அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது : பந்துல குணவர்தன!

Tuesday, January 31, 2023


 அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்க சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மது போதையில் பேராதனை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் கைது!

Monday, January 30, 2023


பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரும் பிக்கு மாணவர்கள் எனக் கூறப்படும் ஆறு மாணவர்கள் மது போதையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி நகர தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிக்கு மாணவர்கள்


மது போதையில் பேராதனை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் கைது! | 6 Students Aressed For Drunkenness Case In Kandy

கைது செய்யப்பட்ட பிக்கு மாணவர்களில், 5 பேர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், ஒருவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் கல்வியைத் தொடர்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் வைத்து இவர்கள் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE | comments

சோற்றுக்காக போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழ் மக்கள் நிரூபிக்க வேண்டும் : சாணக்கியன்!


 இந்த நிலையில்தான் தலைநகரம் கொழும்பிலே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தின ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். ஆனால் இந்த நாட்டிலே எவருக்குமே சுதந்திரமில்லை.


ஆனால் இம்முறை சுதந்திரதினத்தை இந்த நெருக்கடியான சூழலிலும் கொண்டாடித் தீர வேண்டுமென ஜனாதிபதி நிற்கின்றார். ஏனெனில் மக்கள் சுதந்திர தினத்தினை மறந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் வாழும் எவருமே இன்று பொருளாதாரச் சுதந்திரம் உள்ளிட்ட எந்தவிதமான சுதந்திரத்தினையும் அனுபவிக்கவில்லை.

அது தமிழர்களுக்கும் இல்லை. முஷ்லிம்களுக்குமில்லை. ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி உள்ளிட்ட தவறுகளால் நாட்டு மக்களுக்கு தற்போது பொருளாதார சுதந்திரம்கூட மறுக்கப்பட்டுள்ளது.

மக்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாமலிருக்கின்றனர்.
எனவே நாம் கிழக்கில் கறுப்புச் சுதந்திர தினத்தினை அனுஷ்டிப்பதற்குத் தயாராகி வருகின்றோம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

அந்த வகையில் கடந்த 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு அரசியல் சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்துள்ளதைக் காண்கின்றோம். எனவே இந்தமுறை சுதந்திர தினத்தில் நாம் எமது பாரிய எதிர்ப்பினை கிழக்கில் வெளிப்படுத்துவதற்குத் தயாராகி வருகின்றோம்.

எனவே சர்வதேசத்திற்கும் பெரும்பான்மைச் சமூகத்திற்கும் தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை எடுத்துக்கூறும் முக்கிய தினமாக பெப்ரவரி நான்காம் திகதி நாம் முன்னெடுக்கவிருக்கின்ற இந்த கறுப்புச் சுதந்திர தின எதிர்ப்பு நாள் அமைய வேண்டும்.

தமிழர்களின் விடயங்களைக் கையாளும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களுக்கு நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மூலம் இன்னமும் எமக்கு அரசியல் உள்ளிட்ட அனைத்து எரிமைகளும், சுதந்திரங்களும் மறுக்கப்பட்ட வருகின்றன என்பதனை பலமாக நாம் எடுத்துக்கூற வேண்டும்.

நாம் போராட்டத்தில் ஈடுபட்டது தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைப் பெறுவதற்காகவே என்பதை சர்வதேசத்திற்கும் சிங்கள பெரும்பான்மையினத்திற்கும் எடுத்துக்கூறவேண்டிய நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் எமது இனத்தின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழரசுக் கட்சியினை பெரும்பான்மையாக வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் மக்கள் அதனை நிரூபிக்க வேண்டும்.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஆசிரியையை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கைது!

 


ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் பயணித்த சிறிய லொறியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மொரகஹஹேன, மில்லவ பகுதியில் குறித்த ஆசிரியர் வீதியில் சென்றுகொண்டிருந்த போது லொறியில் பயணித்த சந்தேகநபரான முன்னாள் உறுப்பினர் ஆசிரியையை வீதிக்கு குறுக்கே சென்று மறித்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆசிரியை 119 அவசர அழைப்பு பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மொரகஹஹேன பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் துசித விக்ரமரத்ன தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினருக்கும் இடையே பண கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முரண்பாடு நிலவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆசிரியை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
READ MORE | comments

புத்தி சுயாதீனத்துடன் இருந்தால் மஹிந்த ராஜபக்ஷ 13ஆவது திருத்தத்திற்கு இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார் : சன்ன ஜயசுமண !

 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதியின் யோசனைக்கு, புத்தி சுயாதீனத்துடன் இருந்தால் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்திருக்க மாட்டார் என சன்ன ஜயசுமண குறிப்பிட்டார்.


மக்கள் ஆணையற்ற ஜனாதிபதிக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது என்றும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

அடுத்த தேர்தலை இலக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13ஐ முழு

மையாக நடைமுறைப் படுத்துவதாக தெரிவித்துள்ளாரே தவிர , தமிழ் மக்கள் மீது கொண்ட இரக்கத்தினால் அல்ல என்றும் குறிப்பிட்டார்.


உண்பதற்கு உணவின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கூறும் அனைத்திற்கும் தலையசைத்துக் கொண்டிருக்கின்றார் என சன்ன ஜயசுமண சாடினார்.
READ MORE | comments

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு!

Sunday, January 29, 2023


 இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.


இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.

இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை என வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

கல்வி அமைச்சின் அறிவித்தல்!


 தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் ஆங்கில மற்றும் சிங்கள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


குறித்த வெற்றிடங்களுக்கு அரச பணியாளர்களை இணைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பில் 47 இலட்சம் பெறுமதியான மாடுகள் கடத்தல் : ஏறாவூர் தளவாயில் தோல் பதனிடும் கம்பனியில் கடத்தப்பட்ட மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு!

Saturday, January 28, 2023


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று ஏறாவூர் தளவாய் தோல் பதனிடும் கம்பனியில் விற்பனை செய்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்ததுடன் தோல்கம்பனில் எரிக்கப்பட்ட நிலையில் மாட்டுகன்றுகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

புதார் பிரதேசத்தைச் சேர்ந் கால்நடை உரிமையாளர் தனது உன்னிச்சை குளப்பகுதியில் இருந்த 16 மாடுகளை கொண்ட மாட்டு பட்டியை வேளாண்மை செய்கை காரணமாக கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 26 ம் திகதி அந்த மாட்டுபட்டியை அங்கிருந்து கரடியனாறு காருமலை பகுதிக்கு நகத்;தி சென்று பட்டி அமைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 21ம் திகதி அங்கிருந்த கன்றுதாச்சியான மாடுகள் உட்பட 16 மாடுகள் காணாமல் போய்யுள்ளதையடுத்து அதனை தேடிய நிலையில் கரடியனாறு செங்கலடி பிரதான வீதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிரி கமராக்களை சோதனையிட்டபொது மாடுகளை இருவர் கால்நடையாக கடத்திச் செல்லும் வீpடியோ பதிகாகியுள்ளதையடுத்து மாடுகடத்தும் குழுவைச் சேர்ந்த கித்துள் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்திச் சென்ற மாடுகளை ஏறாவூர் தளவாயிலுள்ள தோல் பதனிடும் கம்பனி விற்பனை செய்துள் கம்பனியை கதட்டிய நிலையில் பொலிசார் அந்த கம்பனியை சுற்றிவளைத்து தேடுதலில் கடத்தி வந்த மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் வெட்டப்பட்ட கன்றுதாச்சி மாடுகளின் வயிற்றில் இருந்த கன்றுகள் அந்த பகுதி நிலத்தில் எரியூட்டப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்தாகவும்.

தோல் கம்பனி உரிமையாளர் மற்றும் மாடுகடத்தலில் ஈடுபட்ட கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் நீண்ட காலமமாக கரடியனாறு பகுதியில் மாடு ஆடு கடததலில் குழு ஒன்று இயங்கிவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலசார் தெரிவித்தனர்.

இதேவேளை கரடியனாறு பிரதேசத்தில் நேற்றைய தினம் 8 மாடுகளை காணவில்லை என அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : உதய கம்மன்பில!

 


இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமாக்கப்பட்டது.போராட்டத்தின் ஊடாக ராஜபக்ஷர்களை மக்கள் புறக்கணித்தார்கள்,ஆனால் ராஜபக்ஷர்களை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.


ராஜபக்ஷர்களின் தவறான பொருளாதார கொள்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுகிறார்.மக்கள் படும் துயரத்தை அவர் கண்டு கொள்ளவில்லை,ஏனெனில் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் அல்ல,தேர்தலை நடத்தினால் படுதோல்வி அடைய நேரிடும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார் அதனால் தான் தேர்தலை பிற்போட சூழ்ச்சி செய்கிறார்.கௌரவமான முறையில் செயற்பட்டால் இறுதி காலத்தை கௌரவமாக கழிக்கலாம் என்றார்.
READ MORE | comments

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மாயம் !

Friday, January 27, 2023

 


அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.

கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.

 ​​அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.

  2022 ஜனவரி முதல் டிசெம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

 வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை  குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்

READ MORE | comments

யாழ்ப்பாணத்தை உலுக்கிய கொடூரக் கொலை..! வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி

 


யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத்தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார்(மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் மத்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவர் கடந்த 21ஆம் திகதி இரவு தனது கராஜில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்கியுள்ளது.

வீட்டு வாசலில் வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தை உலுக்கிய கொடூரக் கொலை..! வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி | Murder Koppai Area Of Jaffna 11 People Arrested

தாக்குதலாளிகளிடம் இருந்து அவர் தப்பியோடிய போது, அவரை வீடு வரை துரத்திச் சென்று, வீட்டு வாசலில் வைத்து மூர்க்கத்தனமாக வெட்டி படுகொலை செய்த பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினரால், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலையான நபரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நிலவி வந்ததாகவும், அதனால் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனது வாகன திருத்தகத்தில் (கராஜ்) தங்கி இருந்துள்ளார் எனவும் தெரிய வந்திருந்தது.

மேலதிக விசாரணை

யாழ்ப்பாணத்தை உலுக்கிய கொடூரக் கொலை..! வெளிவரும் அதிர்ச்சியூட்டும் பின்னணி | Murder Koppai Area Of Jaffna 11 People Arrested

அதன் அடிப்படையில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , கொலையானவரின் மனைவியும், மாமனாருமாக இணைந்து திட்டம் தீட்டி வேறு நபர்கள் மூலம் குறித்த நபரை படுகொலை செய்துள்ளனர் என கண்டறிந்த நிலையில் , மனைவி, மனைவியின் தந்தை உள்ளிட்ட 11 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 11 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

READ MORE | comments

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தவர் கைது!

Thursday, January 26, 2023




 ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேக நபரை கைது செய்துள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை(24) மாலை நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியேட்டர் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 1 கிராம் 50 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை

பதில் வலயக்கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டீ.டீ நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) சிந்தக (75492) உள்ளிட்ட பொலிஸ் கன்டபிள்களான அபேரட்ன (75812) சிமேஸ்(90699) சங்க (101078) சாரதி குணபால (19401)உள்ளிட்ட அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

19 வயதுடைய இளைஞன் தூக்கிட்டு தற்கொலை !

Monday, January 23, 2023

 


கொக்கட்டி சோலை போலீஸ் பிரிவு உட்பட்ட மாவடி முன்மாதிரி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (22) இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்


பத்தரைக் குளம் மாவடி முன்மாதிரி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய நடராஜா சதுஸன் என்பவரே இவ்வாறே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்

சம்பவ தினத்திற்கு முதல் நாள் தனது வீட்டாருடன் உரையாடிக் கொண்டிருந்த பின்னர் தனது படுக்கை அறைக்கு சென்றவர் அதிகாலை எவ்விதமான சத்தங்களும் இன்றி அவரின் அறை பூட்டப்பட்டு இருந்ததாகவும் பின்னர் வீட்டார் வீட்டின் ஜன்னலை உடைத்து உட்சென்ற போது தனக்குத் தானே தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பின்னர் தூக்கில் இருந்து மீட்டெடுத்து பார்த்தபோது உயிரிழந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் மற்றும் மரணவிசாரணை அதிகாரியின் ஆரம்ப கட்டம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்;ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனை பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
READ MORE | comments

மட்/சிவாநந்த வித்தியாலயம் தே.பா. யில் கோலாகலமாக இடம்பெற்ற தைப்பொங்கல் விழா - 2023

Wednesday, January 18, 2023


 இந்நிகழ்வானது கலாச்சார முறைப்படி இன்று காலை (17.01.2023) நடைபெற்றது. நெற்கதிர் எடுத்துவரப்பட்டு , நெல் உரலில் இட்டுக்குற்றி பாரம்பரிய தமிழர் முறையின் படி பொங்கல் பொங்கப்பட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. 
















இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் மேலாளர், உதவிமேலாளர், பழைய மாணவர்கள் சங்கத்தலைவரும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளருமாகிய திரு.வாசுதேவன் அவர்கள் பழைய மாணவர்கள் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.... நிகழ்வுகளை படங்களில் காணலாம்....




















READ MORE | comments

புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்

Tuesday, January 17, 2023

 


17-01-2023



 இனி வரவுள்ள காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் ஒன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

 NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளுடன் இடமாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

 செயல்முறையை விரைவாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ள கணனியை தினமும் புதுப்பிக்க வேண்டும். எனவே ஆசிரியர்கள் வழங்கும் தகவல்களின் துல்லியத்தை அவர்கள் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

போராட்டக்காரர்கள் காவல்துறை மீது கல் வீச்சுத் தாக்குதல் - நீர்த்தாரை கண்ணீர்ப்புகையால் அதிரும் கொழும்பு!

Monday, January 16, 2023


இரண்டாம் இணைப்பு

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், கொள்ளுப்பிட்டி நோக்கி பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபடத் தடை என நீதிமன்று உத்தரவிட்டுள்ள நிலையில், கொள்ளுப்பிட்டி சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு, காவல்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவினை வாசித்துக் காட்டியுள்ளனர்.

எனினும் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

முதலாம் இணைப்பு

கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் சற்று முன்னர் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேவை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும், மக்கள் வாழக்கூடிய சுமூகமான நிலையை ஏற்படுத்த கோரியும் இந்த ஆர்ப்படம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினர், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெருமளவில் திரண்ட போராட்டக்காரர்கள்

போராட்டக்காரர்கள் காவல்துறை மீது கல் வீச்சுத் தாக்குதல் - நீர்த்தாரை கண்ணீர்ப்புகையால் அதிரும் கொழும்பு! | Sri Lanka Colombo Lipton Circle Protest Un Office

இந்த போராட்டத்திற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் திரண்டிருந்தனர்.

அத்துடன் எதிர்ப்பு கோசங்களை எழுப்பிய வண்ணம் அவர்கள் அங்கு போராட்டத்தை ஆரம்பித்தனர். இதேவேளை இந்த போராட்டம் கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இரகசிய இடத்திற்கு மாற்றம்

போராட்டக்காரர்கள் காவல்துறை மீது கல் வீச்சுத் தாக்குதல் - நீர்த்தாரை கண்ணீர்ப்புகையால் அதிரும் கொழும்பு! | Sri Lanka Colombo Lipton Circle Protest Un Office

இதனையடுத்து இரகசியமாக போராட்ட இடத்தை மாற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய பகுதியில் தற்போது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

READ MORE | comments

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் !

 


நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பெய்யக்கூடியதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்றும் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு காலநிலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் மற்றும் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
READ MORE | comments

அம்பாறையில் பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த பாதாள கோஸ்டியைசச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது!


 கனகராசா சரவணன் )


அக்கரைப்பற்றில் நீதவான் வீட்டு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் பல வீடுகளை நீண்டகாலமாக உடைத்து கொள்ளையிட்டு வந்த குணாகுழு என்ற பெயரில் இயங்கிவந்த குணா என அழைக்கப்படும் பிரபல பாதாள கோஸ்டியைச் சோந்த பிரதான சூத்திரதாரியான குணசீலன், பெண் ஒருவர் உட்பட 4 பேரை இன்று திங்கட்கிழமை (16) களுதாவளை பகுதியில் வைத்து நவீனகர கைதுப்பாகி ஒன்று மற்றும் கைக்குண்டுடன் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீட்டு யன்னலை உடைத்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் தொடர்பா காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் குறித்த கொள்ளையன் தலைமறைவாகிய நிலையில் அவரை கைது செய்ய முற்படடபோது அவர் பொலிசாரை நோக்கி துப்பாகிசூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதேவேளை அக்கரைப்பற்றில் பல வீடுகள் உடைத்து தாலிகொடிகள் உட்பட சுமார் 30 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளை மற்றும் களுவாஞ்சிக்டியில் கடந்த வருடம் வர்த்தகர் ஒருவரின் வீடு உடைத்து அங்கிருந்து 80 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளை சம்பவங்கள்; தொடர்பான பிரதான சூத்திரதாரியான குணா உட்பட அவரின் குழுவைச் சேர்ந்தவர்களை பொலிசார் தேடிவந்துனர்.

இந்த நிலையில சம்பவதினமான இன்று பகல் களுதாவளையிலுள்ள அவரது வீட்டில் வந்திருப்பதாக பொலிசாருக்கு தகல் கிடைத்ததையடுத்து பொலிசார் உடனடியாக அந்த வீட்டை சுற்றுவளைத்து முற்றுகையிடடனர் இதன் போது குணா மற்றும் பெண் ஒருவர் உட்பட 4 பேரை நவீனகர கைதுப்பாகி ஒன்று மற்றும் கைக்குண்டுடன்கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட ஆறுமகத்தான்குடியிருப்பைச் சேர்ந்த அரூஸ், சசிகுமார், களுதாவளையைச் சேர்ந்த குணா, ராகினி ஆகியவர்கள் எனவும் இவர்கள் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
READ MORE | comments

திங்கட் கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறையா? கல்வி அமைச்சர் வெளியிட்ட செய்தி

Sunday, January 15, 2023

 


15-01-2023


தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் திங்கட்கிழமை தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வந்தது. 

எனினும், விடுமுறை வழங்காதிருக்க தீர்மானித்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். 

இந்த தவணைக்கான பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டும், எதிர்வரும் 20 திகதி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்காக விடுமுறை வழங்கப்படுவதனாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

குழந்தையை கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட பெண் சிறையில் மரணம்!

Thursday, January 12, 2023

 


நீர்கொழும்பில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் ஆணும் அவரது பேரனும் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.


54 வயதுடைய நபரையும் அவரது 10 வயது பேரனையும் கடத்திச் சென்ற 47 வயதுடைய பெண் கடந்த வாரம் (06) கிராண்ட்பாஸில் கைது செய்யப்பட்டார், ஆணின் மகன் குறித்த பெண்ணிடம் இருந்து ஹெரோயின். பங்குகளை வாங்கிய பின்னர் முழு கட்டணத்தையும் செலுத்தத் தவறிய நிலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வாடிக்கையாளரின் தந்தை மற்றும் மருமகனை கடத்திச் சென்ற பெண், மீதித் தொகைக்கு ஈடாக குழந்தையை பிணைக் கைதியாக வைத்திருந்த நிலையில் அந்த நபரை விடுவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குழந்தையை மீட்டு, பெண்ணை அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்தனர், பின்னர் அவர் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள பெண்கள் பிரிவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

திடீர் சுகவீனம் காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவலவிற்கு நேற்று அறிவித்துள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் வைக்கப்பட்டிருந்த பெண் திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
READ MORE | comments

பின்தங்கிய பிரதேச பாடசாலை மணவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!

 





READ MORE | comments

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

 


12-01-2023


ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“புதியதோர் கிராமம், புதியதோர் நாடு“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் நேற்று முன்தினம் (10) உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

முடங்கியிருந்த பொருளாதாரம் இப்போது செயற்படுகிறது. முன்னெப்போதையும் விட, பொருளாதார இயந்திரம் மற்றும் சேவை இயந்திரம் செயற்படும் போது, உங்கள் மீதுள்ள பொறுப்பு மற்றும் உங்களுக்கு வழங்கப்படும் புதிய சவால்களை வெற்றிகொள்வதற்கான தேவை அதிகமாக உள்ளது.

இலங்கையில் பத்தாயிரத்து நூறு பாடசாலைகள் உள்ளன. அவற்றில் அரைவாசிக்கும் மேற்பட்ட பாடசாலைகள் 1 ஏக்கர் முதல் 12 ஏக்கர் வரையான காணிகளை கொண்டுள்ளன. அவை குறுகிய கால பயிர்ச்செய்கையில் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது அறிக்கைகளில் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை.

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் உற்பத்தித் திறனுக்கு மாற்றுவதில் என்ன குறை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து ஆலோசனை வழங்குவதும் வழிகாட்டுவதும் எமது பொறுப்பு. நாங்கள் புள்ளிவிவரங்களுடன் மட்டும் மட்டுப்பட்டிருக்க முடியாது. உயர்தரப் பரீட்சை விரைவில் நடக்கவிருக்கிறது. பிரதேச ரீதியாக எந்தவொரு பரீட்சையும் தடைபடாமல் இருக்க மாவட்ட செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அது எங்களுக்குரியதல்ல, பரீட்சை ஆணையாளருக்கு உரியது என்று கூறிக்கொண்டிருக்க முடியாது. பரீட்சை ஆணையாளருடன் தொலைபேசியில் பேசி கலந்துரையாடியாவது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பரீட்சையை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்க வேண்டாம்.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அந்த சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் முதல் அடுத்த மாதம் மூன்றாவது வாரம் வரை பரீட்சைகள் நடக்கின்றன. உங்கள் பிள்ளைகளும் இதில் இருக்கலாம். இந்த பரிட்சையில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் தோற்றுகின்றனர். இதில் ஏதும் தடை ஏற்பட்டால், இன்னும் ஒரு வருடம் பல்கலைக்கழகம் செல்ல முடியாது. அந்தக் குற்றத்தில் நீங்களும் பங்காளியாகாதீர்கள். பிரச்சினை இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். இந்தப் பரீட்சை எங்கள் பிள்ளைகளுக்கு ஏற்கனவே தாமதமாகியே நடக்கிறது. அவர்களின் கோரிக்கைக்கு அமையவே தாமதமானது.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை எமது அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது. சுமக்க முடியாத சுமையாக இருந்தாலும் பல வருடங்களுக்குப் பின்னர் நாம் அதைக் கொடுத்தோம். கல்விச் சேவையின் அடிப்படைக் கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றவில்லை என்று எவராலும் கூற முடியாது. மேலும், அரச பணியில் ஓய்வு பெறுவதால் வெற்றிடமாகும் பணியிடங்களை நிரப்பி, தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஊழியர்கள் உள்ளனர். கடந்த காலங்களில் 56000 பேரை அரச சேவைக்கு சேர்த்துள்ளோம். அப்போது நான் பொது நிர்வாக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருந்தேன்.

இருபத்து நான்காயிரம் பேர் ஆசிரியர் சேவைக்கும், அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஏனைய அரச பணிகளுக்காக ஏனையவர்களும் இணைப்புச்செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இன்னும் உபரியாக உள்ளனர். அவர்களையும் உற்பத்தித்திறன் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும்.


" பெரிய தனியார் தொழிற்சாலைகள் மற்றும் சிறு தொழில்களில் ஆட்கள் உள்ளனர். இவர்களை மாவட்ட அலுவலகங்களுக்கு அழைத்து வந்து இந்த மாபெரும் பணிக்கு உதவுமாறு கூறுங்கள். எங்களின் பல்வேறு துறைகளுக்கும் நலன்பேணல் திட்டங்களிலும் அவர்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். மாறிவரும் இந்த காலகட்டத்தில் உங்கள் அறிக்கைகளில் எந்த இடைவெளியும் இருக்க முடியாது என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறேன். " என்றும் பிரதமர் தெரிவித்தார்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |