Advertisement

Responsive Advertisement

நவநீதம்பிள்ளைக்கு புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது ஐ.நா மனித உரிமைகள் பேரவை!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நேற்றுமுன்தினம் புகழாரம் சூட்டி பிரிவுபசாரம் வழங்கியது. கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பணியாற்றிய, நவநீதம்பிள்ளையின் பணிக்காலம் இன்னும் எட்டு வாரங்களில் முடிவடையவுள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில் அவருக்குப் பிரிவுபசாரம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் மைக்கேல் முல்லர் வாசித்தார்.
நவநீதம்பிள்ளை ஒரு அசாதாரணமான மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றியுள்ளதாகவும், நம்பகத்துடனும், உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் அவர் பாடுபட்டவர் என்றும் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.அதையடுத்து நவநீதம்பிள்ளையின் பணியைப் பாராட்டியும், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்தியும், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
இறுதியில், தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட நவநீதம்பிள்ளை, தன் மீது அன்பு பாராட்டியதற்கும் நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments