அவுஸ்திரேலியாவில் எட்டு வயது குழந்தையை தாயொருவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளைத் தூய்மைப்படுத்தும் Vacuum Cleaner கருவியின் உலோகப் பொல்லால் தாயொருவர் தாக்கி எட்டு வயது குழந்தை பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி விசாரித்த குயின்ஸ்லாந்து மாநில மரண விசாரணை உத்தியோகத்தர், சிறுவர் பாதுகாப்பு வலைப்பின்னலை முற்றுமுழுதாக மறுசீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
ஃபெயித் என்ற பெயருடைய சிறுமி உலோகப் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அந்தச் சிறுமி தாம் தாக்கப்பட்ட நாள் தொடக்கம் தனியாக விடப்பட்டு கடும் வலியுடன் போராடி மரணத்தைத் தழுவியிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நிகழ்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக, பிள்ளையின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு ஆசிரியர் முறையிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, ஃபெயித் தாபரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
ஒன்பது நாட்களுக்குப் பின்னர். சிறுவர் பாதுகாப்பு நிறுவகம் பிள்ளையை வீடு திரும்ப அனுமதித்தது. ஃபெயித் பாடசாலை வராத நிலையில் பாடசாலை பணியாளர்கள் அவரைத் தேட முயற்சித்தார்கள். அப்போது, ஃபெயித் வெளிநாடு சென்றிருப்பதாக குடும்பத்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இது பற்றி துருவி ஆராய்ந்த சமயம், பிள்ளையின் தாயார் பல பொய்களைச் சொல்லி உண்மையை மறைக்கப் முயற்சித்துள்ளார். தற்போது குறித்த தாய்க்கு ஏழு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிள்ளையின் சிறிய தந்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் இருந்து ஃபெயித்தை வீட்டுக்கு அனுப்பியமை மிகவும் தவறான முடிவென மரண விசாரணை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
0 Comments