Advertisement

Responsive Advertisement

முதலாம் வகுப்புக்கு 40 மாணவர்கள் வீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர்!

இதன்படி இது குறித்த சுற்றறிக்கை கல்வி அமைச்சினால், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2016ஆம் ஆண்டில் முதலாம் தர வகுப்பொன்றில் சேர்த்துக் கொள்ளவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35இலிருந்து 40 வரை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2016ஆம் ஆண்டு மட்டும் 40 என்ற எண்ணிக்கை இருக்கவேண்டுமென்றும் அதற்குப் பின்னர், ஒவ்வொரு வருடத்துக்கும் ஒவ்வொரு மாணவர் என்ற வீதம் குறைத்து, 2021ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க வேண்டும் எனவும், அந்த சுற்றிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனெனில் திடீரென்று இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக குறைப்பதன் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையாலேயே இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் ஐந்து வருட திட்டத்தினை முன்னெடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments