிறந்த நாள் 07.07.1981).
265 கி.மீ தூரம் பயணித்து ஜெய்ப்பூர் நகரத்தை அடைந்ததும், பைக்கினை ஓட்டலுக்கு அனுப்பி விட்டு காருக்கு மாறியுள்ளார்.
ஆனால் தவறான பாதையில்(One Way) சென்ற டோனியை, போக்குவரத்து பொலிசார் பார்த்து விட்டனர்.
உடனடியாக காரை நிறுத்தி, டோனியை வெளியே வரச்சொல்லி விசாரித்துள்ளனர்.
பின் டோனி என்று தெரிந்த உடனே, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
0 Comments