ஆசிரிய துறையில் காணப்படும் அனைத்து வெற்றிடங்களும் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) கல்வி அமைச்சில் இடம்பெற்ற தேசிய போதனா பட்டதாரி மாணவர்கள் 431 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் என்ற ரீதியில் எதிர்கால குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தவதோடு அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே காணப்படுவதாகவும் எனவே இவ்வாறான நல்ல செயலை ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் நியமனம் பெற்றவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் எமக்கு கற்பித்த ஆசிரியர்கள் எமக்கு நன்றாக கற்பித்திருந்தால் நாங்கள் இதை விட நல்ல நிலையில் இருந்திருப்போம் என நாம் இப்போது சொல்கிறோம் தானே இதேபோல் நீங்கள் கற்பித்துக் கொடுக்கும் மாணவர்களையும் இவ்வாறு சொல்வதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்களை சிறந்த மனிதனாக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களிடம் உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




0 Comments