2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
அத்துடன், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு, பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் அதே நாள் காலையில் ஏனைய பகுதிகளுக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு சுமார் 309,069 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன், அவர்களில் 236,072 பேர், பாடசாலைப் பரீட்சார்த்திகள் என்பதுடன் 72,997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஆவர்.
நாடு பூராகவும் 2,180 பரீட்சை மத்திய நிலையங்களிலும் 303 இணைப்பு மத்திய நிலையங்களும் இந்தப் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments