Advertisement

Responsive Advertisement

சமூக வலைத்தளங்களை ஒடுக்க அவசரசட்டம் கொண்டுவர அரசாங்கம் முயற்சி!

முகநூல்கள், 'புளொக்குகள்' போன்ற சமூக வலைத்தளங்களை அவசர சட்டங்கள் மூலம் அடக்கி, ஒடுக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அளுத்கம, பேருவளைச் சம்பவங்கள் பற்றிய பல தகவல்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே மக்கள் மத்தியில் பரவின. இதனையடுத்தே அவசரமாகக் கொண்டு வரப்படவிருக்கும் சில சட்டமூலங்களையும், தண்டனைச் சட்டக் கோவையின் சில பிரிவுகளையும் பயன்படுத்தி இந்த சமூக வலைத்தளங்களை முடக்கும் எத்தனம் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைப்பு எச்சரிக்கை வெளியிட்டிருக்கின்றது.
தீவிர இன, மத, குழப்பங்கனையும் குரோதங்களையும் எழுத்து மூலமோ, பேச்சு, உரைகள் மூலமோ ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ விடுத்திருக்கும் உத்தரவையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. மதக் குழப்பங்களை ஏற்படுத்தும் இணையத்தளங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் நேரடியாகவே குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 15 ஆம் திகதி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்த ஞானாசார தேரர் அளுத்தகமவில் ஆற்றிய உரையை 'யு ட்யூப்' ஊடாக சமூக வலைத்தளங்கள் அப்படியே அதைப் பகிர்ந்திருந்தன என்பதும், அதுவே உண்மையில் அந்த வன்முறைகளைத் தூண்டிய சூத்திரதாரிகள் யார் என்பதை அம்பலப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments