Home » » சகல தமிழ் தேசிய உணர்வாளர்களை கொன்று குவித்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையில்.கருணா அம்மான்

சகல தமிழ் தேசிய உணர்வாளர்களை கொன்று குவித்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையில்.கருணா அம்மான்

தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை உண்மையாக நேசித்தது செயற்பட்ட பாதர் சந்திரா தொடக்கம் சகல தமிழ் தேசிய உணர்வாரள்களை கொன்று குவித்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையிலே உள்ளார். முதலில் இவர்களை விசாரணை செய்யவேண்டும்.
இந்திய படையினருடன் இணைந்து தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவர்கள் இன்று தங்களை தமிழ் தேசியவாதிகளாக அடையாளப்புடுத்த முற்படுகிறார்கள் இவர்களுக்கு மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை என மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தச்சுத் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
கிரான் பிரதேச செயலாளர் கே.தணபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்pன் இணைப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், திருமதி ருத்ரமலர் ஞானபாஸ்கரன், உதவித்த திட்டமிடல் பணிப்பாளர், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பிரதியமைச்சர் முரளிதரன் தொடர்ந்து உரையாற்றுகையில்
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நெருக்கடியான சூழலின் போது மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர் வணபிதா சந்திரா பெனார்ண்டோ இவர் இந்திய, இலங்கை படைகளை அரசுடன் இணைந்திருந்த ஒட்டுக் குழுக்கள் செய்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்தவர் அவரை சுட்டுக் கொன்றவர்கள். இலங்கை தமிழ்ர் சங்க தலைவர் வணசிங்காவைச் சுட்டுக்கொன்றார்கள் இவர்கள் இன்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசுகிறார்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி தெரியுமா? தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு தமிழ் தேசியவாதிகள் என கூறுகிறார்கள்.
எமது மக்கள் வீட்டுக்கு வீடு போராளிகளை தந்து எல்லாவற்றையும் இழந்தவர்கள்; இன்று நகர்புறங்களில் சொகுசு வாழ்கை அனுபவிக்கும்; தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு போராட்டங்களில் ஏற்பட்ட இழப்புக்களின் வலி தெரியாது. எமது மக்களைவிட தமிழ் தேசிய உணர்வு மிக்கவர்கள் யாராவது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பார்களானால் அவர்களுக்கு மரியாதை வழங்கலாம், தமது குடும்ப உறவினர்களை தமிழ் தேசியத்துக்காக தியாகம் செய்தயாராவது இருந்தால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்கலாம் பத்திரிகைகளில் அறிக்கையிட்டு தன்னை தமிழன் என இனங்காட்டுபவர்கள் உண்மையான தமிழனா?  யுத்தத்தினால் எனது சொந்த அண்ணணை இழந்தவன் என்ற உரிமையில் என்னால் பேச முடியும்.
தமிழ் தேசிய கூட்டமைபிலுள்ள வடபகுதி அரசியல்வாதிகள் என்னை துரோகி என கூறுகிறார்கள் அதனால் நான் சந்தோசமடைகிறேன் அவர்கள் வழங்கிய துரோகி பட்டம் எனக்கு கலாநதி பட்டம் வழங்குவது போன்றது. நான் சரியான தருணத்தில் எடுத்த முடிவினால் எமது மக்கள் தற்போது சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறனர். நான் பிரிந்து வந்து எமது பிரதேச 6 ஆயிரம் பிள்ளைகளை காப்பாற்றியது தவறா?
என்னைத் துரோகி என்று கூறும் வட பகுதியினருக்கு சண்டையிடுவதற்கு கருணா அம்மானைத் தவிர ஒரு வீரன் கிடைக்கவிலையா?? நான் பிரிந்து சென்றால் என்னை விடடு எங்களால் போரிட முடியாதா?
போராட்ட காலங்களில் இந்திய படையுடன் சண்டையிட்டு நாங்கள் காடு மேடு என உணவின்றி திரிந்த போது எமது மக்களை காட்டிக் கொடுதவர்கள்தான் தற்போது தமிழ் தேசிய கூட்டமைபிலுள்ளார்கள். இவர்கள் செய்தது துரோகம் இல்லையா?
இந்திய படை எமது பிரதேசங்களில் இருந்த போது எத்தனை தமிழர்களை இழந்திருந்தோம் இந்திய படையுடன் சேர்ந்து பல கொலைகளைச் செயதவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையில் உள்ளார்கள். தமிழ் தேசியம் பேசினால் யார் என்று பார்க்காமல் எமது மக்கள் வாக்களித்துவிடுவது அவர்கள் எமது சமூகத்திற்கு செய்தார்கள் என சிந்திப்பதில்லை.
தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை உண்மையாக நேசித்தது செயற்பட்ட பாதர் சந்திரா தொடக்கம் சகல தமிழ் தேசிய உணர்வாளர்களை கொன்று குவித்தவர்கள் இன்று கிழக்கு மாகாண சபையிலே உள்ளார். முதலில் இவர்களை விசாரணை செய்யவேண்டும்.
எமது மக்கள் 30 வருட காலமாக பல இழப்புக்களைச் சந்த்தவர்கள். எமது சமூகத்தினைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பு அனைவருக்குமுள்ளது. அந்த பொறுப்புக்களிலிருந்து நாம் ஒரு போதும் விலகிச் செல்ல முடியாது. எமது மக்கiளின் தேவைகளினை நிறைவேற்ற வேண்டுமானால் கட்டாயம் அரசாங்கத்துடன் இணைந்தே செயற்பட வேண்டும்.
நாஙகள் எதிர்கட்சியிலிருந்து தொடரந்தும் எதிர்பு அரசியல் நடார்த்துவதைக் கைவிட வேண்டும். எமது சமூகத்தை இன்னும் கீழ் நிலைக்கு கொண்டு செல்வதால் எனது வருங்கால நாங்கள் இன்னும் பின்நோக்கியே நகர்த்தப்படுவோம். எமது மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
அண்மைக்காலங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டன அரசாங்கத்துடன் அருக்கும் அமைச்சர்கள் விலக வேண்டும் என பலரும் குரல்கொடுத்தனர் னோல் அமைச்சர்கள் அரசாங்கத்தைவிட்டு விலகிச் செல்லவில்லை. அவர்கள் தமது இனத்துக்கு ஏற்பட்ட அநீதிகளை அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு கடுமையாக குரல்கொடுக்கிறார்கள்.
நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கும் போது எமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளலாம் அதேபோன்று சமூகத்திற்கும் பாதகமான விழைவுகள் ஏறாபடும் போது அரசாங்கத்திற்குள்ளிருந்து குரல்கொடுக் வேண்டும்”என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |