குமார் சங்கக்கார முதலிடத்தில்

Wednesday, December 30, 2015

2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்தவர்கள் வரிசையில் குமார் சங்கக்கார 5 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.
இவருடன் வில்லியர்ஸும் 5 சதங்களை விளாசி சங்காவுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அடுத்து அம்லா, டில்சான், டெய்லர், கப்டில் ஆகியோர் 4 சதங்களை விளாசி இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
இந்த வருடம் நிறைவடைய ஒருநாள் மாத்திரமே காணப்படும் நிலையில் சங்கா முதலிடத்திலேயே காணப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெறுமனே 14 போட்டிகளில் மாத்திரம் பங்குபற்றியே சங்கா 5 சதங்களை விளாசியுள்ளார். இதில் உலகக்கிண்ணத்தில் இவர் தொடர்ச்சியாக விளாசிய 4 சதங்களும் உள்ளடக்கம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை விளாசியமையும் ஒரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுடன் குமார் சங்கக்கார சர்வதேச பொட்டிகளிலிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
READ MORE | comments

முதலாம் வகுப்புக்கு 40 மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர்!

இதன்படி இது குறித்த சுற்றறிக்கை கல்வி அமைச்சினால், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2016ஆம் ஆண்டில் முதலாம் தர வகுப்பொன்றில் சேர்த்துக் கொள்ளவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35இலிருந்து 40 வரை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2016ஆம் ஆண்டு மட்டும் 40 என்ற எண்ணிக்கை இருக்கவேண்டுமென்றும் அதற்குப் பின்னர், ஒவ்வொரு வருடத்துக்கும் ஒவ்வொரு மாணவர் என்ற வீதம் குறைத்து, 2021ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க வேண்டும் எனவும், அந்த சுற்றிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனெனில் திடீரென்று இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைப்பதன் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையாலேயே இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் ஐந்து வருட திட்டத்தினை முன்னெடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 3ம் திகதி

2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
அத்துடன், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு, பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் அதே நாள் காலையில் ஏனைய பகுதிகளுக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு சுமார் 309,069 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், அவர்களில் 236,072 பேர், பாடசாலைப் பரீட்சார்த்திகள் என்பதுடன் 72,997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவர்.
நாடு பூராகவும் 2,180 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் இந்தப் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா?

மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு உண்மையில் சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா?என்ற சங்கடம் மக்களுக்கு உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூக அமைப்பு ஊடக சந்திப்பு தொடர்பாக கேட்டபோது மேலும் கருத்து கூறிய அரியநேத்திரன் அவர்,
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தொடர்ந்தும் தாம் தலைவர் என அண்மையில் ஊடக சந்திப்பை தலைமையேற்று நடாத்தியிருந்தார் மேலும் ஒருவர் கடந்த பொதுத்தேர்தலில் ஆனந்தசங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது யாழ் நூலகத்தில்கடந்த 19ஃ12ஃ2015ல் புதியஅரசியல் அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளார்.
எனவே யாரும் எப்படியும் எந்த தேர்தலிலும் தாம் விரும்பிய அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் தேர்தல் முடிந்தபின் மீண்டும் சிவில்சமூக அமைப்பு என்று கூறுவதும் எந்தவித்தில் பொருந்தும் அப்படியானால் ஒரு நடுநிலையான அமைப்பாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பை கருதமுடியுமா? சிவில் சமூகம் என்பது மததலைவர்கள் மற்றும் எந்தஅரசியல்கட்சிகளையும் பிரதிநித்துவப்படுத்தாதவர்களாக இருக்கவேண்டும் என்பதே சரியாகும்.
ஆனால் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தில் உள்ள அனேகமானவர்கள் அரசியல் கட்சி சாராதவர்களாக இருந்தும் ஓரிருவர் ஐக்கியதேசிய கட்சிக்காறர்களும் தமிழர்விடுதலைக்கூட்டணி கட்சிக்காறர்களும் அங்கத்தவர்களாக இருக்கும் போது அது நேர்மைத்தன்மை பேணப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு இயல்பாகவே எழும்.
தாம் ஒரு அரசியல் கட்சியில் பகிரங்கமாக அதுவும் எமது தமிழ்தேசியகூட்டமைப்புக்கு எதிராக தமிழ்மக்களின் வாக்கை சிதறடித்து வேறு இனத்தவரை பாராளுமன்றம் அனுப்ப பேரினவாத கட்சியிலும் ஏனைய கட்சிகளிலும் போட்டியிட்டு தேர்தல் முடியும்வரை சிவில் சமூகத்தில் இருந்து விலகியிருந்தோம் தேர்தலில் வெற்றியீட்டாதபோது மீண்டும் சிவில் சமூகத்தில் சேர்ந்துள்ளோம் என்று கூறுவது எந்த வகையில் பொருந்தும் இன்னுமொரு தேர்தல் வந்தால் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் இதைத்தானே செய்வார்கள் என்ற சந்தேகம் மக்களுக்குண்டு.
எனவே இந்த விடயங்கள் நேர்மையாக செயலாற்றும் சிவில்சமூக அங்கத்தவர்களுக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர் பிரசாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

Tuesday, December 29, 2015

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் 2008ம் ஆண்டு இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்கள் மீதான விளக்கமறியல் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  2008ம் ஆண்டு  டிசம்பர் மாதம் 29ம் திகதி  அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன்  உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக  கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற் கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தனும் அவரது சகோதரனும்  கைது செய்யப்பட்டிருந்தனர்.
.
குறித்த இரட்டைக் கொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறை யினரால்  கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலிலுள்ள    தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (வுஆஏP) கட்சியின்  பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரனான பூபாலப்பிள்ளை ஹரன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு  மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜனவரி 12ம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.றியாழினால்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

READ MORE | comments

தமிழ் மக்கள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை முறையான வகையில் இணைக்காதது கவலைக்குரிய விடயம்

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை முறையான வகையில் இணைக்காதது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பில் இருந்து நிர்வாக சபையின் அனுமதியின் சென்றவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா மற்றும் அமைப்பின் ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மாமாங்கராஜா,
நாங்கள் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவர்கள் அல்ல.ஆனால் எந்த விடயத்திலும் வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.எமக்கு ஆலோசகராக உள்ள ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினையோ,அல்லது நிர்வாக சபையினையோ தொடர்புகொண்டு இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் உட்பட மூவர் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ளனர்.அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பு என்று தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.இது தொடர்பில் ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினை விமர்சித்துவருவோர் எங்களிடம் தொடுக்கும் வினாக்களுக்கு விடையளிக்கவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்.
இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக ஆராய்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பில் இருந்து சென்றவர்களிடம் விளக்கம் கோரவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து அவர்கள் தொடர்பான நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
n10
xz
READ MORE | comments

ஜனவரி 1 முதல் 8 வரை நல்லாட்சி வாரம் பிரகடனம் ; அரசாங்கம் அறிவித்தது

ஜனவரி முதலாம் திகதி முதல் 8ஆம் திகதி வைரயான காலப்பகுதியை நல்லாட்சி வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த காலப்பகுதிகளில் வீடுகளில் தேசிய கொடிகளை பறக்க விடுமாறு அரசாங்கம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வரும் 8ஆம் திகதியுடன் மைத்திரி ஆட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் பூர்தியாகும் நிலையிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைமச்சரவை பேச்சாளர் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஆசிரிய துறையில் உள்ள அனைத்து வெற்றிடங்களும் நிரப்பப்படும்!- கல்வி அமைச்சர்

ஆசிரிய துறையில் காணப்படும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) கல்வி அமைச்சில் இடம்பெற்ற தேசிய போதனா பட்டதாரி மாணவர்கள் 431 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் என்ற ரீதியில் எதிர்கால குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தவதோடு அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே காணப்படுவதாகவும் எனவே இவ்வாறான நல்ல செயலை ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் நியமனம் பெற்றவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் எமக்கு கற்பித்த ஆசிரியர்கள் எமக்கு நன்றாக கற்பித்திருந்தால் நாங்கள் இதை விட நல்ல நிலையில் இருந்திருப்போம் என நாம் இப்போது சொல்கிறோம் தானே இதேபோல் நீங்கள் கற்பித்துக் கொடுக்கும் மாணவர்களையும் இவ்வாறு சொல்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்களை சிறந்த மனிதனாக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

நாடு பூராகவும் 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன

Monday, December 28, 2015

“அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தொனிபொருளுக்கு அமைய நாடு பூராகவும் 300ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை நிறைந்த பாடசாலைகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக அதிபர், ஆசரியர் இடமாற்றங்கள் இடம்பெறவுள்ளன என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்  அட்டனில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
நாடு பூராகவும் தற்பொழுது கடமையில் இருக்கின்ற 5 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களும், 8 வருடங்களை பூர்த்தி செய்த ஆசரியர்களும் 2016ஆம் அண்டு முதல் இடமாற்றம் செய்யவுள்ளனர்.
தற்பொழுது பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒரு சில பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர்களும், ஒரு சில பாடசாலைகளில் குறைவான ஆசிரியர்களும் கடமையாற்றுவதால் இதன்மூலம் ஒரு சில பாடசாலைகள் பாதிப்புக்குள்ளாகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சம வள பகிர்வையும், சம ஆசிரியர் பகிர்வையும் முன்நிறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற ஆசிரியர் இடமாற்றம் போல் அன்றி எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இன்றி இந்த இடமாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
மலையகத்திற்கு பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அணைவரினதும் வேண்டுக்கோளாக இருக்கும்பட்சத்தில் 2016ம் அண்டு முதல் பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை புதிய அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
சீருடை துணிகள் பெறுவதற்கு வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
எனினும் இலங்கை முழுவதற்குமான அறிமுகமே இந்த வவுச்சர் முறை தனியாக மலையகத்திற்கு மட்டும் மாற்றுத்திட்டங்கள் கொண்டு வர முடியாது. ஆகையால் இதற்கான நடவடிக்கைகள் முதற்கட்டமாக வவுச்சர் பெற்றுக்கொண்டு மேலதிகமாக பணத்தை அறவிடும் வியாபாரிகளுக்கு அடுத்த முறை வவுச்சர்கள் அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என்பதினை உறுதியாக தெரிவித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்பு வாகரையிலிருந்து கொழும்பிற்கு நேரடி பஸ் சேவை

மட்டக்களப்பு வாகரை பேருந்து சாலையானது பயணிகளின் நன்மை கருதி கொழும்பிற்கான தமது நேரடி பஸ் சேவையினை இன்று திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பித்துள்ளது.
இச்சேவையானது இன்று முதல் திருகோணமலை சேருநுவரவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வாகரை ஊடாக வாழைச்சேனை நகரம் வந்தடைந்து அங்கிருந்து கொழும்பிற்கான சேவையினை மேற்கொள்ளவுள்ளது.
தினமும் காலை 7 மணிக்கு திருகோணமலை சேருநுவரவில் இருந்து புறப்படும் பேருந்தானது மாலை 4மணிக்கு கொழும்பினை சென்றடையும் என்றும் மறுநாள் மாலை 4 மணிக்கு கொழும்பில் இருந்து அதே வழிப்பாதையில் சேருநுவரவிற்கு 12 மணிக்கு சென்றடையும்
இதேவேளை வாகரை பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது தூர  இடங்களுக்கான போக்குவரத்தினை வாழைச்சேனை நகரம் வந்து புகையிரதம் மற்றும் தனியா் அரச பேருந்துகளில் தங்களது பயணங்களை மேற்கொண்டு வருவது வழக்கமாகும். இதனால் நேரவிரயமும் பல சிரமங்களையும் எதிர்நோக்கி வந்தனர்.
மேற்படி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்து பிரதேச மக்கள் சாலை நிர்வாகத்திற்கு தமது பாராட்டுக்களையும் நன்றியையும்  தெரிவித்துக்கொண்டனர்.
READ MORE | comments

தூசு படிந்த நீரை அடைத்துள்ள பெருமளவான குடிநீர் போதல்கள் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டது

மட்டக்களப்பு நகரில் தூசுகள் படிந்த நிலையில் அடைக்கப்பட்டிருந்த பெருந்தொனையான குடிநீர் போத்தல்களை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு திருமலை வீதியில் குடிநீர் போத்தல் விற்பனை நிலையத்தில் இருந்தே இந்த போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு நகரில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் போத்தல் ஒன்றை பொதுமகன் ஒருவர் வாங்கிச்சென்று அருந்தியபோதே இது கண்டுபிடிக்கப்பட்டு வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாருடன் இணைந்து வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையினை தொடர்ந்து பெருமளவான அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது ஒரு லீற்றர் கொள்ளளவைக்கொண்ட சுமார் 1600க்கும் அதிகமான குடிநீர் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் குறித்த குடிநீர் விநியோகஸ்தர் மற்றும் குடிநீரை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் சுத்தமான நீரை அருந்தவேண்டும் என்பதற்காக இவ்வாறான குடிநீரை வாங்கிப்பருகும்போது இவ்வாறான நிலைமைகளினால் பொதுமக்கள் பெரும் சுகாதார சிக்கல்களுக்கு உட்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
READ MORE | comments

லொறி மோதியதில் பெண்ணொருவர் பலி:

நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறி ஒன்று, பெண் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்துள்ளார்.
31 வயது மதிக்கதக்க வரதராஜ் சந்திரகலா என்ற பெண், நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெதமுல்லை கடை ஒன்றுக்கு சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்தில்
இருந்து லொறியை அகற்றவிடாமல் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை உருவாக்கியிருந்தது.
பொலிஸாரின் தலையீட்டின் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

தாஜுடீன் கொலை தொடர்பான அறிக்கை ஜனவரி 20 இல் நீதிமன்றில் தாக்கல்

Sunday, December 27, 2015

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையின் ஊடாக தாஜுடீனின் கொலையாளிகள் யார் என்பது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் மேலும் கூறியுள்ளன.
நாரஹேன்பிட்டியில், இவரது மரணம் இடம்பெற்ற அன்றைய தினம் இவர் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்த போது அந்த வாகனத்திற்கு அருகில் செல்ல முயற்சித்தவர்களை தடுத்தவர் ஒருவர் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாஜுடீன் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதியான கப்டன் திஸ்ஸ என்பவர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை .
இந்த நிலையில் ஜனவரி 20 இல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்யும் அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
READ MORE | comments

வட கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவம் ஆராய்கிறது

வடக்கு, கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்து வருவாதக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம்  6 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசு தீர்மானித்துள்ள நிலையில், எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்த பின்னரே எந்தெந்தக்  காணிகள்  விடுவிக்கப்படும் என்பது தொடர்பாகத் தெளிவாகக் குறிப்பிட முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் அடுத்த வருடம்  6 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரம் ஏக்கர்  காணிகள் என்று குறிப்பிடுவதைவிட பெருந்தொகையான காணிகள் விடுவிக்கப்படும் என்று குறிப்பிடலாம்.
இருப்பினும் அந்தக் காணிகள் எவை என இதுவரை இனங்காணப்படவில்லை. எந்தெந்தக் காணிகளை விடுவிப்பது என்பது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் ஆராய்ந்துவருகின்றனர். விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எவை என்பதை அவர்கள் குறிப்பிட்ட பின்னரே அது தொடர்பாக தெளிவாகக் குறிப்பிட முடியும்.
இதேவேளை வடக்கு, கிழக்கில்  65,000 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் குளங்களைப் புனரமைத்து, விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் ஜனவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
READ MORE | comments

ஜனவரியில் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: மகிந்த அணியினர் நால்வருக்கு அமைச்சர் பதவி

அமைச்சரவை வரும் ஜனவரி மாத முற்பகுதியில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.தே.கவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டு அரசா ங்கத்தை அமைத்து நான்கு மாத ங்களாகியுள்ள நிலையில், இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் இடம் பெறவுள்ளதாக உயர்மட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, மிகவும் செல்வாக்குள்ள அமைச்சர் ஒருவர் பதவி இழப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் இடம்பெற்றிருந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாம் மகிந்த அணியில் இருந்து விலகப் போவது குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ MORE | comments

முச்சக்கர வண்டி மட்டக்களப்பு நகர் புதுப்பாலத்தில் பாலத்தில் நீருக்குள் பாய்ந்துள்ளது.

Saturday, December 26, 2015

மட்டக்களப்பில் நத்தார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமொன்று பயணம் செய்த முச்சக்கர வண்டி மட்டக்களப்பு வாவிக்குள் பாய்ந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பிய நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை மட்டக்களப்பு நகரில் இருந்து குடும்பத்துடன் சென்ற முச்சக்கர வண்டி மட்டக்களப்பு நகர் புதுப்பாலத்தில் பாலத்தில் நீருக்குள் பாய்ந்துள்ளது.
இதன்போது குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை மீட்டுள்ளனர்.
சம்பவத்தின்போது முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு பெண் மற்றும் மூன்று பிள்ளைகள் சாரதி ஆகியோரை மீனவர்கள் மீட்டுள்ளனர்.
புதுப்பாலப்பகுதியில் முறையான வாவியோர பாதுகாப்பு தடுப்பு இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியில் விபத்துகள் நடைபெற்றுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் முச்சக்கர வண்டியை மீட்டதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
READ MORE | comments

நத்தார் புதுவருட பிறப்பினை முன்னிட்டு 6 சிறைக் கைதிகள் மட்டு சிறையில் இருந்து விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து நத்தார் புதுவருட பிறப்பினை முன்னிட்டு ஆறு சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
இன்று ஜனாதிபதியினால் கிறிஸ்மஸ் தினத்தினையொட்டி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் விடுதலைசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளர் எம்.யு.எச்.அக்பர் மற்றும் சிறைச்சாலை பிரதான ஜெயிலர் என்.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர்.
IMG_0296IMG_0303
READ MORE | comments

வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து புதிய சட்டம் அறிமுகம்

வெளிநாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வது குறித்த புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீக்ரம கொழும்பு ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். 
தரம் குறைந்த பண்டங்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதனை அதாவது இறக்குமதி செய்யப்படுவதனை தடுக்க இலங்கையில் தற்போதைக்கு போதிய சட்ட ஒழுங்குகள் கிடையாது.
தற்போது நாட்டில் அமுலில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தில் தரம் குறைந்த பண்ட இறக்குமதியை கட்டுப்படுத்த உரிய ஏற்பாடுகள் கிடையாது.
எனவே இந்த சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய சட்டமொன்றை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது.
புதிய சட்டம் அறிமகம் செய்யப்பட்டதன்
READ MORE | comments

சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட அஞ்சலி செலுத்துவோம்

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாக அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பல்லாயிரக் கணக்காக உயிர்களை காவுக்கொண்ட கடற்கோள் அனர்த்தம் ஏறபட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

என்டோஸ்கோபி இயந்திரம் றோட்டரிக்கழகதினால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு

Friday, December 25, 2015

கல்முனை றோட்டரிக்கழகத்தின் கோரிக்கையின்பேரில் அவுஸ்திரேலியாவிலுள்ள றோட்டரிக்கழக வைத்திய நண்பர்கள் ஏற்பாட்டில் 1கோடி 60லட்ச ருபா பெறுமதியான ' என்டொஸ்கோபி ' இயந்திரமொன்றை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மெடிக்கல் எய்ட் நிறுவனம் இப்பாரிய இயந்திரத்தைப் பெற முழு அனுசரணையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இவ் இயந்திரம் வெகுவிரைவில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்படுமென கல்முனை றோட்டரிக்கழகத்தின் செயலாளர் றோட்டரியன் முத்துக்குமார் சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

ஆவர் மேலும் கூறுகையில்; கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் எங்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அங்கு நீண்டகால தேவையாக இருந்துவந்த இவ்வியந்திரம் 17மாதகால முயற்சியின்பின்னர் கிடைத்துள்ளது. உண்மையில் இது ஒருவெற்றியாக மகிழ்ச்சியாக உள்ளது.மக்களுக்கு எமது இச்சேவையால் பெருநன்மைகிடைக்கும்.

எமது முன்னாள் தலைவர் றோட்டரியன் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் எனது தலைமைத்துவகாலத்தில் எடுத்த பெருமுயற்சியின்பேரில் அவரது நண்பரான அவுஸ்திரேலியாவிலுள்ள வைத்தியகலாநிதி றோட்டரியன் குணாளன் திருக்குமார் மற்றும் டாக்டர் எஸ்.கேதீஸ்வரன் றோட்டரியன் டாக்டர் ஹரன் இராமச்சந்திரன் ஆகிய மூவரும் இப்பாரிய பங்களிப்பை  வழங்கி இவ்வரிய இயந்திரத்தை அவுஸ்திரேலியாவிலிருந்து பெற்று இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய மெடிக்கல் எய்ட் நிறுவனம்  இதற்கு பூரண அனுசரணையாளராக இருந்தது.அந்த நிறுவனத்திடமிருந்து தனது நண்பர்களூடாக இதனைப்பெற்றுத்தர எனது உடனடி முன்னாள் தலைவர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் எடுத்த பெருமுயற்சியை இவ்வண் மறக்கமுடியாது என்றும் அதுபோல எனது முயற்சிகளுக்கு பக்கபலமாக நின்று செயற்பட்ட அனைத்து றோட்டேரியன்களுக்கும் தேவையான போது தேவையான  ஆவணங்களை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய கல்முனை ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகருக்கும் எனது நன்றிகள் என அவர் மேலும் கூறினார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கப்பல் மூலம் இருமாத காலம் பயணித்து கடந்த வாரம் இலங்கை வந்துசேர்ந்த அதனை கல்முனை றோட்டரிக்கழகம் பொறுப்பேற்று இவ்வாரம் கல்முனைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது.
இதனை உத்தியோகபூர்வமாகக்கையளிக்கும் வைபவம்  வெகுவிரைவில் கழகத்தலைவர் றோட்டரியன் எஸ்.அழகுராஜா தலைமையில் நடாத்தப்படுமென செயலாளர் றோட்டரியன் முத்துக்குமார் சிவபாதசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கூறுகையில் :
இப்பாரிய மனித சேவையாற்றும் இயந்திரம் எனதுகாலத்தில் கிடைக்குமென்று நான் கனவிலும் நம்பவில்லை. உண்மையில் கல்முனை றோட்டரிக்கழகம் இவ்வைத்தியசாலைக்குசெய்துவரும் அளப்பரிய மானிடசேவையில் இது ஒரு மைல்கல்.அவர்களைப் பாராட்டுகின்றேன். வைத்தியசாலை நிருவாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

வாய்க்குழி தொடக்கம் குதம் வரையிலான உணவுக்கால்வாய் தொடர்பிலான நோய்களை மட்டக்களப்பு கொழும்பு என்று நீண்டதூரம் நோயாளிகளை அலைக்கழிக்காது இவ்வியந்திரம் இலகுவாக இனங்கண்டு சிகிச்சையளிக்கமுடியும் என்றார்.

READ MORE | comments

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் நடைபெற்ற ஆண்டு இறுதி நிகழ்வு

களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் ஆண்டு இறுதி நிகழ்வு மிகவும் சிறப்பாக 23 வியாழன் அன்று வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

இன்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர்,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கோபாலரெத்தினம்,கிழக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.முருகானந்தன்,கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்னபிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்தியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.








READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |