Advertisement

Responsive Advertisement

மொபைல் போனில் பேசிக்கொண்டே சார்ஜ் ஏற்றிய பிலிப்பைன்ஸ் பெண் பரிதாப பலி.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண், தனது மொபைல் போனில் பேசிக்கொண்டே சார்ஜரை எடுத்து பிளக்கில் செருகியபோது மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயது பெண் Sheryl Aldeguer என்பவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த North Gosford என்ற நகரில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் துபாயில் உள்ள தனது தோழி ஒருவரிடம் இருந்து அவருக்கு போன் வந்தது. அவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போது தனது மொபைல் போனில் சார்ஜ் குறைவாக இருப்பதை அறிந்து மொபைல் போனில் பேசிக்கொண்டே சார்ஜரை எடுத்து மின்சார பிளக்கில் செருகினார். தரம் குறைந்த சார்ஜரால் மின்சாரம் கசிந்து அவருடைய மொபைல்போனில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கியெறியப்பட்டார். 

இதை அருகில் இருந்து பார்த்த அவருடைய கணவர் Luigi Aldeguer அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக கூறினர். அந்த சார்ஜரை அவர் கடந்த வாரம்தாம் $5 கொடுத்து புதிதாக வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே சார்ஜ் செய்யக்கூடாது என பலமுறை செல்போன் நிறுவனங்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments