மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு மாணவியுடன் படுத்துறங்கிய ஆசாமி மானிப்பாய்ப் பகுதியில் சம்பவம்

Monday, June 30, 2014

மானிப்பாய்ப் பகுதியில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காயத்தைப் பார்த்த மருத்துவர் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அவதானித்து பொலிசாரிடம் தெரிவிக்க முற்பட்ட போது இளைஞர் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர்குழு ஒன்று குறித்த இளைஞனை பொலிசாரிடம் நாங்கள் அடித்ததாகத் சொல்லக்கூடாது என அவனை அச்சுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் வைத்தியர் அவர்களை விசாரித்த போதே அவர்கள் அவ் இளைஞனுக்கு ஏன் அடித்தது என வைத்தியருக்கும் அங்கு நின்றவர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அரச அலுவலகம் ஒன்றில் சிற்றூழியர் எனவும் அத்துடன் மானிப்பாய்க்கு சற்றுத் தொலைவில் உள்ள இடமொன்றில் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்று நடாத்தி வருபவர் எனவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான குறித்த நபர் தொலைத் தொடர்பு நிலையத்திற்கு றீலோட் செய்ய வரும் பெண்களின் இலக்கங்களை எடுத்து அவர்களுக்கு காதல் மொழி கதைத்து வந்த போது ஒருதடவை பெண் ஒருவரின் சகோதரனால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தனது தொலைபேசி நிலையத்தில் வேலைக்கு நின்ற யுவதியையே திருமணம் முடித்துள்ளார். அதுவும் நான்கு மாத கர்ப்பிணியாக்கி பெண்ணின் பெற்றொரும் உறவினர்களும் கொடுத்த அழுத்ததினாலேயே திருமணம் முடித்ததாகவும் அவ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த வாரம் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை ஆனைக்கோட்டையில் உள்ள அவளது தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனியே தனது வீட்டில் இருந்துள்ளார். தனது கடைக்கு வந்த நகரப்பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவிக்கு இலவசமாக றீலோட் செய்து கொடுப்பதும் தனது தரமான கைத்தொலைபேசியை மாணவிக்கு சில நாட்கள் வைத்திருக்கும் படி கொடுத்தும் மாணவியை தனது பக்கம் இழுத்து தனது வீட்டிற்கு வரச் செய்து உல்லாசமாக இருந்துள்ளார். குறித்த மாணவி தனியே இருந்த இளைஞனின் வீட்டிற்கு செல்வதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் மாணவியுடன் இளைஞர் உல்லாசமாக இருந்த போதே கையும் மெய்யுமாகப் பிடித்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.

தாக்குதலில் தலையில் காயமiடைந்த இளைஞனை அவர்களே வைத்தியசாலையின் அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் அவர் பொலிசாரிடம் முறையிடாது இருக்க மீண்டும் வந்து தாம் எச்சரித்ததாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

இன்று மாலை அவசரமாக கூடுகிறது ஆளும்கட்சி தலைமை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை பேருவளையில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்போது நடைபெறவுள்ள ஊவா மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
READ MORE | comments

சமூக வலைத்தளங்களை ஒடுக்க அவசரசட்டம் கொண்டுவர அரசாங்கம் முயற்சி!

முகநூல்கள், 'புளொக்குகள்' போன்ற சமூக வலைத்தளங்களை அவசர சட்டங்கள் மூலம் அடக்கி, ஒடுக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அளுத்கம, பேருவளைச் சம்பவங்கள் பற்றிய பல தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே மக்கள் மத்தியில் பரவின. இதனையடுத்தே அவசரமாகக் கொண்டு வரப்படவிருக்கும் சில சட்டமூலங்களையும், தண்டனைச் சட்டக் கோவையின் சில பிரிவுகளையும் பயன்படுத்தி இந்த சமூக வலைத்தளங்களை முடக்கும் எத்தனம் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றது.
தீவிர இன, மத, குழப்பங்கனையும் குரோதங்களையும் எழுத்து மூலமோ, பேச்சு, உரைகள் மூலமோ ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்திருக்கும் உத்தரவையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. மதக் குழப்பங்களை ஏற்படுத்தும் இணையத்தளங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நேரடியாகவே குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 15 ஆம் திகதி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்த ஞானாசார தேரர் அளுத்தகமவில் ஆற்றிய உரையை 'யு ட்யூப்' ஊடாக சமூக வலைத்தளங்கள் அப்படியே அதைப் பகிர்ந்திருந்தன என்பதும், அதுவே உண்மையில் அந்த வன்முறைகளைத் தூண்டிய சூத்திரதாரிகள் யார் என்பதை அம்பலப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

சூறைக்காற்றினால் முறிந்து வீழ்ந்தன உயர் அழுத்த மின்கம்பங்கள்! - இருளில் மூழ்கியது தீவகம்.

காரைநகர் - பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் சூறைக்காற்றினால் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது. நேற்று மாலை 5 மணியளவில் வீசிய கடும் காற்றினால் காரைநகர் - பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மூன்று முறிந்து வீழ்ந்து மின்சாரக் கம்பிகளும் அறுந்தன. இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, புங்டுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு போன்ற பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன.
யாழ். -ஊர்காவற்றுறை பிரதான வீதியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வீதியால் பயணம் செய்தோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீள வழங்குவதற்கான துரித நடவடிக்யைில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

மங்கள சமரவீர வாயைப் பொத்திக் கொள்ள வேண்டும்! - எச்சரிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச

மங்கள சமரவீர வாயைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசியல் தேவைகளுக்காக நாட்டின் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்களை மங்கள சமரவீர வெளிப்படுத்தி வருகின்றார். வாய்க்கு பிரேக் இன்றி இவ்வாறான கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தால், மக்கள் மங்களவிற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள். மங்கள சமரவீர இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
இதனால் முஸ்லிம் மக்கள் இராணுவத்தின் மீது நம்பிக்கையை இழக்கக் கூடும். இவ்வாறு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரச இரகசிய சட்டங்களின் அடிப்படையில் மங்களவின் கருத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது என்றார்.
READ MORE | comments

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என விரும்பிய சோனியா!

இலங்கையிலிருந்து வெளிவரும் 'திவயின' என்ற பத்திரிக்கை பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகளை பழிவாங்குவதில் சோனியா காந்தி தீவிரம் காட்டினார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியின் விவரம் வருமாறு.. "முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை பழி தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி விரும்பினார். எனவே, அவர்களை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார்.
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அவர் விரும்பினார். குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மீது சோனியா கடும் விரோதம் காட்டினார். போரை முடிவுக்கு கொண்டு வர சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்த போதிலும் இந்தியா அதற்கு இடமளிக்க வில்லை" என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய பத்திரிகை நிருபர் சாம் ராஜப்பா என்பவர் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

மொபைல் போனில் பேசிக்கொண்டே சார்ஜ் ஏற்றிய பிலிப்பைன்ஸ் பெண் பரிதாப பலி.

Sunday, June 29, 2014

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண், தனது மொபைல் போனில் பேசிக்கொண்டே சார்ஜரை எடுத்து பிளக்கில் செருகியபோது மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயது பெண் Sheryl Aldeguer என்பவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த North Gosford என்ற நகரில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் துபாயில் உள்ள தனது தோழி ஒருவரிடம் இருந்து அவருக்கு போன் வந்தது. அவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போது தனது மொபைல் போனில் சார்ஜ் குறைவாக இருப்பதை அறிந்து மொபைல் போனில் பேசிக்கொண்டே சார்ஜரை எடுத்து மின்சார பிளக்கில் செருகினார். தரம் குறைந்த சார்ஜரால் மின்சாரம் கசிந்து அவருடைய மொபைல்போனில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கியெறியப்பட்டார். 

இதை அருகில் இருந்து பார்த்த அவருடைய கணவர் Luigi Aldeguer அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக கூறினர். அந்த சார்ஜரை அவர் கடந்த வாரம்தாம் $5 கொடுத்து புதிதாக வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் செய்யக்கூடாது என பலமுறை செல்போன் நிறுவனங்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

சிறுபான்மையினர் அபிவிருத்தி அடைவதை பெரும்பான்மையினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! - மன்னார் கூட்டத்தில் விக்னேஸ்வரன்

தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் இயலுமானவரை ஒத்தாசை வழங்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபையின் சிறுவர் பூங்கா மாற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சி.வி.விக்னேஸ்வரன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மாந்தை மேற்கு பிரதேச சபை மற்றைய பிரதேச சபைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இன்று நடந்து கொண்டுள்ளது. சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் ஆனவை எமது இளம் பிராயத்தினருக்குப் பயன் உள்ளவை என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. ஆனால் அவற்றைப் பராமரிக்க ஆவன செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அழகாகப் பல இடங்களைத் திறந்து வைத்து விட்டு பராமரிக்காமல் பல தாபனங்கள், திணைக்களங்கள் இருந்து வருவதை நான் கண்டுள்ளேன். அதனால் தான் இவற்றை கரிசனையுடன் பராமரித்து வாருங்கள் என்று கூறி வைக்கின்றேன்.
இந்த விழாவில் சகோதரர் றிசாத் பதியுதீனுடன் சேர்ந்து பங்கு பற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அரசாங்க அமைச்சருடன் மாகாண அரசு இணைந்து இவ்விழாவில் ஈடுபட்டுள்ளது என்பதிலும் பார்க்க தமிழ் - முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இது வழிவகுத்துள்ளது என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம். இவ்வாறு நான் கூறுவதற்கு பலர் ஆட்சேபனை தெரிவிக்கக்கூடும். அதாவது பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் ஏன் முதலமைச்சர் இரு இனங்களின் ஒத்துழைப்பை மட்டும் வலியுறுத்துகின்றார். இது இன ரீதியான பாகுபாடு அல்லவா என்று அவர்கள் கேட்கக் கூடும். வரவேற்கப்பட வேண்டிய வார்த்தைப் பிரயோகம் அது. ஆனால் அதற்குக் காரணம் உண்டு.
இது வரை காலமும் தமிழரில் சிலரும், முஸ்லிம்களில் பெரும்பான்மையினரும் 'சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற கூற்றுக்கு அமைவாக வாழ்ந்து வந்தார்கள். நாம் பெரும்பான்மையினரின் மொழியில் தேர்ச்சி பெற்று எமது சமயத்தையும் வாழ்க்கை முறையையும் கைவிடாது அவர்களுடன் நல்லுறவுடன் ஒழுகி வந்தோமானால் எமக்குப் பிரச்சினைகள் எழ மாட்டா என்று முஸ்லிம் சகோதரர்கள் இதுவரை நினைத்து வாழ்ந்து வந்தார்கள். ஏன் தமிழ் பேசும் மக்களும் எங்களைப் போல் நல்லுறவுடன் வாழாமல் முரண்டு பிடிக்கின்றார்கள் என்றும் கேள்வி கேட்டு வந்தார்கள்.
ஆனால் அண்மையில் நடந்திருக்கும் அனர்த்தங்கள் அவர்களைச் சற்று சிந்திக்க வைத்துள்ளன. சகோதரர் ரிஷாட் ஜனாதிபதியுடன் நேருக்கு நேர் மோதவும் இடமளித்துள்ளது. இந்த உறவு முறைகளின் தாற்பரியம் என்ன என்று பார்த்தோமானால் ஒரு சிறுபான்மையினர் அவர்களின் கைக்கு அடங்கும் விதத்தில் வாழ முற்பட்டால் தான் பெரும்பான்மையினர் அதனைப் பொறுத்துக் கொள்கின்றார்கள்.
சிறுபான்மையினர் தம் கண்கள் முன் அபிவிருத்தி அடைந்து நல்ல நிலையை அடைவதைப் பார்த்தார்களானால் உடனே மனவெதும்பலுக்கு ஆளாகின்றார்கள். எங்களையும் பார்க்க விரைவில் முன்னேற இவர்களுக்கு என்ன உரித்து இருக்கின்றது என்று சிந்திக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பின்னர் அதைத் தடை செய்ய முற்படுகின்றார்கள்.
ஆகவே அவர்களின் மொழியைப் படித்து அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஒப்பான விதத்தில் நாங்கள் வாழ முற்பட்டாலும் இந்த மனோநிலையில் மாற்றம் வரப்போவதில்லை என்பதை அண்மைக் கால நடவடிக்கைகளால் நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். தமிழ் மக்கள் தமது தனித்துவத்தை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்ததின் காரணம் இது தான். எவ்வளவு தான் நாங்கள் சிங்களவர் போல் நடந்து கொண்டாலும், அவர்களின் நடை உடை பாவனைகளை எமதாக்கிக் கொண்டாலும் எங்களைத் 'தம்பியோ' என்றும் 'உன் தெமளுன்'என்றுந் தான் பெரும்பான்மையினர் ஒரு வித வெறுப்புடன் அழைக்கத் தலைப்படுகின்றனர் 'சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் சேராது' என்றார்கள் எமது தமிழ் மக்கள். 'இல்லை சேருவன'என்றார்கள் பெரும்பான்மை முஸ்லிம் மக்கள். இன்று சேராது என்ற உண்மை வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதற்கு நாங்கள் முஸ்லிம் மக்களைக் குறை கூறுவதாக நினைக்கக் கூடாது. குறை கூறுவதானால் மந்தைக் கூட்டத்தில் இருந்து ஒரு ஆடு வெளியே சென்று திரும்பவும் ஆட்டு மந்தையுடன் வந்து கூட்டுச் சேர்ந்ததைத் தான் நாங்கள் சுட்டிக் காட்ட வேண்டும்.
வட கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் மக்களின் தாய் மொழி தமிழ். அவர்கள் மற்றைய தமிழ் மொழி பேசும் மக்களுடன் மிகவும் அன்னியோன்யமாகவே வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அந்த பாரம்பரிய உறவை பரிகசித்துத் தூக்கி எறிந்ததே எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் பேசும் அலகு ஆட்சிக்கு வரவேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியும் அதனை உதாசீனம் செய்தது எமக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. என் நண்பர் திரு.ஆ.ர்.ஆ.அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் அவர் தமிழ் - முஸ்லிம் உறவைப் பேணிப் பாதுகாக்கவே முடிவு எடுத்திருப்பார் என்பது எனது கணிப்பு.
பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்து விடும். இன்று கூட திரு.சம்பந்தன் பற்றியும் அரசாங்கத்துடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழத் தலைவர்கள் பற்றியும் பெரும்பான்மை சமூகத்தினரிடையே இருக்கும் கருத்தைக் கணித்தால் அவர்களுக்குத் திரு.சம்பந்தன் மீது இருக்கும் மட்டு மரியாதை மற்றவர்கள் மீது இல்லை என்பது தெரியவரும். இதனை நான் அரசியலுக்கு வர முன்பே தெரிந்து வைத்திருந்தேன். எப்பொழுதுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அரசியல் செய்வதே சாலப் பொருந்தும் என்று நம்புகின்றேன்.
இன்று அமைச்சர் எம்முடன் ஒரே மேடையை அலங்கரிப்பதால் அவரிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றேன். தயவு செய்து தமிழ் -முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் இயலுமான வரை ஒத்தாசை வழங்குங்கள். அதுவும் மன்னாரில் தமிழ்பேசும் கிறிஸ்தவ மக்களின் நலன்களைப் பாதுகாப்பீர்களாக! நாங்கள் சேர்ந்து ஆனால் எமது தனித்தனியான உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

அகதிகளை பொறுப்பேற்கத் தயாராகும்படி கிறிஸ்மஸ் தீவு அதிகாரிகளுக்கு உத்தரவு!

அகதிகள் வந்தால், அவர்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவுஸ்ருலியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலர்னா மெக்டியர்னான் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அகதிகள் படகு ஒன்றில் இருந்தவர்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் தமது படகில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள். இந்தப் படகு தென்னிந்தியாவில் இருந்து வந்ததெனவும், அதில் 37 சிறுவர்கள் அடங்கலாக 152 பேர் இருப்பதாகவும் தெரிவதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இரு படகுகளில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை சனிக்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பதாக மெக் டியர்னன் தெரிவித்தார். எந்தவிதமான படகுகளும் வந்ததாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று குடிவரவு அமைச்சர் கூறி இருந்த போதும், நேற்று இரண்டு படகுகளை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் உடனடியாக நவ்ரு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ MORE | comments

நவநீதம்பிள்ளைக்கு புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது ஐ.நா மனித உரிமைகள் பேரவை!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்றுமுன்தினம் புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பணியாற்றிய, நவநீதம்பிள்ளையின் பணிக்காலம் இன்னும் எட்டு வாரங்களில் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில் அவருக்குப் பிரிவுபசாரம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் மைக்கேல் முல்லர் வாசித்தார்.
நவநீதம்பிள்ளை ஒரு அசாதாரணமான மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றியுள்ளதாகவும், நம்பகத்துடனும், உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர் பாடுபட்டவர் என்றும் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.அதையடுத்து நவநீதம்பிள்ளையின் பணியைப் பாராட்டியும், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தியும், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
இறுதியில், தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை, தன் மீது அன்பு பாராட்டியதற்கும் நன்றி தெரிவித்தார்.
READ MORE | comments

சவூதியில் மரணமடைந்த மட்டக்களப்பை சேர்ந்த மூவரின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை

Saturday, June 28, 2014

சவூதி அரேபியாவில் தொழில் வாய்ப்புக்காக சென்று அங்கு மரணமடைந்த மட்டக்களப்பை சேர்ந்த மூவரின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சவூதிக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றவர்களில் மூவர் இயற்கை மரணமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து அவர்களின் சடலங்களை கொண்டு வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவலொன்று தெரிவிக்கின்றது சவூதி அரேபியாவின் றியாத் நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு நாவற்காட்டைச் சேர்ந்த ஞானச்செல்வம் சிவரூபன் என்பவரின் சடலம்,அப்ஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள கல்லடி, வேலூர் பிரதேசத்தைச் சேர்ந்த நாகமணி பத்மநாதன் என்பவரின் சடலம், ஜித்தாவிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நற்பிட்டிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ரமணி ஆகியோரின் சடலங்களையே இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவற்றில், இருவரின் சடலங்கள் ஒரு மாத காலமாகவும் மற்றொருவரின் சடலம் இரண்டு மாத காலமாகவும் வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கையிலுள்ள வெளிநாட்டமைச்சு மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராலய அதிகாரிகளுடன்  தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது
READ MORE | comments

மட்டக்களப்பு வாகனேரியில் விபத்து – இருவர் காயம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியின் வாகனேரிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பன்னல பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து கொழும்பை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரின் சாரதி உள்ளிட்ட இருவர் காயமடைந்த நிலையில் பொலனறுவை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.vaknrevaknre-01
READ MORE | comments

சிறுவர்களுடன் குளத்தில் குளித்த பேய்! (வீடியோ இணைப்பு)

மும்பையில் சிறுவர்கள் குளித்துகொண்டிருந்த குளம் ஒன்றில் மர்ம உருவம் ஒன்று குளத்தில் குதித்த காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. 
அந்த மர்ம உருவம் பேயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இணையத்தில் இந்த காணொளி பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளதோடு வேகமாய் பரவிவருகிறது.
READ MORE | comments

மட்டக்களப்பில் கல்விக்கு வித்திட்ட மெதடிஸ்த மிஷன் பாதிரியார் இருநூறாவது ஆண்டு விழா

இலங்­கையில் சுவி­சேசம் பரப்­பு­வ­தற்­காக வந்த மேற்­கு­லக அருட்­ப­ணி­யா­ளர்கள் கல்­வி­யையும் காத்­தி­ர­மான முறையில் பரப்­பினர். அன்ன சத்­திரம் யாவினும் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்­த­றி­வித்தல் என்று பாரதி பின்­னாளில் பாடி­யதை அவர்கள் அன்றே உணர்ந்து கொண்­டனர். எனவே, மிஷ­ன­ரிமார் கல்விச் சாலை­களை நிறு­வினர்.
இலங்­கையின் தேசா­தி­ப­தி­யாக இருந்த மேஜர் ஜெனரல் சேர் றொபேட் பிரௌன்றிக் (1812–—-1820) கிழக்குப் பகு­தி­யிலும் பாட­சா­லை­களை ஆரம்­பிக்­கு­மாறு இலங்கை வந்­தி­ருந்த மெத­டிஸ்த மிஷ­ன­ரி­மாரைப் பணித்தார். வண. ஜோஜ் தலை­மையில் இங்­கி­லாந்து போட்ஸ் மௌத் துறை­முகத்­தி­லி­ருந்து 1813 டிசம்பர் 30 ஆம் திகதி புறப்­பட்ட குழு­வி­னரே இவர்கள். இக்­கு­ழு­வுக்குத் தலைமை தாங்­கிய வண. ஜோஜ் வரும் வழியில் படகில் மர­ண­மானார். மட்டு. மத்­திய கல்­லூரி தாபகர் வண. வில்­லியம் ஓல்ட் பாதி­ரி­யாரும் மனை­வி­யுடன் இக்­கு­ழு­வி­ன­ருடன் புறப்­பட்­டி­ருந்தார். 1814 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி அவரின் இளம் மனை­வியும் நோய்­வாய்ப்­பட்ட நிலையில் உயிர் துறந்தார். கடல் பயணம் உடல் நிலைக்கு சாத­க­மாக அமை­ய­வில்லை. இறந்த இரு­வரின் உடல்­களும் வேறு வழி­யின்றி கட­லி­லேயே அடக்கம் செய்­யப்­பட்­டன. எஞ்­சியோர் 1814 யூன் 29 இல் காலி துறை­மு­கத்தை வந்­த­டைந்­தனர். துண்டு குலுக்­கப்­பட்டு வில்­லியம் ஓல்ட் மட்­டக்­க­ளப்­புக்கு அனுப்­பப்­பட்டார்.
இங்கு வந்த அவர் அரச களஞ்­சி­ய­சா­லையில் 5 மாண­வர்­க­ளுடன் ஒரு பாட­சா­லையை தாபித்தார். பிரித்­தா­னிய இரா­ணு­வத்­தி­னரின் 3 அநாதைக் குழந்­தை­களும் இ.தா. சோம­நா­தரும் நால்­வ­ராவர். சோம­நாதர் பின்னர் கச்­சே­ரியில் முத­லி­யா­ராக பணி­பு­ரிந்தார். 5 ஆவது சிறுவன் யார் என்று அறி­யப்­ப­ட­வில்லை. இளம் மனை­வியை இடை­வழி பய­ணத்தில் பிரிந்த துயர் நெஞ்சில் கனத்த நிலையில் அன்று அவர் ஆரம்­பித்த பாட­சாலை இலங்­கையின் 1 ஆவது ஆங்­கிலப் பாட­சாலை என்று கூறப்­ப­டு­கி­றது. அப்­பா­ட­சாலை தான் மெத­டிஸ்த மத்­திய கல்­லூரி என்று பெயர் பெற்று இன்று இருநூறாவது விழாவைக் கொண்­டா­டு­கின்­றது. வங்கக் கடலில் (வங்­காள விரி­குடா) வங்­கத்தில் (படகில்) முகத்­து­வா­ரத்­தி­னூடே மட்­டக்­க­ளப்பு வாவியுள் பிர­வே­சித்தார். பொது நூல­கத்­துக்கு முன்னால் தற்­போது மட்­டக்­க­ளப்பு வாயில் அமைக்­கப்­பட்­டுள்ள இடத்தில் 12.08.1814 இல் தரை இறங்­கினார். இதனை நினைவு கூரும் வகையில் அதே இடத்தில் கையில் அரிக்­கன்­லாம்பு ஒன்றை கையில் ஏந்­தி­ய­வாறு அன்­னாரின் சிலை­யினை நிறுவி மெத­டிஸ்த மக்கள் தமது நன்­றியை வெளிப்­ப­டுத்­தினர். கல்­லூ­ரி­யுடன் இணைந்­த­தா­க­வுள்ள மெத­டிஸ்த தேவா­ல­யத்­துக்கு அருகே மண்­டபம் ஒன்றை நிறுவி அதற்கு வில்­லியம் ஓல்ட் நினைவு மண்­டபம் எனப் பெய­ரிட்­டுள்­ளனர்.
மட்­டக்­க­ளப்பில் அதா­வது புளி­யந்­தீவு எனப்­படும் மையப்­ப­கு­தியில் மிஷ­ன­ரி­மாரால் நிறு­வப்­பட்ட 4 பாட­சா­லைகள் உள்­ளன. மெத­டிஸ்த மத்­திய கல்­லூரி, வின்சன் மகளிர் உயர்­தர தேசியப் பாட­சாலை இவை இரண்டும் சகோ­தரப் பாட­சாலை என்று கூறப்­ப­டு­கின்­றன. மெத­டிஸ்த மிஷ­னரி மாரால் இவை நிறு­வப்­பட்­ட­மையே அதற்குக் காரணம். ஆண் பாட­சா­லை­யாக ஆரம்­பிக்­கப்­பட்ட இப்­பா­ட­சா­லையில் 1837 இல் பெண்­களும் பயின்­றுள்­ளனர்.
இதே­போன்று, கத்­தோ­லிக்க மிஷ­ன­ரி­மாரால் இன்று புனித மிக்கேல் கல்­லூரி (ஆண்) புனித சிசி­லியா மகளிர் தேசியப் பாட­சாலை என்ற பெய­ருடன் விளங்கும் இரு பாட­சா­லை­களும் தாபிக்­கப்­பட்­டன. இவை இரண்டும் மற்­றைய சகோ­தரப் பாட­சா­லை­களாகும்.
1815 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வில்­லியம் ஓல்ட் பாதி­ரியார் இவ்­வு­லக வாழ்வை நீத்தார். 9 மாதங்­களே அவர் இங்கு வாழ்ந்­தாலும் அன்­னாரின் புகழ் மீன் பாடும் தேனாடு உள்ள வரை நிலை பெற்­றி­ருக்கும். 1839 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்ரூவர்ட் மக்­கன்சி இலங்­கையின் தேசா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்றார். அவ­ரு­டைய பத­விக்­கா­லத்தில் மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்­த­போது இப்­பா­ட­சா­லைக்கு பணம் மற்றும் கட்­டடப் பொருட்­க­ளையும் வழங்­கினார். வண. ஹோல் என்­பவர் இவற்றைக் கொண்டு புளி­யந்­தீவு மெத­டிஸ்த தேவா­ல­யத்தின் இரு புறமும் விறாந்­தை­களை அமைத்து அதில் பாட­சா­லையை நடத்­தினார். இது மெத­டிஸ்த மத்­திய கல்­லூ­ரியின் வளர்ச்­சியில் ஒரு மைல் கல்­லாகும்.
இங்கு இடம் போதா­ம­லி­ருந்­ததால் ஓலைக்­கொட்டில் ஒன்று அமைக்­கப்­பட்­டது. 1859 இல் பூர்த்­தி­யான இக்­கட்­ட­டத்­துக்கு 350 பவுண் செல­வா­யிற்றாம். இவ்­வா­றாக பாட­சாலை வளர்ச்சி பெற்­றது. இப்­பா­ட­சா­லையின் முத­லா­வது பரி­ச­ளிப்பு விழா 1876 ஆம் ஆண்டில் நடந்­துள்­ளது. 1917 ஆம் ஆண்டில் இங்கு கார­ணிய இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இக்­கல்­லூ­ரிக்­கான இலச்­சினை இங்கு ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றிய சோம­நாதர் என்­ப­வரால் வடி­வ­மைக்­கப்­பட்­ட­தாகும். இலச்­சி­னையின் அடிப்­ப­கு­தியில் பரந்த சமுத்­தி­ரமும் அதன் பின்­ன­ணியில் கதி­ர­வனும் இடது மேற்­ப­கு­தியில் புத்­த­கமும் புத்­த­கத்தின் மேல் பறக்கும் புறாவும் வலது மேல் பகு­தியில் தென்னை மரமும் அமைந்­துள்­ளன.
கதி­ரவன் ஒளி­வீசி சமுத்­தி­ரத்தின் மேற்­ப­கு­தியை பிர­கா­சிப்­பது போல கல்­லூரி மாண­வர்கள் மூலம் ஒளி வீசி நாட்டு மக்­களின் அறி­யா­மையைப் போக்க வேண்டும். மத்­திய கல்­லூரி மாணவன் ஜீவ புத்­த­கத்­தினை விரும்ப வேண்டும். வாழ்வை வேதா­க­மத்­தின்­படி நெறிப்­ப­டுத்த வேண்டும். கற்­றலும் சிந்­த­னையும் பாவத்­துக்கும் தவ­று­க­ளுக்கும் வழி நடத்­தாமல் இருப்­பதை புறா அறி­வு­றுத்­து­கின்­றது. தென்னை கிழக்கு கரையின் சிறப்பை நினைவு படுத்­து­வ­துடன் நமது வளர்ச்சி உயர்ந்­த­தா­கவும் நேரா­ன­தா­கவும் இருக்க வேண்டும் என்­பதை தெளிவு படுத்­து­கின்­றது. தென்னை மரத்தின் ஒவ்­வொரு பாகமும் பயன் தரு­வது போல கல்­லூரி மாணவன் நேர்­மை­யா­ன­வ­னாக மாத்­தி­ர­மன்றி அவனின் சுற்றம் ஒவ்­வொன்றும் தன்னைச் சூழ வாழும் மனித சமு­தா­யத்­துக்கு சுய நலம் அற்ற சேவை­யினை ஈந்து பயன் தரு­வ­னவாய் இருக்க வேண்டும். அறி­யாமை என்னும் கடலின் மேலாக தென்னை, புறா, புத்­தகம், உதய சூரியன் இவற்­றினைப் போன்று நாம் வாழ்ந்து செயற்­பட்டால் தான் நாம் நற்­பி­ர­ஜை­க­ளாக வளர்ந்து பிர­கா­சிக்­கலாம். நாம் இவ்­வு­ல­கிற்கு கதிர் வீசும் ஒளி எல்லா ஒளி­க­ளுக்கும் மூல­மா­யி­ருக்கும் இறை­வனின் ஒளியில் இருந்து தெறிக்­கா­விட்டால் அதனால் பய­னில்லை. பரந்த உணர்­வுடன் நோக்கும் போது இவை­க­ளெல்லாம் ஒன்று சேர்ந்து எமது இலச்­சி­னையின் அடியில் பொறிக்­கப்­பட்­டி­ருக்கும் உமது ஒளியில் நாம் வெளிச்சம் காண்போம் என்னும் மகுட வாக்­கி­யத்தின் கருத்­தினைக் காட்­டு­கின்­றது. இவ்­வாறு அந்த இலச்­சி­னைக்கு பொருள் கூறப்­பட்­டுள்­ளது.
ஜெய­கே­சரி, இளைஞன், யுவன், பரணி விஞ்­ஞானி, செம்மை போன்ற மாத சஞ்­சி­கை­களை கையெ­ழுத்து அச்சு பிர­தி­க­ளாக மாண­வர்கள் அவ்­வப்­போது வெளி­யிட்­டுள்­ளனர். எனினும் 1946 இல் வெளி­யி­டப்­பட்ட சென்­றலைட் என்­பதே 1ஆவது சஞ்­சி­கை­யாகும். இக்­கல்­லூ­ரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழா ஏ.ஏ. அரு­ளன்­ன­ராசா அதி­பரின் காலத்தில் 1989 ஆம் ஆண்டு கொண்­டா­டப்­பட்­டது. மத்­திய தீபம் சிறப்பு மலரும் வெளி­யி­டப்­பட்­ட­துடன் 75 சதம் பெறு­ம­தி­யான நினைவு முத்­தி­ரையும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.
இக்­கல்­லூ­ரிக்கு விதை­யாகி உர­மா­னவர் வில்­லியம் ஓல்ட். கல்வி மற்றும் புறக்­கி­ருத்­திய நட­வ­டிக்­கை­களில் இக்­கல்­லூரி சாதனை புரிந்­துள்­ளது. 23 க்கு மேற்­பட்ட பழைய மாண­வர்கள் பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும் பாரா­ளு­மன்­றத்தை அலங்­க­ரித்­துள்­ளனர். அதி­பர்­க­ளாக ஏற்­க­னவே 36 பேர் பணி புரிந்­துள்­ளனர். இவர்­களில் 28 பேர் மேற்கு நாட்­டி­ன­ராவர். வண.ஜி.ஹொலே தொடக்கம் வண.ஜி.ஏ.ஸ்மித் வரைக்குமான 28 பேருள் 27 பேர் வணக்கத்துக்குரியோராவர்.
இரு நூற்றாண்டு கடந்த மே மாதம் 29 ஆம் திகதி வாகன ஊர்தி ஊர்வலத்துடன் ஆரம்பமானது. நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. நதளை 29 ஆம் திகதி இருநூறாவது விழா நடைபெறவுள்ளது. காலை புளியந்தீவு மெதடிஸ்த தேவா­லயத்தில் விசேட ஆராதனை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து வில்லியம் ஓல்ட் பாதிரியாரின் சிலை முன்பாக இருந்து கல்லூரி மண்டபம் வரை ஊர்வலமும் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். நினைவு முத்திரை ஒன்றை பின்னர் வெளியிடவும் அதன் வெளியீட்டு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. யூன் 29 ஓல்ட் காலியில் கால் பதித்த நன்னாள்.
READ MORE | comments

வியட்நாமில் போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு மரண தண்டனை

வியட்நாமில் வசித்து வரும் ஆஸ்திரேலியர் ஒருவர், அங்கிருந்து போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றத்திற்காக மரண தண்டனை பெற்றுள்ளார்.
பாம் டிரங் டங் என்ற 37 வயது ஆஸ்திரேலியர் கடந்த ஆண்டு மே மாதம் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாய்நாட்டிற்கு புறப்பட்டார். டான் சான் நாட் விமான நிலையத்தில் அவரது சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 4 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கையும் களவுமாக பிடிபட்ட பாம் டிரங் டங் மீது தெற்கு ஹோ சி மின்ஹ் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தருவதாக 2 நபர்கள் வாக்குறுதி அளித்ததால் ஹெராயினை கடத்த முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார். அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடுமையான போதைப்பொருள் தடுப்புச் சட்டங்கள் அமலில் உள்ள வியட்நாமில், 600 கிராமுக்கு அதிகமாக ஹெராயின் அல்லது 20 கிலோவுக்கு அதிகமான ஒபியம் கடத்தினால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அதிகபட்சமாக 30 கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் உள்ளனர்.
READ MORE | comments

தனுஷுடன் தகறாரா? சிவகார்திகேயன் பதில்

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய சிவகார்த்திகேயன் ‘3’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்தார். சிவகார்த்திகேயனை தன்னுடன் நடிக்க வைக்கும்படி தனுஷ் தான் சிபாரிசு செய்தார் என்று கூறப்பட்டது.
அதன் பிறகு தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படத்திலும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க வைக்கப்பட்டார். இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. வசூலையும் வாரி குவித்தது. இதையடுத்து மளமளவென பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து படங்கள் ஹிட்டானதால் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. தற்போது தனுஷ் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுப்பதாகவும், இதனால் இருவருக்கும் பனிப்போர் நடப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டன.
இது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது மறுத்தார்.
எனக்கும், தனுசுக்கும் எந்த தகராறும் இல்லை. நான் இந்த அளவு உயர்வதற்கு காரணமே தனுஷ் தான். என் வளர்ச்சியில் அவர் சந்தோஷப்படுகிறார். தினமும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்றார்.

READ MORE | comments

கணினியை செயலிக்க செய்யும் புதிய வைரஸ்; வாசகர்களே எச்சரிக்கை..!

வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வைரஸ் தான் நுழைந்த கம்ப்யூட்டர்களில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து, அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது. பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது.
இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து, அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது. அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் பைலை அமைக்கிறது.
தான் தங்கிய கம்ப்யூட்டரில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
இதன் மூலம், கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது.
மேலும் இது உங்கள் கணியில் உள்ள தகவல்கள் திருடிய பின் கணினியை செயல் படவிடாமல் முடக்கி விடுகின்றது. இவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது.
1. நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது.
2. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது.
3. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செய்திட வேண்டும்.
4. திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும், இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.
READ MORE | comments

மூன்று கால்களுடன் தவிக்கும் குழந்தை (வீடியோ இணைப்பு)

பனமாவில் மூன்று காலுடன் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக அதன் பெற்றோர் மிகவும் பாடுப்பட்டு வருகின்றனர்.
 பனமாவில் உள்ள சிறு கிராமத்தில் இலியானா மான்ராய் என்ற பெண்ணுக்கு, இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளது.
இதில் குழந்தை ஒன்றிற்கு அது ஒரு மாத குழந்தையாக இருக்கும் போது பிரித்து எடுக்க சிகிச்சை நடந்ததால் இறந்துள்ளது.
மேலும் பால் (2) என்ற பெயரிட்ட மற்றொரு குழந்தை தற்போது மூன்று கால்கள் மற்றும் மூன்று சிறுநீரகத்துடன் உள்ளது.
எனவே இதன் கால்களை வெட்டி எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்ரயினர்ஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தையின் பெற்றோர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு உள்ளசென்றுள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் நடுவில் உள்ள காலையும், செயல்படாமல் இருக்கும் மற்றொரு காலையும் முட்டி அளவுக்கு வெட்டி எடுத்து, பின்னர் செயற்கை கால் பொறுத்தவும் மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரயினர்ஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில், இக்குழந்தை செயற்கை காலுடன் நடக்க முடியும் என்றும் ஆனால் மற்ற குழந்தைகள் போல் ஓடி ஆட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
CHILDREN OF WAR FOUNDATION என்ற அறக்கட்டளை நிறுவனம் இந்த குழந்தைக்கு நிதி திரட்டி, சிகிச்சை பெற உதவியுள்ளது.
இது போன்ற சிகிச்சைகளால் உலகம் முழுவதும் வருடத்திற்கு 12 நபர்கள் மட்டுமே உயிர் பிழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

அளுத்கம, தர்காநகர், பேருவளையில் சேதமாக்கப்பட்ட வீடுகள், கடைகளைத் திருத்தும் பணியில் 700 இராணுவத்தினர்!

அளுத்கம. தர்காநகர் மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட வீடுகளும் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைக்கும் பணிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது. புனரமைப்பு பணிகளை இராணுவம் பொறுப்பேற்றுள்ளதுடன் இதற்கென இராணுவத்தின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற சுமார் 700 ற்கும் அதிகமான இராணுவத்தினர் புனரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
முழுமையாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட 94 வீடுகள், 137 வியாபார நிலையங்கள் அடையாளங் காணப்பட்டு புனரமைக்கும் பணிகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முழுமையாக பாதிக்கப்பட்ட 27 வீடுகள் மற்றும் 47 வியாபார நிலையங்களும், பகுதியளவில் பாதிக்கப்பட்ட 67 வீடுகள் மற்றும் 90 வியாபார நிலையங்களும் இதில் அடங்கியுள்ளன. இந்த புனரமைப்பு பணிகளுக்கு அரசாங்கம், திறைசேரி. மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் 200 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி துரிதமாக இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இராணுவம் திட்டமிட்டுள்ளது என்றார்.
இதேவேளை மேற்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல தலைமையில் நேற்று புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தீ வைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்று பார்வை யிட்டதுடன் முதற் கட்டமாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதேவேளை, சேதமாக்கப்பட்ட வீடுகளை ஒரு மாதகாலத்திற்குள் மீள புனரமைத்து அவர்களை அவ்வீடுகளில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
READ MORE | comments

ஆடு சினைப்படுத்தும் இடத்திற்கு மனைவி ஆட்டைக் கொண்டு போனதால் மனைவியைத் தாக்கிய கணவர்

தான் வளர்த்த ஆட்டினைச் சினைப் படுத்துவதற்காக ஆடு சினைப்படுத்தும் இடத்திற்கு ஆட்டைக் கொண்டு போன மனைவியை நையப்புடைத்துள்ளார் கணவர். ஊரெழுப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் காயமடைந்த மனைவி தற்போது கணவரைப் பிரிந்தூ தாயாருடன் இருப்பதாகத் தெரியவருகின்றது.
பல நாட்களாக தான் வளர்த்து வந்த ஆட்டைச் சினைப் படுத்தும் இடத்திற்கு கொண்டு செல்லச் சொல்லி கணவரைக் கேட்டதாகவும் உழவு இயந்திரம் வைத்து தொழில் செய்து வரும் கணவர் அதை அலட்சியம் செய்ததால் தானே ஆட்டைக் கொண்டு சென்று சினைப்படுத்தும் வீட்டில் விட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

ஆடு சினைப்படுத்தும் இடம் வீட்டில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது எனத் தெரிவித்த மனைவி தனது கணவர் ஆட்டை அங்கு கொண்டு சென்றதால் தரக்குறைவாகப் பேசி தன்னைத் தாக்கியதாகவும் அதற்கு கணவரின் நண்பரும் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

தனது நண்பர்களுடன் குடித்துக் கும்மாளம் இடும் கணவர் அவர்களின் கதைகளைக் கேட்டு தன்னைப் பல முறை இவ்வாறு தாக்கியதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணக்க சபையை நாடவுள்ளதாகவும் கணவரின் இவ்வாறான தொல்லைகளால் தான் விவாகரத்துக்கு முயலப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலய புனராவர்த்தான ஏககுண்ட பசஷ் மஹா கும்பாபிஷேகம் - 2014

மட்டு நகரினிலே புகழ் பதியாம் குருக்கள்மடத்தில் அமைந்துள்ள குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலயம் பல்வேறு வரலாறுகளோடு புகழ் பெற்று விளங்குவதாகும். இவ்வாலயத்துக்கு பல வரலாற்றுக் கதைகளும் உள்ளன. அந்த அளவுக்கு புகழ் பெற்ற பழைமையான ஆலயமாகவும் செல்லக் கதிர்காம சுவாமி ஆலயம் திகழ்கின்றது. இவ்வாலயத்தில் அமைந்துள்ள முருகன் வள்ளி தெய்வானையோடு அடியார்களுக்கு கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுக்கின்ற சிறப்புக்குரியவர். இவ்வாலயமானது பல்வேறு வகையிலும் புனராவர்த்தனம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு ஊர் மக்கள், பக்த அடியார்கள், ஆலய நிர்வாகம், மன்றங்கள் என பலதரப்பட்ட உதவிகள் மூலம் ஆலயம் பொலிவு பெறுகின்றது. இவ்வாலயத்தில் வருடார்ந்த மகோற்சவத் திருவிழாக்கள், பூசைகள் மிகச் சிறப்பாக இம்முறை இடம்பெற இருக்கின்றது. இதற்கு 9ம் நாள் திருவிழா தன்மன் செட்டிகுடி மக்களின்  தேர்த்திருவிழா இம்முறை மிகச் சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது. எமது பிரதேசத்தில் முதன் முறையாக புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேரில் முருகப் பெருமான்  உலா  வர இருக்கிறார்.  அந்த வகையில்  இவ்வாலயம் மேலும்  பொலிவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கிரியாகால ஆரம்பம் 04.07.2014 வெள்ளிக்கிழமையும் பக்த அடியார்கள் எண்ணெய் காப்பு வைக்கும் தினமாக 08.07.2014 செவ்வாய்கிழமையும் மஹா கும்பாபிஷேசம் 09.07.2014 அன்றும் இடம்பெற விருக்கின்றது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஆலய பரிபாலன வண்ணக்குமார் சபை ஸ்ரீலஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலயம், மட்/குருக்கள்மடம்.

அனைவரும் வருக!  இறையருள் பெறுக !READ MORE | comments

பாகிஸ்தான் நாட்டவருக்கான ஒன் அரைவல் வீசா முறையை ரத்துச் செய்தது அரசாங்கம்!

பாகிஸ்தான் நாட்டவருக்கு வழங்கப்பட்டு வரும் ஒன் அரைவல் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பாகிஸ்தானியர்களுக்கு இலங்கை ஒன் அரைவல் வீசா வழங்கி வந்தது. ஆனால், தற்போது ஒன் அரைவல் வீசா வழங்குவதில்லை என்பதனை இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகளவில் பாகிஸ்தானியர்கள் அரசியல் தஞ்சம் கோரி வருவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகவே எதிர்வரும் காலங்களில் வீசா விண்ணப்பம் பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு தாழங்குடாவில் அதிகாலையில் விபத்து! - ஆலயத்தில் இருந்து திரும்பிய ஒருவர் பலி, 21 பேர் காயம்.

மட்டக்களப்பு, தாழங்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாழங்குடாவில் உள்ள அரிசி ஆலைக்கு முன்பாக வான் ஒன்றும் கன்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. புன்னைச்சோலை ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்களே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.
READ MORE | comments

எட்டு வயது மகளை அடித்துக் கொலை செய்த தாய் - ஏழு வருடம் சிறை

அவுஸ்திரேலியாவில் எட்டு வயது குழந்தையை தாயொருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 வீடுகளைத் தூய்மைப்படுத்தும் Vacuum Cleaner கருவியின் உலோகப் பொல்லால் தாயொருவர் தாக்கி எட்டு வயது குழந்தை பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி விசாரித்த குயின்ஸ்லாந்து மாநில மரண விசாரணை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு வலைப்பின்னலை முற்றுமுழுதாக மறுசீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
ஃபெயித் என்ற பெயருடைய சிறுமி உலோகப் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அந்தச் சிறுமி தாம் தாக்கப்பட்ட நாள் தொடக்கம் தனியாக விடப்பட்டு கடும் வலியுடன் போராடி மரணத்தைத் தழுவியிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நிகழ்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக, பிள்ளையின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு ஆசிரியர் முறையிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, ஃபெயித் தாபரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
ஒன்பது நாட்களுக்குப் பின்னர். சிறுவர் பாதுகாப்பு நிறுவகம் பிள்ளையை வீடு திரும்ப அனுமதித்தது. ஃபெயித் பாடசாலை வராத நிலையில் பாடசாலை பணியாளர்கள் அவரைத் தேட முயற்சித்தார்கள். அப்போது, ஃபெயித் வெளிநாடு சென்றிருப்பதாக குடும்பத்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இது பற்றி துருவி ஆராய்ந்த சமயம், பிள்ளையின் தாயார் பல பொய்களைச் சொல்லி உண்மையை மறைக்கப் முயற்சித்துள்ளார். தற்போது குறித்த தாய்க்கு ஏழு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிள்ளையின் சிறிய தந்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் இருந்து ஃபெயித்தை வீட்டுக்கு அனுப்பியமை மிகவும் தவறான முடிவென மரண விசாரணை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு நிகழ்வு நேற்று மாலை 05.30 மணிக்கு ஆரம்பமானது . இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர். 22ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு ஆலய திருக்கதவு திறக்கப்பட்டது .25 ஆம் திகதி புதன்கிழமை கல்யாணக்கால் வெட்டப்பட்டு ,நேற்று மாலை இடம்பெற்ற ஆலய தீமிதிப்பு நிகழ்வுடன் ஆலய வருடாந்த நிகழ்வுகள் நிறைவுபெற்றது.
READ MORE | comments

சகல தமிழ் தேசிய உணர்வாளர்களை கொன்று குவித்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையில்.கருணா அம்மான்

தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை உண்மையாக நேசித்தது செயற்பட்ட பாதர் சந்திரா தொடக்கம் சகல தமிழ் தேசிய உணர்வாரள்களை கொன்று குவித்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையிலே உள்ளார். முதலில் இவர்களை விசாரணை செய்யவேண்டும்.
இந்திய படையினருடன் இணைந்து தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவர்கள் இன்று தங்களை தமிழ் தேசியவாதிகளாக அடையாளப்புடுத்த முற்படுகிறார்கள் இவர்களுக்கு மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை என மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தச்சுத் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
கிரான் பிரதேச செயலாளர் கே.தணபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்pன் இணைப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், திருமதி ருத்ரமலர் ஞானபாஸ்கரன், உதவித்த திட்டமிடல் பணிப்பாளர், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரதியமைச்சர் முரளிதரன் தொடர்ந்து உரையாற்றுகையில்
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நெருக்கடியான சூழலின் போது மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர் வணபிதா சந்திரா பெனார்ண்டோ இவர் இந்திய, இலங்கை படைகளை அரசுடன் இணைந்திருந்த ஒட்டுக் குழுக்கள் செய்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தவர் அவரை சுட்டுக் கொன்றவர்கள். இலங்கை தமிழ்ர் சங்க தலைவர் வணசிங்காவைச் சுட்டுக்கொன்றார்கள் இவர்கள் இன்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசுகிறார்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி தெரியுமா? தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு தமிழ் தேசியவாதிகள் என கூறுகிறார்கள்.
எமது மக்கள் வீட்டுக்கு வீடு போராளிகளை தந்து எல்லாவற்றையும் இழந்தவர்கள்; இன்று நகர்புறங்களில் சொகுசு வாழ்கை அனுபவிக்கும்; தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு போராட்டங்களில் ஏற்பட்ட இழப்புக்களின் வலி தெரியாது. எமது மக்களைவிட தமிழ் தேசிய உணர்வு மிக்கவர்கள் யாராவது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பார்களானால் அவர்களுக்கு மரியாதை வழங்கலாம், தமது குடும்ப உறவினர்களை தமிழ் தேசியத்துக்காக தியாகம் செய்தயாராவது இருந்தால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்கலாம் பத்திரிகைகளில் அறிக்கையிட்டு தன்னை தமிழன் என இனங்காட்டுபவர்கள் உண்மையான தமிழனா?  யுத்தத்தினால் எனது சொந்த அண்ணணை இழந்தவன் என்ற உரிமையில் என்னால் பேச முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைபிலுள்ள வடபகுதி அரசியல்வாதிகள் என்னை துரோகி என கூறுகிறார்கள் அதனால் நான் சந்தோசமடைகிறேன் அவர்கள் வழங்கிய துரோகி பட்டம் எனக்கு கலாநதி பட்டம் வழங்குவது போன்றது. நான் சரியான தருணத்தில் எடுத்த முடிவினால் எமது மக்கள் தற்போது சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறனர். நான் பிரிந்து வந்து எமது பிரதேச 6 ஆயிரம் பிள்ளைகளை காப்பாற்றியது தவறா?
என்னைத் துரோகி என்று கூறும் வட பகுதியினருக்கு சண்டையிடுவதற்கு கருணா அம்மானைத் தவிர ஒரு வீரன் கிடைக்கவிலையா?? நான் பிரிந்து சென்றால் என்னை விடடு எங்களால் போரிட முடியாதா?
போராட்ட காலங்களில் இந்திய படையுடன் சண்டையிட்டு நாங்கள் காடு மேடு என உணவின்றி திரிந்த போது எமது மக்களை காட்டிக் கொடுதவர்கள்தான் தற்போது தமிழ் தேசிய கூட்டமைபிலுள்ளார்கள். இவர்கள் செய்தது துரோகம் இல்லையா?
இந்திய படை எமது பிரதேசங்களில் இருந்த போது எத்தனை தமிழர்களை இழந்திருந்தோம் இந்திய படையுடன் சேர்ந்து பல கொலைகளைச் செயதவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையில் உள்ளார்கள். தமிழ் தேசியம் பேசினால் யார் என்று பார்க்காமல் எமது மக்கள் வாக்களித்துவிடுவது அவர்கள் எமது சமூகத்திற்கு செய்தார்கள் என சிந்திப்பதில்லை.
தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை உண்மையாக நேசித்தது செயற்பட்ட பாதர் சந்திரா தொடக்கம் சகல தமிழ் தேசிய உணர்வாளர்களை கொன்று குவித்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையிலே உள்ளார். முதலில் இவர்களை விசாரணை செய்யவேண்டும்.
எமது மக்கள் 30 வருட காலமாக பல இழப்புக்களைச் சந்த்தவர்கள். எமது சமூகத்தினைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு அனைவருக்குமுள்ளது. அந்த பொறுப்புக்களிலிருந்து நாம் ஒரு போதும் விலகிச் செல்ல முடியாது. எமது மக்கiளின் தேவைகளினை நிறைவேற்ற வேண்டுமானால் கட்டாயம் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட வேண்டும்.
நாஙகள் எதிர்கட்சியிலிருந்து தொடரந்தும் எதிர்பு அரசியல் நடார்த்துவதைக் கைவிட வேண்டும். எமது சமூகத்தை இன்னும் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதால் எனது வருங்கால நாங்கள் இன்னும் பின்நோக்கியே நகர்த்தப்படுவோம். எமது மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
அண்மைக்காலங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன அரசாங்கத்துடன் அருக்கும் அமைச்சர்கள் விலக வேண்டும் என பலரும் குரல்கொடுத்தனர் னோல் அமைச்சர்கள் அரசாங்கத்தைவிட்டு விலகிச் செல்லவில்லை. அவர்கள் தமது இனத்துக்கு ஏற்பட்ட அநீதிகளை அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு கடுமையாக குரல்கொடுக்கிறார்கள்.
நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கும் போது எமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம் அதேபோன்று சமூகத்திற்கும் பாதகமான விழைவுகள் ஏறாபடும் போது அரசாங்கத்திற்குள்ளிருந்து குரல்கொடுக் வேண்டும்”என்றார்.
READ MORE | comments

பாடசாலை கற்றுத்தராத, பாடசாலைக் கல்விக்குத் துணையான விடயங்களை கூத்து எமக்கு கற்றுத் தருகின்றது

முனைக்காடு நாகசக்தி கலைமன்றத்தினரால் இந்த வருடம் “அனுருத்திரன்” தென்மோடிக்கூத்து ஆடுவதற்கு உத்தேசம் செய்யப்பட்டது. கூத்தில் பெண்பாத்திரம் ஏற்பதற்கு ஓர் சிறுவனை அண்ணாவியார் நியமித்தார்.  திடீரென சிறுவன் கூத்தாட மறுத்துவிட்டான். ஏன் எனக்கேட்ட போது தன் தந்தைக்கு விருப்பமில்லை எனவும் இனி மேல் கூத்தாடக்கூடாது என உறுக்கமாக உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினான். உண்மையிலே அலங்காரரூபன் கூத்தில் மிகச் சிறப்பாக ஆடியவர்களுள் இச் சிறுவனையும் கூறலாம். அனுருத்திரன் கூத்தில் ஆடுவதற்கும் பூரண ஆசை இருந்தபோதிலும் தந்தையின் விருப்பத்துக்குமாறாக செயற்படக்கூடாது என்கின்ற ஒரே காரணத்;துக்காக தனது ஆசைகளை கட்டுப்படுத்தியவனாக காணப்பட்டான்.

“சிறுவனின் தந்தையிடம் பேசிப்பார்ப்போம்” என அண்ணாவியார் உட்பட பத்துபேர் சென்றோம். வீட்டில் தந்தை இல்லை தாயும், மகனுமே இருந்தார்கள். “மகனை கூத்தாட அனுப்புமாறு மிகப்பணிவுடன் பேசினோம்”. “இது நான் எடுக்கும் முடிவல்ல சிறுவனின் தந்தை வெளியே சென்றிருக்கின்றார் அவரிடம் கேட்டுக் கூட்டிச் செல்லுமாறு கூறினாள்” தந்தையின் வருகையை எதிர்பார்த்து சுமார் அரை மணிநேரம் வீட்டு முற்றத்தில் காத்திருந்தோம். பின் சிறுவனின் தந்தை வந்தார் சிறுவனின் தந்தையிடம் மிகப் பணிவுடன் அண்ணாவியார் பேச ஆரம்பித்தார். “உங்கடபொடியன கூத்தாட அனுப்புங்க நல்லா ஆடுறபொடியன்” என சாதுவாக தயக்கத்துடன் அண்ணாவியார் கதையை நகர்த்தினார்.
“கூத்தாடுறத்தால என்ன தம்பி இலாபம்? என்டபெடியன்ட படிப்பையும் நான் பாக்கனும்” எங்களைப் பார்த்து கேட்டார். அந்த ஒரு கேள்வி அங்கிருந்த அனைவரையும் திக்குமுக்காடவைத்தது. அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாக எண்ணி அனைவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தனர். “கூத்தாடுறதால உங்கட மகன்டபடிப்புக் கெட்டுப் போறது மில்ல படிக்காதவன்தான் கூத்தாடுறெண்டுமில்ல. இந்தா இங்க  நிக்கவங்கள் எல்லாரும் படிச்சவங்கதான். இந்தா இவங்க மூன்றுபேரும் பட்டதாரிகள், இந்தா இவரு தமிழ் படிப்பிக்கிற ஆசிரியர், இவர் மட்டக்களப்பு பிரதேச செயலகத்துல வேலசெய்றாரு, இவங்க வெளிவாரிப் பட்டப்படிப்பு படிச்சிக் கொண்டிரிக்காங்க இவங்களும் இந்தக் கூத்துல ஆடுறாங்கதான்” எனஅறிமுகம் செய்துவைத்தார்.

இங்க பாருங்க எண்ட மகன்ர எதிர்காலம் தான் எனக்கு முக்கியம் ,அவன்ட படிப்புத்தான் எனக்கு முக்கியம் படிக்கிறவயசில கூத்து அது இதெண்டு என்னால அனுப்ப முடியாது. படிப்பு முடிஞ்சபிறகு அவனவச்சி எத்தின கூத்து வேணுமானாலும் பழக்கிகொள்ளுங்க” என்றார். .அங்கு சென்ற அனைவரும் மாறிமாறி பேசிப் பார்த்தோம் அவர் வசைந்து கொடுப்பதாக இல்லை இனி நிற்பதில் பிரயோசனமில்லை என புரிந்தது அனைவரும் திரும்பிவிட்டோம்.
அவர் கூறிய விடயங்களை வைத்துப் பார்த்தால் பாடசாலை படிப்புக்கு கூத்து முட்டுக்கட்டையாக உள்ளது என்பதாகும். படிப்பிற்கு கூத்து இடைஞ்சலாக இருந்திருந்தால் பாடசாலை மட்ட தமிழ்தின போட்டிகளில் கூத்து ஆடக்கூடாதே! ஏன் ஆடுகின்றார்கள்?கூத்து முற்றுமுழுதாக மாணவர்களின் கல்வி அறிவினை மழுங்கடிக்கின்றது என்றால் மட்டக்களப்பு சமூகமே கல்வி அறிவில் பின்தங்கிய இருண்ட காலமாக இருந்திருக்க வேண்டும். மட்டக்களப்பில் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கூத்துக்கள் ஆடப்பட்டுக் கொண்டே வருகின்றன. அதேவேளை கல்வி நிலையும் உயர்ந்து கொண்டே செல்கின்றது. இவ்வாறிருக்கும் அவர் ஏன் அவ்வாறு கூறியிருக்க வேண்டும்?.
கூத்து என்றாலே அதில் பல மனிதர்களின் கூட்டுச்செயற்பாடு காணப்படும் . பல பார்வையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் காலங்காலமாக பார்த்துவருகின்றனர். அப்படியென்றால் இவர்கள் என்ன முட்டாட்களா?. ஏதோ ஓர் விடயத்தை கூத்து எமக்கு அளிப்பதால் தானே அதனை அன்று தொடக்கம் இன்றுவரை பார்க்கின்றோம், இரசிக்கின்றோம். கூத்து எமக்கு எதுவும் செய்யவில்லை என்றால் ஏன் அதனைப் பேணிக்காக்க நினைக்கின்றோம்? அப்படியானால் கூத்து ஏதோ ஒன்றினை எமக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றது என்றுதானே அர்த்தம். பள்ளிக் கூடப் படிப்பு என்பது வெறும் புத்தகப்படிப்பு ஆனால் பல அனுபவ படிப்புக்களை கூத்து எமக்கு சொல்லி தருகின்றது. இதனை எவரும் மறுத்து விடமுடியாது.
இன்று
management (முகாமைத்துவ கற்கை) என்கின்ற பாடம்  பாடசாலைகளில் அறிமுகம் செய்து அதிகளவான மாணவர்கள் விரும்பி கற்கின்ற கற்கை நெறியாக இன்று காணப்படுகின்றது. ஆனால் இவ் முகாமைத்துவ கற்கையினை கூத்து எப்போ தொடங்கியதோ அன்றிலிருந்து கூத்து கற்பிக்கின்றது அது  எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? களரி முகாமையாளர், கூத்து முகாமையாளர், முதலீட்டு முகாமையாளர்கள் எனபலர் அன்றிருந்து இன்று வரை கூத்தினை முகாமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அன்று எம் முன்னோர்கள் எமக்கு முகாமைத்துவ கல்வியினை கூத்தினூடாக கற்றுத் தந்திருக்கின்றனர். இன்று பாடசலைகளில் மாணவர் தலைவர் என்கின்ற பொறுப்பினை முற்று முழுதாக நிறை வேற்ற முடியாமல் தலையை பிச்சிக் கொண்டு திரிகின்ற மாணவர்களே அதிகம் உள்ளனர். காரணம் போதியளவு முகாமைத்துவம், தலைமைத்துவம்;;;;, என்பன இல்லாமையேயாகும் ஆனால் கூத்து பல்வேறுபட்ட எண்ணங்கள், சிந்தனையுடையவர்களை ஓர் வளிப்பாதையில் ஒருங்கிணைத்து அவர்களை செயற்படவைக்கின்றது.

கூத்து பலதரப்பட்ட மனிதர்களை இணைத்தெடுக்கின்ற ஓர் கலை வடிவம். எல்லா மனிதர்களும் ஒரே சிந்தனை கொண்டவர்களாக இருப்பதில்லை. ஓவ்வொரு மனிதரும் பல்வேறு எண்ணங்களையும், சிந்தனைகளையும், கொண்டவர்களாக காணப்படுவர். அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றபோது பொறுமை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, ஒன்றிணைவு, பிரச்சினைகளை சமாளித்தல், விட்டுக்கொடுப்பு, கீழ் பணிவு, என சமூகம் சார்ந்த அனுபவ படிப்புக்களை கூத்து எமக்கு கற்றுத்தருகின்றது. ஆனால் இவற்றினை பாடசாலை படிப்பு சொல்லித்தரமாட்டாது. பாடசாலை படிப்பினை முடித்தபின் நாம் அடுத்த கட்டமாக சமூகத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். அத்தருணத்தில்தான் சமூகம் சார்ந்த படிப்பினைகளின் முக்கியத்துவம் புரியும். எவன் ஒருவன் பூரணமாக ஓர் கூத்தாடுகின்றானோ அவன் எவ்விடத்திலும், எந்த சமூகத்திலும் வாழ்ந்து வெற்றி காண்பான் என்பதில் அசையா நம்பிக்கை எனக்குண்டு.
பாடசாலை மாணவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் மனனம் செய்கின்ற மனப்பக்குவமாகும். பாசாலைக்கல்வியை பொறுத்தவரை மனனம் செய்கின்ற ஆளுமை மிக அவசியமான ஒன்றாகும். பேச்சிப்போட்டிகள், பாவோதல் போட்டிகள், கவிதைப் போட்டிகள், என்பவற்றில் பேசிக்கொண்டிருக்கும் போதே அரைவாசியில் மறந்துவிட்டு வெட்கித் தலை குனிகின்ற மாணவர்கள் எத்தனையோ பேரை நாம் கண்டிருக்கின்றோம். அதேவேளை நாமும் அந்த வேதனையை அனுபவித்திருக்கின்றோம். ஆனால் இலகுவாக மனனம் செய்து கொள்வதற்கான அடிப்படை மூலப் பயிற்சியினை கூத்து எமக்கு கற்றுக் கொடுக்கின்றது என்றால் எவரும் நம்புவீரா? ஆம் சாதாரணமாக கூத்தில் ஓர் பாத்திரத்திற்கு பாடல், விருத்தம், வசனம் அடங்கலாக குறைந்தது ஐம்பதுக்கு மேல் காணப்படும். அவற்றினை மிக இலகுவாக குறுகிய காலப்பகுதியினுள் ஏட்டண்ணாவியாரின் எளிமையான எடுத்துரைப்புடன் அனைத்து பாடல்களையும் எவ்வித பயம் , பதட்டமின்றி மனனம் செய்ய வைக்கின்றது. பிரதான பாத்திரங்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் காணப்படும். இன்னும் சொல்லப்போனால் எழுதவாசிக்கத் தெரியாதவர்கள் கூட நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களை எவ்வித தங்குதடையுமின்றி சரமாரியாக மனனம் செய்து பாடுகின்ற அதிசயங்களையும் கூத்தில் காணலாம். பாடசாலைகளில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களே முழுமையாக மனனம் செய்ய முடியாமல் தவிக்கின்ற போது. எழுதவாசிக்கத் தெரியாதவர்களையும் இலகுவாகவும், முழுமையாகவும் மனனம் செய்ய வைக்கின்ற வல்லமை கூத்துக்கு மட்டும்தான் உண்டு.
பாடசாலை கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு மிக முக்கியமான அம்சம் யாதெனில் பாடங்களில், கற்கைகளில், விரிவுரைகளில் சிரம் செலுத்துதல் அவசியமாகும். அதாவது விரிவுரைகளை உற்றுக்கவனித்தல் மிக முக்கிய அம்சமாகும். விரிவுரைகளை உற்றுக்கவனித்தல் என்பது மிகக் கடினமான ஓர் விடயமாகும். மனித மனம் ஓர் குரங்கு மனம் ஆங்காங்கே அலைபாய்ந்து கொண்டிருக்கும். இவற்றினைத்தாண்டி விரிவுரைகளை உற்றுக்கவனிப்பதென்பது மிகமிகக் கடினம். ஆனால் அதற்கான அடிப்படை பயிற்சிகளை கூத்து எமக்கு கற்றுக் கொடுக்கின்றது. கூத்தின் போதான அடிப்படை அசைவுகளை அவதானித்தல், பாடல், இராகங்களை கூர்ந்து கவனித்தல், ஏட்டண்ணாவியார் சொல்லித்தருகின்ற பாடலை கூர்ந்து உள்வாங்குதல், அடுத்து வரவிருக்கும் பாடலை தயார்படுத்துதல் என உற்றுக்கவனித்தலுக்கும், அவதானத்துக்குமான அடிப்படை பயிற்சிகளை கூத்து எமக்கு அன்றிருந்து இன்று வரைக்கும் இயல்பாகவே கற்பித்து வருகின்றது ஆனால் அதை நாம் புரிந்து கொள்ளாமல் கூத்தாடுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை என தவறான மனப்பதிவினைக் கொண்டிருக்கின்றோம்.

நான்கு பேருக்கு மத்தியில் பேசுவதற்கும், மேடைப்பேச்சுகள் பேசுவதற்கும் கூச்சம், பயம், பதட்டம், வெட்கம் என எதற்கும் முன் வராமல் தயங்குகின்ற மாணவர்கள் அதிகமானோரை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் எவ்வித பயம், பதட்டம், கூச்சம், வெட்கம் இன்றி சுதந்திரமாக செயற்படவைக்கின்ற ஒரே அரங்கு கூத்தாகும். கூத்து சுதந்திரமான பார்வையாளர்களையும், சுதந்திரமான நடிகர்களையும் கொண்ட அரங்காகும். நடிகர்களை இயல்பாக செயற்பட வைப்பதனால் எம்மில் உள்ள பலவீனமான வி;;டயங்கள் பலமடைகின்றன.
பாடசாலை மாணவர்களிடையே இடம்பெறுகின்ற சிறுசிறு பிரச்சினைகள் பாடசாலை வாழ்க்கை முடிந்த பின்னும் தீராப்பிரச்சினைகளாக வளர்ந்து சென்று கொண்டிருப்பதனை நாம் கண்டிருக்கின்றோம். அதேவேளை நாமும் அதனை அனுபவித்திருப்போம். ஆனால் இவ்வாறான சிறு சிறு பிரச்சினைகளை, ஏன் பரம்பரை பிரச்சினைகளையும் கூட கூத்து சாதாரணமாக தீர்த்து வைத்த சந்தர்ப்பங்களும் உள்ளன. உதாரணமாக இருவருக்கிடையில் பேச்சி இல்லை எனில் இருவரும் கூத்தில் இணைந்து செயற்படுகின்ற போது படிப்படியாக தம்மையறியாது இயல்பாகவே பேசிவிடுவர். கிராமத்துக்கு கிராமம் இடம் பெற்ற தீராப் பகைகளையும் கூத்து மாற்றியமைத்த சரித்திரங்களும் உள்ளன. ஆனால் இவை திட்டம் போட்டோ, கட்டாயத்தின் பெயரிலோ இடம்பெறுவதில்லை. இயல்பாகவும், எதார்த்தமாகவும் இடம்பெறுகின்ற சம்பவங்களே இவை.
ஊனக் கண் கொண்டு கூத்தினை பார்த்தால் அது எமது வாழ்க்கைக்கும், கல்விக்கும் முரணானதாகத்தான் தெரியும் கூத்தர்களுடனும் கூத்து சார்ந்த சமூகத்துடனும் இணைந்து களத்தில் இறங்கி செயற்பட்டால்தான் அதன் பூரண நன்மைகள் எமக்கு புரியும். கூத்திற்குள் இவ்வளவு படிப்பினைகள் உள்ளனவா? என்று. கூத்து எமக்கு ஒன்றும் செய்யவில்லை! ஒன்றும் செய்யவில்லை! என்றால் அதனைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஏன் ஒன்று கூடவேண்டும்?.

அப்படியானால் கூத்து எமது வாழ்க்கைக்கு ஏதோ ஓர் விடயத்தினை கற்றுக்கொடுக்கின்றது என்றுதானே அர்த்தம். என்னைப் பொறுத்தவரை கூத்தும் ஓர் பள்ளிக்கூடம் பாடசாலை கற்றுத்தராத, பாடசலைக் கல்விக்குத் துணையான விடயங்களை கூத்து எமக்கு கற்றுத் தருகின்றது. இவை எல்லாம் தூரத்தில் நின்று பார்த்தால் எமக்குத் தெரியாது. அனுபவித்தால்தான் அவை எமக்குப் புரியும். கூத்து சார்ந்து தவறான மனப்பதிவுகளைக் கொண்டிருக்கின்றவர்களுக்கு ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் “ நீங்கள் கூத்துப் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை கூத்தின் வளர்ச்சிக்கும், கலைஞர்களின் ஆசைக்கும் இடைஞ்சலாக இருந்து விடாதீர்கள்!!!!!!!”
 
ஆக்கம்:-
          வன்னியசிங்கம் – வினோதன்.
நுண்கலைமானி 
முனைக்காடு
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |