Advertisement

Responsive Advertisement

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என விரும்பிய சோனியா!

இலங்கையிலிருந்து வெளிவரும் 'திவயின' என்ற பத்திரிக்கை பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப்புலிகளை பழிவாங்குவதில் சோனியா காந்தி தீவிரம் காட்டினார் என்று கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியின் விவரம் வருமாறு.. "முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப்புலிகளை பழி தீர்த்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி விரும்பினார். எனவே, அவர்களை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார்.
ஈழத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என அவர் விரும்பினார். குறிப்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மீது சோனியா கடும் விரோதம் காட்டினார். போரை முடிவுக்கு கொண்டு வர சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்த போதிலும் இந்தியா அதற்கு இடமளிக்க வில்லை" என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய பத்திரிகை நிருபர் சாம் ராஜப்பா என்பவர் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments