Home » » மட்டக்களப்பில் கல்விக்கு வித்திட்ட மெதடிஸ்த மிஷன் பாதிரியார் இருநூறாவது ஆண்டு விழா

மட்டக்களப்பில் கல்விக்கு வித்திட்ட மெதடிஸ்த மிஷன் பாதிரியார் இருநூறாவது ஆண்டு விழா

இலங்­கையில் சுவி­சேசம் பரப்­பு­வ­தற்­காக வந்த மேற்­கு­லக அருட்­ப­ணி­யா­ளர்கள் கல்­வி­யையும் காத்­தி­ர­மான முறையில் பரப்­பினர். அன்ன சத்­திரம் யாவினும் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்­த­றி­வித்தல் என்று பாரதி பின்­னாளில் பாடி­யதை அவர்கள் அன்றே உணர்ந்து கொண்­டனர். எனவே, மிஷ­ன­ரிமார் கல்விச் சாலை­களை நிறு­வினர்.
இலங்­கையின் தேசா­தி­ப­தி­யாக இருந்த மேஜர் ஜெனரல் சேர் றொபேட் பிரௌன்றிக் (1812–—-1820) கிழக்குப் பகு­தி­யிலும் பாட­சா­லை­களை ஆரம்­பிக்­கு­மாறு இலங்கை வந்­தி­ருந்த மெத­டிஸ்த மிஷ­ன­ரி­மாரைப் பணித்தார். வண. ஜோஜ் தலை­மையில் இங்­கி­லாந்து போட்ஸ் மௌத் துறை­முகத்­தி­லி­ருந்து 1813 டிசம்பர் 30 ஆம் திகதி புறப்­பட்ட குழு­வி­னரே இவர்கள். இக்­கு­ழு­வுக்குத் தலைமை தாங்­கிய வண. ஜோஜ் வரும் வழியில் படகில் மர­ண­மானார். மட்டு. மத்­திய கல்­லூரி தாபகர் வண. வில்­லியம் ஓல்ட் பாதி­ரி­யாரும் மனை­வி­யுடன் இக்­கு­ழு­வி­ன­ருடன் புறப்­பட்­டி­ருந்தார். 1814 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி அவரின் இளம் மனை­வியும் நோய்­வாய்ப்­பட்ட நிலையில் உயிர் துறந்தார். கடல் பயணம் உடல் நிலைக்கு சாத­க­மாக அமை­ய­வில்லை. இறந்த இரு­வரின் உடல்­களும் வேறு வழி­யின்றி கட­லி­லேயே அடக்கம் செய்­யப்­பட்­டன. எஞ்­சியோர் 1814 யூன் 29 இல் காலி துறை­மு­கத்தை வந்­த­டைந்­தனர். துண்டு குலுக்­கப்­பட்டு வில்­லியம் ஓல்ட் மட்­டக்­க­ளப்­புக்கு அனுப்­பப்­பட்டார்.
இங்கு வந்த அவர் அரச களஞ்­சி­ய­சா­லையில் 5 மாண­வர்­க­ளுடன் ஒரு பாட­சா­லையை தாபித்தார். பிரித்­தா­னிய இரா­ணு­வத்­தி­னரின் 3 அநாதைக் குழந்­தை­களும் இ.தா. சோம­நா­தரும் நால்­வ­ராவர். சோம­நாதர் பின்னர் கச்­சே­ரியில் முத­லி­யா­ராக பணி­பு­ரிந்தார். 5 ஆவது சிறுவன் யார் என்று அறி­யப்­ப­ட­வில்லை. இளம் மனை­வியை இடை­வழி பய­ணத்தில் பிரிந்த துயர் நெஞ்சில் கனத்த நிலையில் அன்று அவர் ஆரம்­பித்த பாட­சாலை இலங்­கையின் 1 ஆவது ஆங்­கிலப் பாட­சாலை என்று கூறப்­ப­டு­கி­றது. அப்­பா­ட­சாலை தான் மெத­டிஸ்த மத்­திய கல்­லூரி என்று பெயர் பெற்று இன்று இருநூறாவது விழாவைக் கொண்­டா­டு­கின்­றது. வங்கக் கடலில் (வங்­காள விரி­குடா) வங்­கத்தில் (படகில்) முகத்­து­வா­ரத்­தி­னூடே மட்­டக்­க­ளப்பு வாவியுள் பிர­வே­சித்தார். பொது நூல­கத்­துக்கு முன்னால் தற்­போது மட்­டக்­க­ளப்பு வாயில் அமைக்­கப்­பட்­டுள்ள இடத்தில் 12.08.1814 இல் தரை இறங்­கினார். இதனை நினைவு கூரும் வகையில் அதே இடத்தில் கையில் அரிக்­கன்­லாம்பு ஒன்றை கையில் ஏந்­தி­ய­வாறு அன்­னாரின் சிலை­யினை நிறுவி மெத­டிஸ்த மக்கள் தமது நன்­றியை வெளிப்­ப­டுத்­தினர். கல்­லூ­ரி­யுடன் இணைந்­த­தா­க­வுள்ள மெத­டிஸ்த தேவா­ல­யத்­துக்கு அருகே மண்­டபம் ஒன்றை நிறுவி அதற்கு வில்­லியம் ஓல்ட் நினைவு மண்­டபம் எனப் பெய­ரிட்­டுள்­ளனர்.
மட்­டக்­க­ளப்பில் அதா­வது புளி­யந்­தீவு எனப்­படும் மையப்­ப­கு­தியில் மிஷ­ன­ரி­மாரால் நிறு­வப்­பட்ட 4 பாட­சா­லைகள் உள்­ளன. மெத­டிஸ்த மத்­திய கல்­லூரி, வின்சன் மகளிர் உயர்­தர தேசியப் பாட­சாலை இவை இரண்டும் சகோ­தரப் பாட­சாலை என்று கூறப்­ப­டு­கின்­றன. மெத­டிஸ்த மிஷ­னரி மாரால் இவை நிறு­வப்­பட்­ட­மையே அதற்குக் காரணம். ஆண் பாட­சா­லை­யாக ஆரம்­பிக்­கப்­பட்ட இப்­பா­ட­சா­லையில் 1837 இல் பெண்­களும் பயின்­றுள்­ளனர்.
இதே­போன்று, கத்­தோ­லிக்க மிஷ­ன­ரி­மாரால் இன்று புனித மிக்கேல் கல்­லூரி (ஆண்) புனித சிசி­லியா மகளிர் தேசியப் பாட­சாலை என்ற பெய­ருடன் விளங்கும் இரு பாட­சா­லை­களும் தாபிக்­கப்­பட்­டன. இவை இரண்டும் மற்­றைய சகோ­தரப் பாட­சா­லை­களாகும்.
1815 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வில்­லியம் ஓல்ட் பாதி­ரியார் இவ்­வு­லக வாழ்வை நீத்தார். 9 மாதங்­களே அவர் இங்கு வாழ்ந்­தாலும் அன்­னாரின் புகழ் மீன் பாடும் தேனாடு உள்ள வரை நிலை பெற்­றி­ருக்கும். 1839 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்ரூவர்ட் மக்­கன்சி இலங்­கையின் தேசா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்றார். அவ­ரு­டைய பத­விக்­கா­லத்தில் மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்­த­போது இப்­பா­ட­சா­லைக்கு பணம் மற்றும் கட்­டடப் பொருட்­க­ளையும் வழங்­கினார். வண. ஹோல் என்­பவர் இவற்றைக் கொண்டு புளி­யந்­தீவு மெத­டிஸ்த தேவா­ல­யத்தின் இரு புறமும் விறாந்­தை­களை அமைத்து அதில் பாட­சா­லையை நடத்­தினார். இது மெத­டிஸ்த மத்­திய கல்­லூ­ரியின் வளர்ச்­சியில் ஒரு மைல் கல்­லாகும்.
இங்கு இடம் போதா­ம­லி­ருந்­ததால் ஓலைக்­கொட்டில் ஒன்று அமைக்­கப்­பட்­டது. 1859 இல் பூர்த்­தி­யான இக்­கட்­ட­டத்­துக்கு 350 பவுண் செல­வா­யிற்றாம். இவ்­வா­றாக பாட­சாலை வளர்ச்சி பெற்­றது. இப்­பா­ட­சா­லையின் முத­லா­வது பரி­ச­ளிப்பு விழா 1876 ஆம் ஆண்டில் நடந்­துள்­ளது. 1917 ஆம் ஆண்டில் இங்கு கார­ணிய இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
இக்­கல்­லூ­ரிக்­கான இலச்­சினை இங்கு ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்­றிய சோம­நாதர் என்­ப­வரால் வடி­வ­மைக்­கப்­பட்­ட­தாகும். இலச்­சி­னையின் அடிப்­ப­கு­தியில் பரந்த சமுத்­தி­ரமும் அதன் பின்­ன­ணியில் கதி­ர­வனும் இடது மேற்­ப­கு­தியில் புத்­த­கமும் புத்­த­கத்தின் மேல் பறக்கும் புறாவும் வலது மேல் பகு­தியில் தென்னை மரமும் அமைந்­துள்­ளன.
கதி­ரவன் ஒளி­வீசி சமுத்­தி­ரத்தின் மேற்­ப­கு­தியை பிர­கா­சிப்­பது போல கல்­லூரி மாண­வர்கள் மூலம் ஒளி வீசி நாட்டு மக்­களின் அறி­யா­மையைப் போக்க வேண்டும். மத்­திய கல்­லூரி மாணவன் ஜீவ புத்­த­கத்­தினை விரும்ப வேண்டும். வாழ்வை வேதா­க­மத்­தின்­படி நெறிப்­ப­டுத்த வேண்டும். கற்­றலும் சிந்­த­னையும் பாவத்­துக்கும் தவ­று­க­ளுக்கும் வழி நடத்­தாமல் இருப்­பதை புறா அறி­வு­றுத்­து­கின்­றது. தென்னை கிழக்கு கரையின் சிறப்பை நினைவு படுத்­து­வ­துடன் நமது வளர்ச்சி உயர்ந்­த­தா­கவும் நேரா­ன­தா­கவும் இருக்க வேண்டும் என்­பதை தெளிவு படுத்­து­கின்­றது. தென்னை மரத்தின் ஒவ்­வொரு பாகமும் பயன் தரு­வது போல கல்­லூரி மாணவன் நேர்­மை­யா­ன­வ­னாக மாத்­தி­ர­மன்றி அவனின் சுற்றம் ஒவ்­வொன்றும் தன்னைச் சூழ வாழும் மனித சமு­தா­யத்­துக்கு சுய நலம் அற்ற சேவை­யினை ஈந்து பயன் தரு­வ­னவாய் இருக்க வேண்டும். அறி­யாமை என்னும் கடலின் மேலாக தென்னை, புறா, புத்­தகம், உதய சூரியன் இவற்­றினைப் போன்று நாம் வாழ்ந்து செயற்­பட்டால் தான் நாம் நற்­பி­ர­ஜை­க­ளாக வளர்ந்து பிர­கா­சிக்­கலாம். நாம் இவ்­வு­ல­கிற்கு கதிர் வீசும் ஒளி எல்லா ஒளி­க­ளுக்கும் மூல­மா­யி­ருக்கும் இறை­வனின் ஒளியில் இருந்து தெறிக்­கா­விட்டால் அதனால் பய­னில்லை. பரந்த உணர்­வுடன் நோக்கும் போது இவை­க­ளெல்லாம் ஒன்று சேர்ந்து எமது இலச்­சி­னையின் அடியில் பொறிக்­கப்­பட்­டி­ருக்கும் உமது ஒளியில் நாம் வெளிச்சம் காண்போம் என்னும் மகுட வாக்­கி­யத்தின் கருத்­தினைக் காட்­டு­கின்­றது. இவ்­வாறு அந்த இலச்­சி­னைக்கு பொருள் கூறப்­பட்­டுள்­ளது.
ஜெய­கே­சரி, இளைஞன், யுவன், பரணி விஞ்­ஞானி, செம்மை போன்ற மாத சஞ்­சி­கை­களை கையெ­ழுத்து அச்சு பிர­தி­க­ளாக மாண­வர்கள் அவ்­வப்­போது வெளி­யிட்­டுள்­ளனர். எனினும் 1946 இல் வெளி­யி­டப்­பட்ட சென்­றலைட் என்­பதே 1ஆவது சஞ்­சி­கை­யாகும். இக்­கல்­லூ­ரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு விழா ஏ.ஏ. அரு­ளன்­ன­ராசா அதி­பரின் காலத்தில் 1989 ஆம் ஆண்டு கொண்­டா­டப்­பட்­டது. மத்­திய தீபம் சிறப்பு மலரும் வெளி­யி­டப்­பட்­ட­துடன் 75 சதம் பெறு­ம­தி­யான நினைவு முத்­தி­ரையும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.
இக்­கல்­லூ­ரிக்கு விதை­யாகி உர­மா­னவர் வில்­லியம் ஓல்ட். கல்வி மற்றும் புறக்­கி­ருத்­திய நட­வ­டிக்­கை­களில் இக்­கல்­லூரி சாதனை புரிந்­துள்­ளது. 23 க்கு மேற்­பட்ட பழைய மாண­வர்கள் பாராளுமன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளா­கவும் அமைச்­சர்­க­ளா­கவும் பாரா­ளு­மன்­றத்தை அலங்­க­ரித்­துள்­ளனர். அதி­பர்­க­ளாக ஏற்­க­னவே 36 பேர் பணி புரிந்­துள்­ளனர். இவர்­களில் 28 பேர் மேற்கு நாட்­டி­ன­ராவர். வண.ஜி.ஹொலே தொடக்கம் வண.ஜி.ஏ.ஸ்மித் வரைக்குமான 28 பேருள் 27 பேர் வணக்கத்துக்குரியோராவர்.
இரு நூற்றாண்டு கடந்த மே மாதம் 29 ஆம் திகதி வாகன ஊர்தி ஊர்வலத்துடன் ஆரம்பமானது. நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. நதளை 29 ஆம் திகதி இருநூறாவது விழா நடைபெறவுள்ளது. காலை புளியந்தீவு மெதடிஸ்த தேவா­லயத்தில் விசேட ஆராதனை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து வில்லியம் ஓல்ட் பாதிரியாரின் சிலை முன்பாக இருந்து கல்லூரி மண்டபம் வரை ஊர்வலமும் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். நினைவு முத்திரை ஒன்றை பின்னர் வெளியிடவும் அதன் வெளியீட்டு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. யூன் 29 ஓல்ட் காலியில் கால் பதித்த நன்னாள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |