Advertisement

Responsive Advertisement

அகதிகளை பொறுப்பேற்கத் தயாராகும்படி கிறிஸ்மஸ் தீவு அதிகாரிகளுக்கு உத்தரவு!

அகதிகள் வந்தால், அவர்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு கிறிஸ்மஸ் தீவு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவுஸ்ருலியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலர்னா மெக்டியர்னான் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அகதிகள் படகு ஒன்றில் இருந்தவர்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் தமது படகில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள். இந்தப் படகு தென்னிந்தியாவில் இருந்து வந்ததெனவும், அதில் 37 சிறுவர்கள் அடங்கலாக 152 பேர் இருப்பதாகவும் தெரிவதாக ஏபிசி செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இரு படகுகளில் இருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை சனிக்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பதாக மெக் டியர்னன் தெரிவித்தார். எந்தவிதமான படகுகளும் வந்ததாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று குடிவரவு அமைச்சர் கூறி இருந்த போதும், நேற்று இரண்டு படகுகளை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் உடனடியாக நவ்ரு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments