மட்/ பட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி மாணவன் அகில இலங்கை சமூகவிஞ்ஞானப் போட்டியில் சாதனை

Monday, March 31, 2014

அகில இலங்கை சமூக விஞ்ஞான உயர்தரப் பிரிவுப் போட்டியில் மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த செல்வன் ஏரம்பமூர்த்தி கஜமுகன் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எமது குழுமம் சார்பில் வாழ்த்துகின்றோம்.



READ MORE | comments

மட்டக்களப்பு செட்டிபாளையம் முருகன் கோயில் முன்வாயிலில் கார் விபத்து

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பளையம் பிரதான வீதியில், முருகன் கோயிலுக்கு முன்பாக இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மட்டக்களப்பு இருந்து பிரதான வீதியால் கல்முனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் வண்டி செட்டிபாளையம் முருகன் கோயில் முன்வாயிலில் 31.03.2014 விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த சாரதி உட்பட மூவரும் எவ்வித பாதிப்புக்களுக்கும் உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











READ MORE | comments

இலங்கை நியூசிலாந்தை 59 ஓட்டங்களால் வென்று அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானது

இலங்கை நியூசிலாந்தை 59 ஓட்டங்களால் வென்று   அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானது

Srilanka 119 (19.2/20 ov)
New Zealand 60 (15.3/20 ov)
Sri Lanka won by 59 runs















READ MORE | comments

ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

Sunday, March 30, 2014

ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் தயாராகிறது. தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக அவர் தொடங்கியது முதல், சினிமாவில் நடிக்க வந்தது, சாதித்தது, ஆன்மீகத்தில் ஈடுபட்டது என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறதாம்.
தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை பைசல்பை என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் என்பவர் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர், தமிழில் ஆஞ்சநேயா, சத்ரபதி, நெறஞ்ச மனசு அசல், பில்லா, சிங்கம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கோலிவுட் நடிகர்களுக்கே கிடைக்காதபோது, தனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதும் ஆதித்யாமேனன், இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு. இந்த படத்தை நாங்கள் ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

சிவானந்தா பழைய மானவர் சங்கத்தின் அவுஸ்த்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருக்கொன்றை முன்மாரி விவேகானந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கப்பட்டன

சிவானந்தா பழைய மானவர் சங்கத்தின் அவுஸ்த்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின் தங்கிய பகுதி மாணவர்களின் கல்வியை மேற்படுத்தும் நோக்கில் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக இன்று (28-03-2014) பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட திருக்கொன்றை முன்மாரி விவேகானந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பட்டிருப்பு வலய பிரதிகல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.எம்.உலகேஸ்வரம், போரதீவு பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் சு.பாலச்சந்திரன், உதவிக்கல்விப்பணிப்பாளர் (ஆரம்பகல்வி )பா.வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாடசாலை அதிபர் திரு.க.கணேசரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். 

சிவானந்தா பழைய மாணவர் திரு.அ.அழகுராஜா அவர்களின் ஏற்பட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

                               
                           

                           
READ MORE | comments

புதுபுது தகவல்கள்: தொடரும் மலேசிய விமானம் மர்மங்கள்

மலேசிய விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் விமானத்தின் பாகங்கள் அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் பல நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாக மலேசிய பிரதமர் 25ம் திகதி அறிவித்தார்,
இதனைத் தொடர்ந்து விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இதுவரை தேடி வந்த இடத்தில் இருந்து வடகிழக்கே 700 மைல் தொலைவில் உள்ள இடத்தில் தற்போது தேடல் பணி நடந்து வந்ததுஇத்தேடுதல் பணியில் சீனா மற்றும் அவுஸ்திரேலியா விமானப்படை விமானங்கள் கடலில் பல பொருட்கள் மிதப்பதை கண்டறிந்தனர்
இவற்றை கைப்பற்றி எடுத்து பார்த்ததில் அவை விமானத்தின் பாகங்களும் இல்லை என்றும் அதில் இருந்து விழுந்த பொருட்களும் இல்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளன.மேலும் விமானத்தை தேடும் இடத்தில் மீனவர்கள் பயன்படுத்தி விட்டுச்சென்ற பொருட்கள் கூட மிதக்கலாம் என்பதால் மிதக்கும் பொருட்களை வைத்து ஒரு முடிவுக்கு வர இயலாது என அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
READ MORE | comments

குழந்தை விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் விளக்கமறியலில்

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் குழந்தையொன்று விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாதங்கள்  நிரம்பிய  குழந்தை எண்ணாயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கல்குடா கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் ஒருவரே தமது மூன்றாவது குழந்தையை விற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில குழந்தையின் தாய், குழந்தையை வாங்கிய பெண் மற்றும் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு துணைபுரிந்த பெண் ஆகியோர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய   கிரான் முருகன் கோயில் கோரகல்லிமடு பகுதியிலிருந்து குழந்தை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது
வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த குறித்த பெண் வெளிநாடு செல்வதற்கு பணத்தை திரட்டுவதற்காக குழந்தையை விற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பின் வறுமை உச்சநிலையில் 8000 ரூபாவிற்கு குழந்தையை விற்ற பெண்

குடும்ப வறுமைகாரணமாக தனது நான்கு மாத குழந்தையை எட்டாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த சோக சம்பவமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
கல்குடா – கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது குடும்ப வறுமை காரணமாக நான்கு மாதங்களே நிறம்பிய தனது மூன்றாவது பெண்பிள்ளையை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் முருகன் கோவில் வீதி கோரகல்லிமடு என்ற இடத்தில் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளுக்கு எட்டாயிரம் ரூபாவிற்கு விற்றுள்ள சம்பவம் நேற்று (28.03.2014) இடம் பெற்றுள்ளது.
பிள்ளை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் இன்று (29.03.2014) பிள்ளையின் தாயையும் பிள்ளையை வாங்கிய குடும்பப் பெண்ணையும் கைது செய்துள்ளதுடன் குழந்தையையும் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தகப்பன் குழந்தை வயிற்றில் எட்டு மாதமாக இருக்கும் போதே மனைவியை விட்டு விட்டு சென்று விட்டார் குழந்தை பிறந்ததும் குடும் வறுமை காரணமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு உத்தேசித்தே குழந்தையை விற்றுள்ளார்.
இப் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறிய வாழைச்சேனையைச் சேர்ந்த முகவர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பியே இப் பெண் குழந்தையை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு தயாராகியுள்ளார் வெளிநாட்டு முகவர் குழந்தையின் தாயை சட்ட ரீதியற்ற வைத்தியரிடம் அழைத்துச் சென்று தாய்ப்பாலைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி மருந்தினையும் செலுத்தியதுடன் வெளி நாடு செல்வதற்கான சகல ஆவனங்களையும் தானே தயார் படுத்துவதாகவும் நீங்கள் எதற்கும் யோசிக்கத் தேவையில்லை என்றும் கூறியதாக குழந்தையின் தாய் பொலிஸ் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
வாழைச்சேனையைச் சேர்ந்த முகவர் தொடர்பாக விசாரித்து வருவதாகவும் வறுமையைக் காரணம் காட்டி அதிகமான தாயையும் குழந்தையையும் பிரித்து வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக அறிய முடிவதாகவும் இச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
READ MORE | comments

அம்பாறை திருக்கோவிலில் காட்டு யானை தாக்கியதில் இருவர் படுகாயம்

அம்பாறை, திருக்கோவில் குடிநிலம் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தைச் சேர்ந்த இருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இழக்கான நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளில் சனிக்கிழமை (29) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி கிராமத்தை சேர்ந்த சதாசிவம் வரதராஜா (வயது 54) மற்றும் சின்னத்தம்பி சாந்தி (வயது 34) ஆகிய இருவரே இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இன்று காலை இழக்காகியுள்ளனர்.
குறித்த இருவரும் அருகில் இருந்த முத்தத்தோடை பாலத்தடியில் விறகு எடுப்பதற்காக சென்றிருந்தபோது பற்றை புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை இவர்களை தாக்கியுள்ளது.

இவர்களில் ஒருவர் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை 28ஆம் திகதி இரவு குடிநிலக் கிராமத்திற்கு யானைகள் நுளைந்து வீடுகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

குருக்கள்மடம் 160 முஸ்லிம்கள் கொலை விசாரிக்கப்படும். ஜனாதிபதி ஆணைக்குழு

Saturday, March 29, 2014

கல்முனை – காத்தான்குடி வீதியில் 160 முஸ்லிம்களை கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட அவர்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் காத்தான்குடி – குருக்கள்மடம் பகுதியை ஆய்வு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்
READ MORE | comments

மட்டக்களப்பு, கோரக்கள்ளிமடு பகுதியில் கோயில் உண்டியல்கள் உடைப்பு


மட்டக்களப்பு, கோரக்கள்ளிமடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் வியாழக்கிழமை (27) ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து

Thursday, March 27, 2014

மட்டக்களப்பு-வந்தாறுமூலை பிரதான வீதியில் சற்றுமுன்னர் வீதி விபத்து ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றி ஏறாவூரை நோக்கி பயணித்த கெண்டர் வாகனம் அதேவீதியில் சைக்கிலில் பயணித்தவரில்  மோதுண்டுள்ளது.  
இந்த விபத்தில் சைக்கிலில் பயணயித்து கொண்டிருந்த 65வயதுடைய வந்தாறுமூலை செட்டியார் வீதியில் வசிக்கும் இளையதம்பி பிராம்பரப்பிள்ளை  பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏறாவூர் போக்குவரத்து பொலிஸர் சம்பவ இடத்திற்கு விரைந்துசொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                 
                

              
READ MORE | comments

உடைந்த நிலையில் மலேசிய விமானம் கண்டு பிடிப்பு –பரபரப்பில் உலகம்

இறுதியாக விமானத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். பிரான்ஸ் நாட்டு சட்டலைட் இந்த மாபெரும் சாதனையை புரிந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவில் இருந்து சுமார் 1,500 மைல் தொலைவில் தான் இந்த மலேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 75 அடி நீளத்தில் 122 உடைந்த பாகங்கள் மிதப்பதாக பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப் பெருங்கடலில் பாரிய தேடுதல் நடைபெற்றது. சுமார் பிரித்தானியா நாடு எவ்வளவு அகலம் மற்றும் பருமன் இருக்குமோ அந்த அளவு பருமனில் தேடுதல் நடத்தப்பட்டது. இந்த பாரிய தேடுதலில் தான் தற்போது வீழ்ந்த மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானத்தின் துண்டுகளை பிரான்ஸ் சட்டலைட் படம் பிடித்து, அதனை மலேசியாவுக்கு அனுப்பியுள்ளது. அதனை மலேசிய அதிகாரிகளே உறுதிசெய்யவேண்டும் என்று பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது. இதேவேளை சட்டலைட் கண்டு பிடித்த இவ்விடத்தை நோக்கி பல நாடுகளின் கப்பல் படையினர் விரைந்துள்ளார்கள். ஆனால் பட்ட காலில் தான் படும் என்று சொல்லும் அளவுக்கு, இன்றைய தினம் அக் கடல் பகுதியில் பாரிய கொந்தளிப்பு காணப்படுகிறது. இதனால் பல மணித்தியாலங்களாக படையினர் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.

குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் சில மணி நேரங்களில் அவுஸ்திரேலிய கப்பல் படையினர் சென்றுவிடுவார்கள் என்று அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது. எனவே மேலதிக செய்திகள் வெளியாக உள்ளது.

பிந்திய செய்திகள் தற்போது கப்பல்கள் விமானங்கள் அந்த பகுதியை அண்மித்துள்ளன

மேலதிக செய்திகள் விரைவில்
READ MORE | comments

இளம்பெண்ணின் உயிரை பறித்த மின்னல்

Wednesday, March 26, 2014

அவுஸ்திரேலியாவில் ஜேர்மனை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த ஸ்டெபினி வைடர்நார்த்(22) என்ற இளம் பெண் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார்.அங்கு கடந்த 21ம் திகதி வடக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து தொலைவிலுள்ள செம்மறியாட்டு பண்ணைக்கு சென்றுள்ளார்.
அப்போது மின்னல் மிக வேகமாக தாக்கியதில், ஸ்டெபினி படுகாயமடைந்தார், இச்சம்பவம் நடந்த போது இவரது நண்பர் டரேன் மேஜர்(வயது 25) என்பவர் அருகே இருந்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்டெபினி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள், மின்னலின் தாக்கத்தால் அவுஸ்திரேலியாவில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 5 முதல் 10 உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்
READ MORE | comments

மலேசிய விமானத்தில் பயணித்தோர்க்கு தலா 5000 டொலர் இழப்பீடு!

Tuesday, March 25, 2014



கடந்த 8-ம் திகதி 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று மாயமானதாக தேடப்பட்டு வந்த மலேசிய விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து நொறுங்கியதாக 16 நாட்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். அந்த விமானத்தில் பயணம் செய்த தங்களது உறவினர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செலவில் சீனத் தலைநகர் பீஜிங், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கோலாலம்பூர் மற்றும் பீஜிங் நகரில் உள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகங்களின் முன்பு விபத்துக்குள்ளான விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்து பலியான 239 பயணிகளின் உறவினர்களுக்கும் தலா 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (சுமார் 3 லட்சம் ரூபாய்) இழப்பீடாக வழங்கப்படும் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 
READ MORE | comments

விமானியின் ரகசிய தொலைபேசி உரையாடல் அம்பலம்!


மாயமான மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு புறப்படுவதற்கு முன்னதாக விமானி மர்ம தொலைபேசி அழைப்பு செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 8ம் திகதி காணாமல் போன மலேசிய விமானத்தின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்த விமானத்தை தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் 26 உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. விமானம் காணாமல் போனது தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகளின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வரும் மலேசிய அதிகாரிகளின் கவனம், மீண்டும் விமானி சகாரி அகமது ஷா மீது திரும்பியது.

அவரது வீட்டில் கிடைத்துள்ள சில ஆதாரங்கள், அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன.

விமானியின் வீட்டை முதலில் ஆய்வு செய்த அதிகாரிகள், விமானத்தை தரையிறக்கி மீண்டும் மேலே பறப்பது தொடர்பான பயிற்சிக்கு உரிய கருவி ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கருவியை ஆய்வு செய்தபோது, அதில் பதிவாகி இருந்த சில தகவல்கள் கடந்த பிப்ரவரி 3ம் திகதி அழிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே விமானம் மாயமான சம்பவத்தில் விமானிக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து மலேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த கருவியில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெறுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.


இந்நிலையில் விமானம் கடந்த 7ம் திகதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நகருக்கு புறப்படுவதற்கு முன்னதாக விமானி மர்ம தொலைபேசி அழைப்பு செய்துள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விசாரணை அதிகாரிகள் யார் கடைசியாக விமானியுடன் பேசினார்கள் என்பதை கண்டுபிடிக்க விசாரித்து வருகின்றனர் என்று செய்தி நிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது மாயமான விமானம் குறித்தான தகவல்களை பெற முக்கிய துப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக மலேசிய அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி அழைப்பை உறுதியும் செய்யவில்லை.











READ MORE | comments

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர்,விரிவுரையாளர்களை மறித்து சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்(படம் இணைப்பு)

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தர் மற்றும் விரிவுரையாளர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறவிடாது தடுத்து சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்துக்குள் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது.

இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவது எனவும் விடுதிகளில் இருந்து மாணவர்களை வெளியேறுமாறும் பணிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மாணவர்கள் மீது சுமத்துவதை நிறுத்துமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர். 

ஒரு சில மாணவர்கள் தவறுசெய்ததற்காக ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கையினையும் பாதிக்கச்செய்யும் நடவடிக்கையினை நிர்வாகம் செய்யக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இதன்போது பல்கலைக்கழகத்தின் வாயிலை அடைத்து பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை வெளியேராவண்ணம் ஆர்ப்பாட்டத்தினை நடத்திவருகின்றனர். 

உபவேந்தர் தனது வாகனத்தில் வெளியேறிசெல்ல முற்பட்டபோதிலும் அவர் மாணவர்களினால் தடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் உபவேந்தருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தி எழுதும் வரையில் மாணவர்களின் போராட்டம் நடந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |