Home » » என்டோஸ்கோபி இயந்திரம் றோட்டரிக்கழகதினால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு

என்டோஸ்கோபி இயந்திரம் றோட்டரிக்கழகதினால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு

கல்முனை றோட்டரிக்கழகத்தின் கோரிக்கையின்பேரில் அவுஸ்திரேலியாவிலுள்ள றோட்டரிக்கழக வைத்திய நண்பர்கள் ஏற்பாட்டில் 1கோடி 60லட்ச ருபா பெறுமதியான ' என்டொஸ்கோபி ' இயந்திரமொன்றை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மெடிக்கல் எய்ட் நிறுவனம் இப்பாரிய இயந்திரத்தைப் பெற முழு அனுசரணையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இவ் இயந்திரம் வெகுவிரைவில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்படுமென கல்முனை றோட்டரிக்கழகத்தின் செயலாளர் றோட்டரியன் முத்துக்குமார் சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

ஆவர் மேலும் கூறுகையில்; கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் எங்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அங்கு நீண்டகால தேவையாக இருந்துவந்த இவ்வியந்திரம் 17மாதகால முயற்சியின்பின்னர் கிடைத்துள்ளது. உண்மையில் இது ஒருவெற்றியாக மகிழ்ச்சியாக உள்ளது.மக்களுக்கு எமது இச்சேவையால் பெருநன்மைகிடைக்கும்.

எமது முன்னாள் தலைவர் றோட்டரியன் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் எனது தலைமைத்துவகாலத்தில் எடுத்த பெருமுயற்சியின்பேரில் அவரது நண்பரான அவுஸ்திரேலியாவிலுள்ள வைத்தியகலாநிதி றோட்டரியன் குணாளன் திருக்குமார் மற்றும் டாக்டர் எஸ்.கேதீஸ்வரன் றோட்டரியன் டாக்டர் ஹரன் இராமச்சந்திரன் ஆகிய மூவரும் இப்பாரிய பங்களிப்பை  வழங்கி இவ்வரிய இயந்திரத்தை அவுஸ்திரேலியாவிலிருந்து பெற்று இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அவுஸ்திரேலிய மெடிக்கல் எய்ட் நிறுவனம்  இதற்கு பூரண அனுசரணையாளராக இருந்தது.அந்த நிறுவனத்திடமிருந்து தனது நண்பர்களூடாக இதனைப்பெற்றுத்தர எனது உடனடி முன்னாள் தலைவர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் எடுத்த பெருமுயற்சியை இவ்வண் மறக்கமுடியாது என்றும் அதுபோல எனது முயற்சிகளுக்கு பக்கபலமாக நின்று செயற்பட்ட அனைத்து றோட்டேரியன்களுக்கும் தேவையான போது தேவையான  ஆவணங்களை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய கல்முனை ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகருக்கும் எனது நன்றிகள் என அவர் மேலும் கூறினார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து கப்பல் மூலம் இருமாத காலம் பயணித்து கடந்த வாரம் இலங்கை வந்துசேர்ந்த அதனை கல்முனை றோட்டரிக்கழகம் பொறுப்பேற்று இவ்வாரம் கல்முனைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது.
இதனை உத்தியோகபூர்வமாகக்கையளிக்கும் வைபவம்  வெகுவிரைவில் கழகத்தலைவர் றோட்டரியன் எஸ்.அழகுராஜா தலைமையில் நடாத்தப்படுமென செயலாளர் றோட்டரியன் முத்துக்குமார் சிவபாதசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் கூறுகையில் :
இப்பாரிய மனித சேவையாற்றும் இயந்திரம் எனதுகாலத்தில் கிடைக்குமென்று நான் கனவிலும் நம்பவில்லை. உண்மையில் கல்முனை றோட்டரிக்கழகம் இவ்வைத்தியசாலைக்குசெய்துவரும் அளப்பரிய மானிடசேவையில் இது ஒரு மைல்கல்.அவர்களைப் பாராட்டுகின்றேன். வைத்தியசாலை நிருவாகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

வாய்க்குழி தொடக்கம் குதம் வரையிலான உணவுக்கால்வாய் தொடர்பிலான நோய்களை மட்டக்களப்பு கொழும்பு என்று நீண்டதூரம் நோயாளிகளை அலைக்கழிக்காது இவ்வியந்திரம் இலகுவாக இனங்கண்டு சிகிச்சையளிக்கமுடியும் என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |