பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

Wednesday, August 31, 2022

 


31-08-2022.*, 

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

READ MORE | comments

ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட உரை! முழுமைத் தமிழ் வடிவம்!

Tuesday, August 30, 2022

 






30-08-2022.*, ,


இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை. சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

எனினும் பலர் பொருளாதார பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்

இலங்கையின் முரண்பாட்டு அரசியலே பொருளாதார பின்னடைவுக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டின் இந்த வரவுசெலவுத்திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் அது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வரவுசெலவுத்திட்டத்தில் பொதுமக்களுக்கான நிவாரணம் மற்றும் இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகளுடன் கூடிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1) பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தேசிய வருமான வரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்படுவார்கள்

2) கல்வி, சுகாதாரம் உட்பட்ட பல்வேறு பொது விடயங்களுக்கு அதிக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

3) அரச நிறுவனங்களில் மோசடிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

4) பிரதேசசபை, நகரசபை மற்றும் மாநகரசபைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேவைகளை விஸ்தரிக்கும் வகையில், சில பிரதேசசபைகளை, அண்மையில் உள்ள நகரசபைகளுடன் இணைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

5) அரச சேவைகளில் ஓய்வூதிய வயது 60 வயதாக வரையறுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அரச சேவையில் 60 வயதானவர்கள், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியன்று ஓய்வுப்பெறுவர்.

READ MORE | comments

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்


 மருதானை டீன்ஸ் வீதியில் உள்ள சுகாதார அமைச்சுக்கு அருகில் (IUSF) பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர் - நிருபர்.

READ MORE | comments

விவசாயிகளின் சிறிய கடன்கள் வட்டி இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும்.

 


இடைக்கால பட்ஜெட் -2022:

ஸ்டேட் வங்கிகளில் 2022 மே வரை சிறிய அளவிலான நெல் விவசாயிகள் (2 ஹெக்டேருக்கு குறைவானவர்கள்) பெற்ற கடன்கள் மற்றும் தீர்வு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் வட்டி இல்லாமல் தள்ளுபடி செய்யப்படும் மற்றும் திறைசேரி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பணம் செலுத்தும்.

READ MORE | comments

அரசு மற்றும் அரை அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது

 


இடைக்கால பட்ஜெட்;

அரசு மற்றும் அரை அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைக்கப்படும் மற்றும் 60 வயது வரை பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் 31 டிசம்பர் 2022 க்குள் ஓய்வு பெற வேண்டும்- 

READ MORE | comments

மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 2021 உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 81 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு.. விபரம்...

Monday, August 29, 2022

 


மட்/பட்டிருப்பு ம.ம.வி தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 2021 உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 81 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு.. விபரம்...


மருத்துவபீடம் - 03

பொறியியல் - 02

பெளதீக, உயிரியல் - 39

கலை பிரிவு - 25

வணிகப்பரிவு - 06

தொழில்நுட்பம் - 06

இது வரைக்கும் மொத்தமாக 81 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

அனைத்து மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

READ MORE | comments

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 44 பேர் கைது

 


29-08-2022.


சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 44 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு, வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் நேற்று (28) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​அவர்களில் 29 பேர் பல நாள் மீன்பிடிக் கப்பலில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 25 பேரும், பெண்கள் 02 பேரும், 18 வயதுக்குட்பட்ட இருவர் அடங்கலாக 29 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஐவர் குறித்த மீன்பிடி கப்பலில் இருந்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த மற்றுமொரு பல நாள் மீன்பிடிக் கப்பலை சோதனையிட்டதன் பின்னர் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்த சந்தேகத்தின் பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், லங்காபட்டுன, வாழைத்தோட்டம் கடற்கரைப் பகுதியில் தங்கியிருந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறத் தயாரான நிலையில் நேற்று (28) இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

READ MORE | comments

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 02 வரையான காலத்தில் மின்வெட்டு பற்றிய அறிவிப்பு

 


ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 02 வரை 2 மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு பின்வருமாறு;

குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW - பகலில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணிநேரம் மற்றும் 20 நிமிடங்கள் -

ஜனக ரத்நாயக்க ,தலைவர் PUCSL

READ MORE | comments

கல்முனை தமிழ்ப்பிரிவுப் பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு!-பிரதமர் பா.உ.களான ஜனா, கலையரசனிடம் உறுதி

 


கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன  உறுதியளித்துள்ளார்.


கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை தானும் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை பிரதமர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இச் சந்திப்பில், கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலகம் தொடர்பான குழப்பநிலை மற்றும் அண்மைய பொது நிருவாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து கல்முனை தமிழ்ப்பிரிவு அகற்றப்பட்டமை, நீண்டகாலமாக இருந்து வருகின்ற கணக்காளர் நியமிக்கப்படாத பிரச்சினை, காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இக் கலந்துயாடலின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் கல்முனை வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலகக் குழப்பங்களுக்குச் சரியானதொரு தீர்க்கமான தீர்வை வழங்குவதாக பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
READ MORE | comments

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்...! பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்


 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர் தர பரீட்சை

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்...! பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல் | 2021 O L Exam Results Release Date

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் (28) வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

சர்வதேச நாணய நிதியத்தின் இசைக்கு நடனமாடும் அரசாங்கம் – தேசிய மக்கள் சக்தி

 


சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் வரிகளை அதிகரித்து பொதுமக்களுக்கு சுமைகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.


இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சி உறுப்பினர் விஜித ஹேரத், புதிய வரிகளை அறிமுகம் செய்தல், VAT வீதம் உட்பட ஏற்கனவே உள்ள வரிகளை அதிகரிப்பது எனது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் என கூறினார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
READ MORE | comments

நாட்டில் மீண்டும் பாரியளவு விலையேற்றம் - வெளியானது அறிவிப்பு!

 


இலங்கையில், தற்போது 170 ரூபா முதல் 190 ரூபா வரை விற்பனை செய்யப்படும் ஒரு இறாத்தல் பாணின் விலையை எதிர்வரும் காலங்களில் 250 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை ஒரு கிலோ கிராமுக்கு 350 ரூபா என்ற மட்டத்தில் காணப்படுகிறது.

இதன் காரணமாக காரணமாக பாண் உட்பட வெதுப்பக உணவுகளின் விலைகளில் மீண்டும் திருத்தம் செய்ய நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

வெதுப்பக உரிமையாளர் சங்கம் எதிர்நோக்கும் சிரமம்

நாட்டில் மீண்டும் பாரியளவு விலையேற்றம் - வெளியானது அறிவிப்பு! | Sri Lanka Food Crisis Bakery Foods Price Bread Sl

மேலும் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்கள் ஏற்கனவே தமது இறக்குமதிகளை இடைநிறுத்தியுள்ளன.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு

நாட்டில் மீண்டும் பாரியளவு விலையேற்றம் - வெளியானது அறிவிப்பு! | Sri Lanka Food Crisis Bakery Foods Price Bread Sl

இதேவேளை இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை நீடித்தால் உணவு மற்றும் உணவுகள் அல்லாத பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

READ MORE | comments

இரு கைகளும் இன்றி அசாத்திய சாதனை - அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மாணவி!


 எஹேலியகொட பிரதேசத்தில் இரு கைகள் மற்றும் ஒரு காலின்றி பிறந்து, உயர்தர பரீட்சையில் மாணவி ஒருவர் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

தன் இடது காலை மட்டும் எழுதுவதற்காக பயன்படுத்தி பரீட்சை எழுதி சிறிந்த பெறுபேறு பெற்றுள்ளார்.

எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார்.

மாணவியின் சாதனை

இரு கைகளும் இன்றி அசாத்திய சாதனை - அனைவரையும்  திரும்பிப் பார்க்க வைத்த மாணவி! | Sri Lanka Al Result2022 Student Exam

2012ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார். தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டியில் தங்க பதக்கம்

இரு கைகளும் இன்றி அசாத்திய சாதனை - அனைவரையும்  திரும்பிப் பார்க்க வைத்த மாணவி! | Sri Lanka Al Result2022 Student Exam

அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

READ MORE | comments

வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் – பிரதமர்!

 


பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

தற்போது வேலையில்லாமல் இருக்கும் 461 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் தற்போது பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த நபர்களுக்கும் நிரந்தர வேலை வழங்குவது குறித்து அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி!-பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு !


 2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தில் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளன.


2021 பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

பின்வரும் இணையதளங்களில் பரீட்சை பேறுபேறுகளை பார்வையிட முடியும் :

https://www.doenets.lk/examresults

http://www.results.exams.gov.lk/

236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 171,497 பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாதாகவும், அறிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு 9 மாணவர்களும் பொறியியல் பீடத்திற்கு 15 மாணவர்களும் முகாமைத்துவ பீடத்திற்கு 8 மாணவர்களும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சாதனை....

Sunday, August 28, 2022

 




Bio stream -medicine
1) T.Thuwaragesh- 1
Z score - 2.988
2)T.Abishhan -2
Z score - 2.4333
3) M.Prabhoudhan -14
Z score - 2.1638
4) Z.Ziya - 19
Z score- 2.4176
5) Y.Sajeevan-22
Z score - 2.1192
6) T.Mirukshanth -25
Z score - 2.1083


Maths stream-  Engineering entrance
1) V.Vimosh -D.Rank -5, 
z score- 2.3851
2)T.Derik Jeevithan - 12
Z score-2.1281
3) S.Thejomayan -13
Z score-2.1131
4)T.Kathushan- 28
Z score-1.8750
5)A.Sanjith-45
Z score-1.6871
6)S.Haris - 53
Zscore -1.5520
7) P.Nithurgithan - 27
Zscore -1.8827
7) U.Methujan -36
Z score - 2.02
8)S.Harishnaath-37
Z score - 2.0143
9)R.Ruczihan - 39
Z score - 1.9903



READ MORE | comments

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கொடியேற்றம்

 


கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை (29) திங்கட்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஆலயத்திருவிழா, குடித்திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 11.09.2022ம் திகதி தேரோட்டம் 4மணிக்கு இடம்பெறவிருக்கின்றது. மேலும் அன்றிரவு திருவேட்டைத் திருவிழாவும் மறுநாள்(12) தீர்தோற்சவமும் நடைபெற்று ஆலய மகோற்சவம் நிறைவு பெறவிருப்பதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.

READ MORE | comments

சாய்ந்தமருதில் ஐஸ், ஹெரோயினுடன் சொகுசு கார் மீட்பு !

 


நீண்டகாலமாக சொகுசு கார்களில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று மாலை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி பிரபல உணவகத்திற்கருகில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் சொகுசு காரில் போதைப் பொருட்களுடன் பயணித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


இவ்வாறு கைதான நபர்கள் கல்முனைப்பகுதியை சேர்ந்த 44 மற்றும் 23 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 6 கிராம் 80 மில்லி கிராம் மற்றும் ஹெரோயின் 5 கிராம் 580 மில்லி கிராம் உள்ளிட்ட 4 கைத்தொலைபேசிகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர்கள் சான்று பொருட்களுடன் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மீள உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க உள்ளோருக்கான அறிவித்தல்

 


28-08-2022.


2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றது.

இந்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் 


https://www.doenets.lk/examresults  என்ற இணையத்தள பக்கத்தில் பார்வையிடலாம்.

இதேவேளை,இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மீள தோற்ற வேண்டுமெனில் எதிர்வரும் 1ஆம் திகதி 8ஆம் திகதி வரையில் ஒன்லைன் முறைமையில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் காலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்கள் வெளிவரும் போது முந்திக் கொண்டு நாம் அறியத் தருவோம்.

இந்தமுறை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெறுள்ளனர்.

உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்

 


தேசிய மட்டத்தில் மருத்துவ துறையில் முதலிடம் பிடித்த மட்டக்களப்பு மாணவன்

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவபீடம் தமிழ் மொழி மூலத்தில் நாடளாவிய ரீதியில் முதலாமிடம் மட்டக்களப்பு மாவட்டம்.

மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இம் மாணவன் மட்/ புனித மிக்கேல் கல்லூரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

 (சுதா)

2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த  உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (28) திகதி மாலை வெளியான நிலையில் இம்முறை 1,71,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடியில் வசித்துவரும் தமிழ்வண்ணன் துவாரகேஸ் எனும் மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


உயிரியல் விஞ்ஞானத்தில் (Biological Science) தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற துவாரகேஸ் வைத்தியர்களான திரு.திருமதி தமிழ்வண்ணன் தம்பதியினரின் மூத்த மகனானகவும்,  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கல் கல்லூரியின் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

க.பொ.த.(உ.த) பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 


க.பொ.த உயர்தர 2021 பெறுபேறுகள் வெளியாகி உள்ளது. www. doenets.lk. அல்லது www.results.exams.gov.lk விவரங்களுக்கு உள்நுழையவும்.

READ MORE | comments

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

 


பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து சங்கத்தின் முக்கிய அறிவிப்பு


28-08-2022.*, ,

தமக்கு தேவையான டீசல் இன்று (28) கிடைக்காவிட்டால் நாளை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக எரிபொருளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எரிசக்தி அமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் தாம் அறிவித்துள்ளதாகவும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.  

READ MORE | comments

வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் செல்லும் எரிபொருள் நிலையங்கள்!

 

28-08-2022.*, ,

இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளன.



பெரும்பாலும் இந்த நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன.

இதனையடுத்தே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளன.

இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டிலுக்குள் கொண்டு வர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் மசகு எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.


READ MORE | comments

மின் துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்

 


28-08-2022.


நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திடீரென செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், முதலாம் மின்பிறப்பாக்கி மீள ஆரம்பிக்கப்பட்டு, நேற்று தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

இதன்படி, 300 மெகாவொட் மின்சாரம், தேசிய கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் மின்பிறப்பாக்கி செயலிழந்தமை மற்றும் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் சீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின்தடை அமுலாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான, பின்னணியில், கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்தடை அமுலாக்கப்படும் காலம் குறித்து அறியப்படுத்துமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை மின்சார சபை, மின்துண்டிப்பு கால அளவில் திருத்தம் செய்து விரைவில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

READ MORE | comments

முறையற்ற வெளிநாட்டு நாணய கையாளுகை - காவல்துறை விடுக்கும் எச்சரிக்கை!

 


28-08-2022.

முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறைமா அதிபரினால் காவல்துறை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான பிரிவில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சட்டரீதியான வங்கி செயற்பாடுகளுக்கு புறம்பாக முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணய பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் ஊடாக வௌ;வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை விரிவுப்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


READ MORE | comments

இலங்கையில் எதிர்கால தலைமுறையை அழிக்கும் இனிப்பு; ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான எச்சரிக்கை



28-08-2022.*

தற்போது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கவர்ச்சியான நிறங்களுடன் இனிப்பு பண்டமாக விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்கள் தொடர்பாக மாணவ சமூகம் மற்றும் பெற்றோர்களும் விழிப்பாக இருப்போம்.

நாட்டின் எமது எதிர்கால தலைமுறையை அழிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இனிப்பு வகைகளுக்குள் போதைப்பொருட்களை இணைத்து சிறுவர்கள் முதல் இளையோர்களையும் போதைக்கு அடிமையாக்கும் ஒரு சதிவலை அம்பலமாகி உள்ளது.

இது தொடர்பான படங்களும், விழிப்புணர்வு பதிவுகளையும் சமூக வலைதளங்களில் வெகுவாக காண கூடியதாக உள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் அதிக பாடசாலைகளில் மாணவர்கள் இந்த இனிப்பு போதைப் பொருள் பாவனையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இது மாதிரியான சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன் இந்த சமூக விரோதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

READ MORE | comments

2021 க.பொ.த (உ/தர) பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகுமா ?


 Breaking news



 

28-08-2022.*, ,


👉2021 க.பொ.த உயர் தரபரீட்சையின் முடிவுகளை இறுதி செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


👉மாணவர்களின் பெறுபேறுகள் இணையத்தில் பதிவேற்றும் நடவடிக்கைகள் முடிந்தவுடன் உடனடியாக பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும்.


👉இன்று இரவு (08/28) முதல் 31 ம் திகதிக்குள் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன

பார்வையிட அழுத்துங்கள்

https://www.doenets.lk/examresults

READ MORE | comments

இலங்கை மீது விதிக்கப்பட்ட பயண ஆலோசனைகளை பல நாடுகள் தளர்த்தின!

Friday, August 26, 2022

 


இலங்கைக்கு செல்லும் தமது நாட்டவர்களுக்காக கடுமையான பயண ஆலோசனையை விதித்திருந்த பிரான்ஸ் – நோர்வே – சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.


எரிபொருள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து, நிறுவனங்கள் மற்றும் அவசர சேவைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நாளாந்த மின்வெட்டு, பொருளாதாரத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக ஊரடங்கு அல்லது அவசரகால நிலை பிரகடனம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் குறித்த நாடுகள் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.
READ MORE | comments

ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை

 


26-08-2022


நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.



வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர் அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.

தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை..!


இன்றைய தினத்திற்கான (25) மின்வெட்டு விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மூன்று மணித்தியால மின்வெட்டு

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை..! | Power Cut Schedule Power Cut Today Time Pucsl

இதன்படி, A முதல் L மற்றும் P முதல் w வரையான வலயங்களிலும், காலை வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணி நேரமும் 20 நிமிடங்களும்,

மாற்று M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணிமுதல் காலை 8.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளது.

அதேநேரம், கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6.00 மணி முதல் 8.30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

Gallery Gallery Gallery
READ MORE | comments

வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனை


வெளிநாடு

அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னர் ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இவ்விடையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் அரச ஊழியர்கள் ஆரம்ப நிலை ஊழியர்கள் 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை ஊழியர்கள் 200 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் நிலை ஊழியர்கள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் மாதந்தம் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிக் கட்டமைப்பு ஊடாக பணம்

வெளிநாடு செல்லும் அரச ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனை | Government Employee Dollar To Srilanka

புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையிலுள்ள வங்கிக் கட்டமைப்பு ஊடாக தமது பெயரில் உள்ள வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தங்களது சிரேஷ்டத்துவத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளில் தொழிலை மேற்கொள்ளலாம் எனவும் சம்பளமற்ற விடுமுறை காலம் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் அரச சேவையில் இணைந்து கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

READ MORE | comments

சம்பளம் கோரி தொலைக்காட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

 


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்றைய தினம் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இந்த மாதத்திற்கான சம்பளம் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட நாளிலும் குறித்த நேரத்திலும் வழங்கப்படவில்லை என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு இம்மாதத்திற்கான (ஒகஸ்ட்) சம்பளம் இதுவரை வழங்கப்படாத காரணத்தினால், ஊழியர்கள் சங்கத்தின் முகப்பு மண்டபத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதாந்தம் தமது சம்பளத்தை பெற்றுக்கொள்ள இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாக உயர் அதிகாரிகள் யாருடைய சலுகைகளையும் குறைக்காமல் சாதாரண ஊழியர்களின் சம்பளத்தை மட்டும் குறைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உரிய சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
READ MORE | comments

எரிபொருள் நெருக்கடிக்கு QR முறைமை தீர்வாகாது! - கஞ்சன விஜேசேகர

 


தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR முறைமை திட்டவட்டமான தீர்வாகாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


நாட்டின் நிதித் திறனை கருத்திற் கொண்டு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை சிறந்த முகாமைத்துவத்துடன் வாடிக்கையாளருக்கு விநியோகிக்க குறித்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு  தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஊடாக எரிபொருளைப் பெறுவதற்கு ஒதுக்கப்படும் பணத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக வரம்பு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மே 9 உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது!

Thursday, August 25, 2022

 


நாட்டில் கடந்த மே 9 இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்ட மேலும் பல வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் ஊடகப்பிரிவு இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துகளுக்கு தேசம் விளைவித்தமை,

போராட்டங்களின் போது மக்கள் பிரதிநிதிகளின் உடைமைகளுக்கு சேதம் விளைத்தமை மற்றும் சொத்துகளுக்கு தீ முட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35 – 73 வயதுகளுக்கிடைப்பட்ட, சிலாபம், பாணந்துறை, வீரம்புகெதர, ஜா-எல, கொலொன்ன மற்றும் இரத்மலானை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு பூஜ்ஜியமாகிவிட்டன!

 


மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 9 முதல் 11 மாதங்கள் வரையிலான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது 3 முதல் 4 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​​அதிக வெளிப்படைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இன்றி தொடர்ச்சியாக மருந்துகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என UNICEF இன் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் சில வாரங்களில் மேலும் குறைவடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் மத்திய மருந்துக் களஞ்சியத்தில் கடந்த வாரம் முதல் 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
READ MORE | comments

நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? மீண்டும் நீண்ட வரிசைகள்!


இலங்கை பெட்ரோலிய

 கூட்டுத்தாபனத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு வகையான எரிபொருள்கள் மொத்தமாக கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன.

இதனால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |