றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுடீனின் கொலை தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையின் ஊடாக தாஜுடீனின் கொலையாளிகள் யார் என்பது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் மேலும் கூறியுள்ளன.
நாரஹேன்பிட்டியில், இவரது மரணம் இடம்பெற்ற அன்றைய தினம் இவர் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்த போது அந்த வாகனத்திற்கு அருகில் செல்ல முயற்சித்தவர்களை தடுத்தவர் ஒருவர் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாஜுடீன் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் சாரதியான கப்டன் திஸ்ஸ என்பவர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை .
இந்த நிலையில் ஜனவரி 20 இல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்யும் அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments