இறுதியாக விமானத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். பிரான்ஸ் நாட்டு சட்டலைட் இந்த மாபெரும் சாதனையை புரிந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அவுஸ்திரேலியாவில் இருந்து சுமார் 1,500 மைல் தொலைவில் தான் இந்த மலேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 75 அடி நீளத்தில் 122 உடைந்த பாகங்கள் மிதப்பதாக பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப் பெருங்கடலில் பாரிய தேடுதல் நடைபெற்றது. சுமார் பிரித்தானியா நாடு எவ்வளவு அகலம் மற்றும் பருமன் இருக்குமோ அந்த அளவு பருமனில் தேடுதல் நடத்தப்பட்டது. இந்த பாரிய தேடுதலில் தான் தற்போது வீழ்ந்த மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விமானத்தின் துண்டுகளை பிரான்ஸ் சட்டலைட் படம் பிடித்து, அதனை மலேசியாவுக்கு அனுப்பியுள்ளது. அதனை மலேசிய அதிகாரிகளே உறுதிசெய்யவேண்டும் என்று பிரான்ஸ் நாடு தெரிவித்துள்ளது. இதேவேளை சட்டலைட் கண்டு பிடித்த இவ்விடத்தை நோக்கி பல நாடுகளின் கப்பல் படையினர் விரைந்துள்ளார்கள். ஆனால் பட்ட காலில் தான் படும் என்று சொல்லும் அளவுக்கு, இன்றைய தினம் அக் கடல் பகுதியில் பாரிய கொந்தளிப்பு காணப்படுகிறது. இதனால் பல மணித்தியாலங்களாக படையினர் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் மேலும் அறியப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்திற்கு இன்னும் சில மணி நேரங்களில் அவுஸ்திரேலிய கப்பல் படையினர் சென்றுவிடுவார்கள் என்று அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது. எனவே மேலதிக செய்திகள் வெளியாக உள்ளது.
பிந்திய செய்திகள் தற்போது கப்பல்கள் விமானங்கள் அந்த பகுதியை அண்மித்துள்ளன
மேலதிக செய்திகள் விரைவில்
0 Comments