Advertisement

Responsive Advertisement

ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர் பிரசாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் 2008ம் ஆண்டு இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்கள் மீதான விளக்கமறியல் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  2008ம் ஆண்டு  டிசம்பர் மாதம் 29ம் திகதி  அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன்  உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக  கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற் கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தனும் அவரது சகோதரனும்  கைது செய்யப்பட்டிருந்தனர்.
.
குறித்த இரட்டைக் கொலை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறை யினரால்  கைது செய்யப்பட்டு ஏற்கனவே விளக்கமறியலிலுள்ள    தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (வுஆஏP) கட்சியின்  பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரனான பூபாலப்பிள்ளை ஹரன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு  மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஜனவரி 12ம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.றியாழினால்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments