Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகளை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு-தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகளை வரவேற்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை(29) இடம்பெற்றது.

விரிவுரையாளர் ரி.முருகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புதிய பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், உப பீடாதிபதி( நிதியும் நிருவாகமும்) எஸ்.என்.எ.அரூஸ், உப பீடாதிபதி (கல்வியும் தர மேம்பாடும்) ரி.கணேசரெத்தினம், ஆகியோர் மாணவர்கள், கல்லூரி நிருவாகத்தினரால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

வரவேற்பு உரையினை முன்னாள் உப பீடாதிபதி திருமதி வா.குகதாசன் அவர்கள் வழங்கியதுடன், அறிமுக உரையினை தொடருறு கல்வி உப பீடாதிபதி திருமதி விக்கி மணிவண்ணன் அவர்கள் வழங்கி இருந்தார்.

மட்டக்களப்பு தாழங்குடா தேசியக் கல்விக் கல்லூரியில் புதிதாக நியமனம் பெற்றுள்ள பீடாதிபதி மற்றும் உப பீடாதிபதிகள் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் பதவி உயர்வுடன் இங்கு இடமாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments